சில நாட்கள் சென்ற பின்னர், போத்திபாரின் மனைவி யோசேப்பின்மீது ஆசைகொண்டு, “என்னுடன் படுக்கைக்கு வா!” என அழைத்தாள்.
அவனோ அதை மறுத்தான். அவன் அவளிடம், “என் எஜமான் தன் வீட்டிலுள்ள எதைக் குறித்தும் அக்கறை கொள்ளாமல், தனக்குச் சொந்தமாக இருக்கும் அனைத்தையும் என்னுடைய பராமரிப்பில் ஒப்படைத்துள்ளார். இந்த வீட்டில் என்னைவிடப் பெரியவன் ஒருவனும் இல்லை. நீங்கள் அவருடைய மனைவி என்பதால் உங்களைத் தவிர, வேறொன்றையும் அவர் என் பாவனைக்கு உரியதல்ல என விலக்கி வைக்கவில்லை. அவ்வாறிருக்கையில், இவ்வாறான பெரும் தீமையை செய்து, இறைவனுக்கு விரோதமாகப் பாவம் செய்ய என்னால் எவ்வாறு முடியும்?” என்றான்.