யாத்திராகமம் 9:18-19
யாத்திராகமம் 9:18-19 TRV
ஆதலால் நாளை இதே நேரத்தில், எகிப்து நாடு உண்டானது முதல் இன்றுவரை அங்கே ஒருபோதும் பெய்திராத கடுமையான ஆலங்கட்டி மழையை அனுப்புவேன். ஆகையால், இப்பொழுதே உன் கால்நடைகளையும், வயல்வெளியிலிருக்கும் உனக்குச் சொந்தமான மற்றைய யாவற்றையும் ஒரு பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டுவரும்படி உத்தரவு கொடு. ஏனெனில் உள்ளே வராமல் வெளியிலிருக்கும் ஒவ்வொரு மனிதன்மீதும், மிருகம்மீதும் ஆலங்கட்டி மழை பெய்து, அவர்கள் இறந்து விடுவார்கள்’ என்று சொல்” என்றார்.

