திட்ட விவரம்

தேடல்மாதிரி

The Quest

7 ல் 5 நாள்

மறுமதிப்பீடு செய்யும் ஐந்து கேள்விகளில் 1) நீ எங்கே இருக்கிறாய்? மற்றும் 2) உனக்கு அதை யார் சொன்னார்கள்? என்னும் இரண்டு கேள்விகளை நாம் பார்த்திருக்கிறோம். நம்முடைய மூன்றாவது கேள்வி என்னவென்றால்,।யோவான்1:38 இல் இயேசு கேட்ட “நீ என்ன தேடுகிறாய்?” என்ற கேள்வியாகும். இந்தக் கேள்விக்கு அவருக்கு இதுதான் பிடிக்கும் என்று நாம் நினைப்பதைப் பதிலாகச் சொல்லுவோமானால் அவர் சந்தோஷப்பட மாட்டார். நம்முடைய நேர்மையைக் கையாள்வதில் முற்றிலும் வல்லவர் இயேசு. "நீ என்ன தேடுகிறாய்?" என்ற கேள்விக்கு உண்மையான பதில் "பிரச்சனை", அல்லது பணம், அல்லது பாதுகாப்பு, அல்லது பாலியல் சம்பந்தப் பட்டக் காரியங்கள், அல்லது பொருள் என்பது அவருக்குத் தெரியும். சிலசமயங்களில் மிகவும் வல்லமையான சாட்சியாக இருக்கக் கூடியது என்னவெனில்,"நான் தேடிக் கொண்டிருந்தது ___________________ஆனால் இயேசுவைக் கண்டு கொண்டேன்.” என்பதே.



யோவான் 4 ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள சமாரிய ஸ்திரீ கிணற்றிற்கு இயேசுவைத் தேடி வரவில்லை. அவள் தண்ணீரைத் தேடி வந்தாள், ஆகையால் அவர் ஜீவத் தண்ணீரைஅவளுக்கு அறிமுகப் படுத்தினார். தவறான பொருளைத் தேடியதற்காக அவள் சும்மா விட்டுவிடப் படவில்லை. இயேசு அவளுடைய தேடுதலை அவள் இருதயத்தின் ஆழத்தில் எதைக் குறித்து மிகவும் தாகமாயிருக்கிறாள் என்று தாம் அறிந்திருந்தாரோ அதற்குள்ளாக வழி நடத்தப் பயன்படுத்தினார். மதியீனத்தை நீக்கி, அவளுடைய பாவங்களை மன்னித்து, அவளுக்கு கௌரவத்தைக் கொடுக்க வல்ல ஒரு இரட்சகர், அவள் வாழ்க்கைக் கதையின் உண்மையான நிலைமையை அறிந்த, அவளைக் குறித்ததான வீண் புரளிகளில் சிந்தை வையாத மேசியா _இதுவே அவள் இருதயத்தின் தாகமாயாயிருந்தது.



இது போலவே, சவுலும் தமஸ்குவுக்குப் போகும் வழியில் இயேசுவே தான் தேடும் கடைசி பொருள் என்று நினைத்தான். அவன் இயேசுவுக்குத் தீங்கு செய்யவில்லை. இயேசுவைப் பின்பற்றுகிறவர்களுக்குத் தீங்கு செய்தான். பாருங்கள், தாங்கள் கேட்டதை விட பெற்றுக்கொண்டது வேறாக இருப்பினும் கேட்கிறவர்கள் யாவரும் பெற்றுக் கொள்கிறார்கள். தாங்கள் தேடுகிறதைப் பார்க்கிலும் கண்டு பிடிக்கிறது வேறாயிருப்பினும் தேடுகிறவர்கள் யாவரும் கண்டடைகிறார்கள். எதிர்பாராத விருந்தளிக்கும் ஒருவர் கதவை மூடி வைத்திருந்தாலும் கூட தட்டுகிறவர்களுக்குக் கதவுகள் திறக்கின்றன. அவர் நம்முடைய உலகப் பிரகாரமான விருப்பங்களைப் பார்க்கிறார், மேலும் நாம் அந்த முடிவு எல்லையைத் தாண்டும் போது எது நமக்கு மிகவும் தேவைப் படும் என்பதையும் முன்ன்றிந்திருக்கிறார். நம்முடைய தேடுதலில் மிகப்பெரிய பங்குகள் பற்றிய கருத்தினை ஏசாயா 46:10 விளக்குகிறது: தேவன் அந்தத்திலுள்ளவைகளை ஆதி முதற்கொண்டு அறிந்திருக்கிறார். அந்த ஏழு வார்த்தைகளும் இந்த ஒலிம்பிக் பந்தயத்தையே மாற்றியமைக்கக் கூடியன. அவைகள் தேடுபவரின் முக்கியத்துவத்தை வலியுலுறுத்துகின்றன.



என்ன விருப்பங்கள் உங்களுக்குள் மிக ஆழமாக எழுகிறது? உங்களுடைய ஏக்கங்கள் என்ன? அவைகளில் எவை நிறைவேறாமலே போயின? நீங்கள் ஏங்குகிற எல்லாக் காரியங்கள், உங்களின் தீரா ஆவல்கள் இவற்றை தேவனுக்கு எழுதி அவரிடம் சொல்லுங்கள். என்ன விருப்பங்கள் உங்களை உந்தித் தள்ளுகின்றன என அவரிடம் சொல்லுங்கள். தேவன்தாமே தம் சொந்தக் கைகளினால் அந்த விருப்பங்களில் சிலவற்றை உங்கள் இருதயத்தில் உருவாக்கியிருக்கிறதை நீங்கள் மிக விரைவில் புரிந்து கொள்வீர்கள்.



நீங்கள் முடிக்கும் போது சங்கீதம் 38:9 இலுள்ள வார்த்தைகளை சத்தமாக இயேசுவிடம் வாசியுங்கள். அவைகளைத் தியானம் செய்யுங்கள். அவைகளை மனப்பாடம் செய்யுங்கள். நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடருகையில் இந்த சத்தியமே நீங்கள் இளைப்பாறும் கூடாரமாயிருக்கட்டும்.


நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

The Quest

இந்த 7- நாள் வாசிப்பு திட்டத்தின் மூலம், பெத் மோர் என்பவர் வேதத்தின் கேள்விகள் வாயிலாக நம்மை நன்கு அறிந்த நமது ஆண்டவரிடம் நெருங்க செய்வார். ஒரு வாக்கியத்தின் முடிவில் வளைந்த கேள்விக் குறியீடு ஆர்வம் மற்றும் சந்தேகத்தைக் ...

More

இந்த திட்டத்தை வழங்கிய பெத் மூர் மற்றும் லைஃப்வே பெண்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க:http://www.lifeway.com/thequest

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்