அதற்குத் தானியேல் அரசனிடம் இவ்விதமாய் பதிலளித்தான், “அரசர் வெளிப்படுத்தும்படி கேட்டிருக்கும் இந்த மறைபொருளை அரசருக்கு விளக்கிக் கூற எந்த ஞானியாலோ, மந்திரவாதியாலோ, சோதிடர்களாலோ, குறிசொல்கின்றவர்களாலோ முடியாது. ஆனால் அரசே, மறைபொருட்களை வெளிப்படுத்துகின்ற இறைவன் பரலோகத்தில் இருக்கின்றார். வரப்போகும் நாட்களில் நிகழப்போவதை அவரே நேபுகாத்நேச்சார் அரசருக்கு வெளிப்படுத்துகின்றார். அரசர் படுக்கையில் படுத்திருந்தபோது கண்ட கனவும், உமது சிந்தனையை கடந்து சென்ற தரிசனங்களும் இவையே