அதற்கு சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அரசனிடம், “ஓ நேபுகாத்நேச்சார் அரசரே! இதைப்பற்றி உம்மோடு வாதாடவேண்டிய அவசியமில்லை. அரசே, நாங்கள் பற்றியெரிகின்ற நெருப்புச்சூளையினுள் வீசப்பட்டால், நாங்கள் ஆராதிக்கின்ற இறைவன் அதிலிருந்து எங்களைக் விடுவிக்கக்கூடியவராக இருக்கின்றார். உமது கையிலிருந்தும் அவர் எங்களை விடுவிப்பார். அவ்வாறு விடுவிக்காமல் போனாலும், அரசே, நாங்கள் உமது தெய்வங்களுக்கு பணி செய்யவோ, நீர் நிறுத்திய தங்க சிலையை வணங்கவோ மாட்டோம். இதை நீர் அறிய வேண்டுமென நாங்கள் விரும்புகின்றோம்” என்றார்கள்.