அதற்கு மேற்பார்வையாளன் அவர்களிடம், “பரவாயில்லை, நீங்கள் ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம். உங்கள் தந்தையின் இறைவனான உங்கள் இறைவனே, உங்கள் சாக்குகளில் உங்களுக்கு ஒரு புதையலை வைத்திருக்கின்றார்; நீங்கள் செலுத்திய வெள்ளிப்பணத்தை நான் பெற்றுக்கொண்டேன்” என்றான். பின்பு சிமியோனை வெளியே அவர்களிடம் கொண்டுவந்தான்.