திட்ட விவரம்

தேடல்மாதிரி

The Quest

7 ல் 7 நாள்

முதல் நான்கு கேள்விகளான, நீ எங்கே இருக்கிறாய்? அதை உனக்குயார் சொன்னார்கள்? நீஎன்ன தேடுகிறாய்? ஏன் நீ பயப்படுகிறாய்? என்ற கேள்விகளில் தேவன், தம்மோடு உள்ள உறவின் மூலமாக மனிதன் தன்னைத்தான் கண்டறிந்து கொள்ளும் படிக்கு விளக்கைப் பிடித்திருக்கிறார். இதற்கு முற்றிலும் எதிர்மறையாக, எவ்வளவு நிச்சயம்? என்ற கேள்வி உண்மை அறிந்துகொள்பவரின் பார்வையைத் தன்னைக் குறித்ததான இருண்ட ஆழத்திலிருந்து வானத்தில் சூரியோதயம் வண்ணம் தெளிக்கும் இடமான அடிவானத்திற்கு எடுத்துச் செல்கிறது.



"ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள், உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது, பரம பிதாவானவர் … அதிக நிச்சயமல்லவா?" லூக்கா 11:13



கேள்வியின் தொனி மூலமாகவே கிறிஸ்து பதிலையும் கொடுக்கிறார்: எவ்வளவு நிச்சயம்?



மிக அதிக நிச்சயமாக.



அந்த இரண்டு வார்த்தை கேள்வியும் பதிலும் நிரம்பி வழியும் நம்பிக்கையை எப்பொழுதும் கட்டவிழ்த்து விடுகிறதாயிருக்கிறது. 



கிறிஸ்துவுடைய போதனையின் இந்த பகுதியில் லூக்காவின் வார்த்தைப் பிரயோகம் மற்றும் மத்தேயுவின் வார்த்தைப் பிரயோகங்களுக்கு இடையேயான ஒப்புமை வியக்கத் தக்கதாயிருக்கிறது. மத்தேயு 7:7-11 வசனங்களை வாசியுங்கள். உங்களுக்கு என்ன தோன்றுகிறது?



அப்போஸ்தல நடபடி புத்தகத்தின் முடிவு வார்த்தைகளுக்கு வரும் போது, லூக்கா பரிசுத்த ஆவியை ஐம்பத்தைந்து தடவைகளுக்கு மேலாக குறி்பிட்டு விட்டார். அப்போஸ்தலர் 10:45 எப்படி குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெறுகிறது?



எல்லாவற்றையும் லூக்கா பார்த்து, கேட்டு, அனுபவித்தறிந்த பின்பு, தேவனுடைய ஏவுதலின்கீழ் எழுதப் பட்ட அவருடைய சுவிசேஷம் இவ்வாறு சொல்வதில் ஆச்சரியமொன்றும் இல்லை, “பரலோகப் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்பவர்களுக்கு பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயமல்லவா?” (லூக்கா 11:13). எல்லா விதத்திலும் அவருடைய பிரதிபலிப்பாயிருப்பதால் பூமியில் ஒரு பரிசும் பரிசுத்த ஆவியைப் போல் இல்லை என்பது அவருக்குத் தெரியும். அறிவியல் விதிமுறைகளில் முறையான கல்வி பெற்று தனது வாழ்க்கைத் தொழிலை செய்துவந்த ஒரு வைத்தியர், பரிசுத்தஆவி வியாக்கியானம் மற்றும் இயற்கை விதிமுறைகளுக்கு சவாலாய் இருப்பதை பின்னால் நின்று கவனித்துக கொண்டிருப்பதை கற்பனை செய்து பாருங்கள். லூக்கா எளிதில் ஏமாறக் கூடிய முட்டாளல்ல. காரணங்களைக் கண்டறிந்து கொள்ளும்படிக்கு அதன் விளைவுகளைப் பரிசோதிப்பதில் அவர் திறன் பட்டவர். பரிசுத்த ஆவியின் எண்ணுக்கடங்காத வெளிப்படுத்துதல்களை வார்த்தையின் மூலமாக, சுகமளித்தல் மூலமாக மற்றும் செயல்கள் மூலமாக பார்த்திருந்தார், மேலும் அதே பரிசுத்த ஆவியினால் செய்யப் பட்ட அற்புதங்களைக் குறித்த நிரந்தர பதிவுகளை எழுதி வைக்கும் படியாக தேவனால் நியமிக்கப் பட்டிருந்தார். 



தேவன் ஒரு கொடையாளி என்பதை நினைவில் கொள்ளுங்கள். ரோமர் 8:32 லுள்ள கவனத்தை ஈர்க்கக் கூடிய வார்த்தைகள் இவ்விதமாகச் சொல்லுகிறது, “தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?” (ESV). தேவன் அருளின உலகப்பிரகாரமான நன்மைகளுக்காக நம்முடைய குரல் கட்டும் வரை நாம் சாட்சி கூறலாம், ஆனால் மிக உயரிய பரிசான கிறிஸ்துவின் சொந்த ஆவியுடன் ஒப்பிடும் போது அவைகளின் ஒட்டு மொத்தமும் மதிப்பில்லாமல் போய் விடுகிறது. இந்த ஒரு பரிசில், அவருடைய ஆறுதல், அவருடைய மகிழ்ச்சி, அவருடைய சந்திப்புகள், அவருடைய அதிகாரங்கள், அவருடைய வழிநடத்துதல்கள், அவருடைய நேசங்கள் என்பன போன்ற முடிவில்லாத மற்ற பரிசுகளைப் திறக்கும்படியான ஒரு வாழ்க்கையை கழிக்கிறோம்.


நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

The Quest

இந்த 7- நாள் வாசிப்பு திட்டத்தின் மூலம், பெத் மோர் என்பவர் வேதத்தின் கேள்விகள் வாயிலாக நம்மை நன்கு அறிந்த நமது ஆண்டவரிடம் நெருங்க செய்வார். ஒரு வாக்கியத்தின் முடிவில் வளைந்த கேள்விக் குறியீடு ஆர்வம் மற்றும் சந்தேகத்தைக் ...

More

இந்த திட்டத்தை வழங்கிய பெத் மூர் மற்றும் லைஃப்வே பெண்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க:http://www.lifeway.com/thequest

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்