யாத்திராகமம் 9:9-10

யாத்திராகமம் 9:9-10 TRV

அது எகிப்து நாடு முழுவதிலும் தூசியாகி, நாடெங்குமுள்ள மனிதர்கள்மீதும், மிருகங்கள்மீதும் எரிவுண்டாக்கும் கொப்புளங்களை உண்டாக்கும்” என்றார். அவ்வாறே அவர்கள் சூளையிலிருந்து சாம்பலை அள்ளிக்கொண்டு போய் பார்வோனுக்கு முன் நின்றார்கள். மோசே அதை ஆகாயத்தை நோக்கி வீசினான். உடனே மனிதர்மீதும் மிருகங்கள்மீதும் எரிவுண்டாக்கும் கொப்புளங்கள் உண்டாயின.