திட்ட விவரம்

தேடல்மாதிரி

The Quest

7 ல் 4 நாள்

கடவுள் யாரென்றும், அவர் ஒளியில் நீங்கள் எப்படிப்பட்டவர் என்றும் நம்பிக்கையில் உயர்வது அன்யோன்யத்தின் அடிப்படை மட்டுமல்ல, அது ஜெயங்கொள்ளுதலின் அடிப்படை. மறுபடியும் உபாகமம் 33:29 ஐ படித்தால் அதில் ஜெயம் மற்றும் அடையாளத்தின் நூலிழைகள் அழுத்தமாக ஒன்றினைக்கப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம். அவர்களுடைய கேடகமும் பட்டையமுமாய் இருக்கிற தேவனாகிய அவரால் மாத்திரமே அவர்களுடைய சத்துருக்களின் மேடுகளை மிதிக்கிறார்கள்.



அதேபோல் எபேசியர் 6:10-17 இல் புதிய ஏற்பாட்டு விசுவாசிகளும் இருப்பது மிகவும் அழகானது.



இவற்றை இஙகே ஒன்றாக இணைத்திடுங்கள்:



போர்களில் கர்த்தருடைய பிள்ளைகளின் ஒவ்வொரு தோல்விகளும் இந்த இரண்டு காரணங்களில் ஒன்றோடு தொடர்புடையதாக இருக்கிறது:



1) எது நாம் இன்னும் கற்றுக்கொள்ளாதது அல்லது 2) எப்படி நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பது. நம் விசுவாசத்தை பொறுத்தே நமது வெற்றியும் தோல்வியும் அமைகிறது. அவ்வாறே தேவனுடன் நமது அன்யோன்யத்தின் ஆழமும் அமைகிறது.



நாம் பாவத்தை தேர்வுசெய்யும் ஒவ்வொரு தருணத்திலும்: தருவது உலகம் எடுப்பது இறைவன் எனும் பொய்யில் தான் செயல்படுகிறோம். வேதாகமமே கர்த்தரைக்குறித்த, நம்மைக்குறித்த, நம் இறந்ககாலம், எதிர்காலம், மற்றவர்களைப்பற்றிய, நம் எதிரிகளைப்பற்றிய, இம்மை மற்றும் மறுமையின் உலகைப்பற்றிய உண்மையான, திடமான ஊன்றுகோல். கர்த்தருடைய பிள்ளையாக சத்தியத்தில் நடக்கவும், சர்ப்பத்தால் மின்னும் ஒளியுடன் பின்னப்பட்ட பொய்களை கண்டுகொள்ளவும் இந்த கேள்விகளை கொண்டு உங்கள் விசுவாசத்தை சோதித்திடுங்கள்: யார் அதை சொன்னது? ஆயர்கள், மேய்ப்பர்கள், மற்றும் ஆசிரியர்கள் நமக்கு கொடுக்கப்பட்ட ஈவு, அவர்களின் வழிகாட்டுதலின் கீழே நாம் விருத்தியடைய வேண்டும். இருப்பினும், அவர்கள் சொல்வது எந்த அளவில் கடவுள் சொல்வதுடன் ஒத்தாகிறதோ அந்த அளவே அவர்கள் நம்பகத்தன்மை இருக்கவேண்டும். 



நமது அடையாளத்தை நாம் மெய்யாகவே ஆயர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து மட்டும் கற்றுக்கொள்வதில்லை.



நம் அடையாளம் நம் பெற்றோர், உடன்பிறந்தவர்கள், நண்பர்கள், குருக்கள், சட்ட பாதுகாப்பாளர்கள், பள்ளிகள், அனுபவங்கள், சுற்றுச்சூழல், மற்றும் பயங்களின் மூலமும் வடிவமைக்கப்படுகிறது. இதை விவரிக்க ஒரு எடுத்துக்காட்டான நேர்கானல்:



உங்களைக்குறித்த சில விஷயங்களை எனக்கு கூறுங்கள். அது, நான் ஒரு முட்டாள். நான் மிகவும் கெட்ட அதிர்ஷ்டம் கொண்டவன். நான் காரியங்களில் சிதறுவேன். பண விஷயங்களில் மோசம். வீட்டை சார்ந்தவன். நேசிக்க தகுதியற்றவன். பொது சிந்தனை எனக்கு இல்லை. தோல்வியுற்றவன்



உங்களுக்கு இதை சொன்னது யார்? என் தாய்



அல்லது அது உங்கள் முன்னாள் வாழ்க்தைத்துணையா? உங்கள் உடன் மாணவர்களா? உங்களுடைய சுகவீணமா? அல்லது சுய பேச்சா?



சத்தியத்தில் ஆரோக்கியமான ஊனுடன் நடக்க, ஒவ்வொரு "உங்களுக்கு இதை சொன்னது யார்?" என்பது வேதத்தின் மூலமாக கர்த்தரிடம் சென்று சொதிக்கப்படவேண்டும், அவ்வாறு அது ஒத்துபோகவில்லை எனில், தூக்கி எறியப்படவேண்டும். ஆதாமும் ஏவாளும் ஒரு பொய்யால் விழுந்து அதோடு மனிதத்தோடு புழுதியில் விழுந்தனர். பொய்யான அடையாளத்திற்காகவே அவர்களுடைய தோல்வி வேகமாகவும் மோசமாகவும் வந்தது. மாய்மாலம் என்றுமே திருடன் போன்றது.


நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

The Quest

இந்த 7- நாள் வாசிப்பு திட்டத்தின் மூலம், பெத் மோர் என்பவர் வேதத்தின் கேள்விகள் வாயிலாக நம்மை நன்கு அறிந்த நமது ஆண்டவரிடம் நெருங்க செய்வார். ஒரு வாக்கியத்தின் முடிவில் வளைந்த கேள்விக் குறியீடு ஆர்வம் மற்றும் சந்தேகத்தைக் ...

More

இந்த திட்டத்தை வழங்கிய பெத் மூர் மற்றும் லைஃப்வே பெண்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க:http://www.lifeway.com/thequest

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்