வயல்வெளிகளிலுள்ள உங்கள் குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், மந்தைகள், செம்மறியாடுகள், வெள்ளாடுகள் ஆகிய அனைத்து கால்நடைகள்மீதும் கொடிய வாதையை கர்த்தருடைய கரம் கொண்டுவரும். இஸ்ரயேலருடைய கால்நடைகளுக்கும், எகிப்தியருடைய கால்நடைகளுக்கும் இடையில் கர்த்தர் வேறுபாடு உண்டாக்குவார். அதனால் இஸ்ரயேலரின் மிருகங்களில் ஒன்றேனும் இறக்காது’ என்று அவனுக்குச் சொல்” என்றார்.