திட்ட விவரம்

பிள்ளை வளர்ப்பு பற்றி வேதாகமம் சொல்லும் 7 காரியங்கள்மாதிரி

7 Things The Bible Says About Parenting

7 ல் 2 நாள்


2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் எங்கள் முதல் குழந்தையை எதிர்பார்த்திருந்தோம். என் தந்தையோடு இரவு உணவருந்தி கொண்டிருந்தேன். அப்போது அவரிடம் அவர்களின் பிள்ளை வளர்ப்பு அனுபவத்தில் இருந்து அவர்கள் தரும் சிறந்த அறிவுரை என்னவாக இருக்கும் என்று கேட்டேன்.


சற்று யோசித்தப் பின்னர் அவர் எனக்கு கூறிய உதாரணத்தை என்னால் என்றும் மறக்க முடியாது. அவர் சொன்னார்: பிள்ளை வளர்ப்பு என்பது ஒரு தராசு போல. ஒரு தட்டில் அன்பும் மற்றொரு தட்டில் கண்டிப்பும் சமமாக இருக்க வேண்டும். பிள்ளை வளர்ப்பில் இவைகளில் ஒன்றைக் காட்டிலும் மற்றொன்று அதிகமாகவோ அடிக்கடியோ கையாளுவது பிள்ளைக்கு நல்லதல்ல.


மேலும் அவர் எனக்கு விளக்கி கூறியது என்னவென்றால்: நாம் நமது பிள்ளைகள் மீது எவ்வளவு அன்பு காட்டுகிறோமோ, அந்த அளவிற்கு அவர்கள் நம் கண்டிப்பையும் ஏற்றுக்கொள்வார்கள். நாம் கண்டிப்போடு நடந்து கொள்ளும் போது அதில் மறைந்திருக்கும் அன்பையும் அவர்கள் புரிந்து கொள்ளுமாறு நாம் நடந்து கொள்ள வேண்டும். கண்டிப்பு இல்லாமல் அன்பை மட்டுமே அளவுகடந்து காட்டுவது பிள்ளைகளின் வாழ்க்கையை கெடுத்து விடும். அன்பு காட்டாமல் கண்டிப்பை மட்டுமே அளவுகடந்து காட்டுவதும் அவர்கள் மனதில் நம் மீது வெறுப்பை உண்டாக்கி விடும். அது அவர்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி அவர்கள் நம்மை விட்டு செல்லவும் வாய்ப்பை உருவாக்கி விடும்.


அன்றிரவு முதல் அன்பையும் கண்டிப்பையும் சரியான அளவில் கொண்டு செல்வதை குறித்து அடிக்கடி யோசிக்கிறேன். பிள்ளைகளை கண்டிப்பாக நடத்துவது ஒரு பெற்றோராக நம் அனைவருக்கும் கடினமே. கண்டிப்பாக நடந்து கொள்வது நமக்கு மகிழ்ச்சியை தரவில்லை என்றாலும் அது அவசியமே. எனவே நீங்களும் தேவ ஒத்தாசையோடு பிள்ளை வளர்ப்பில் அன்பையும் கண்டிப்பையும் சரியான அளவுகளில் ஒருங்கிணைத்து கொண்டு செல்ல உங்கள் அனைவரையும் உற்சாகப்படுத்துகிறேன்.


நம் பரம பிதா தாம் நேசிக்கிறவர்களை கடிந்துகொண்டு சிட்சிப்பது போலவே நாமும் நடந்து கொள்வது அவசியமாக இருக்கிறது. இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் தகப்பனாக இருக்கிறார். நாம் அவரின் குடும்பத்தில் இணைக்கப்பட்டு இருக்கிறோம்.


பெரட் பெல்யூ
YouVersion பொறியாளர்


வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

7 Things The Bible Says About Parenting

பிள்ளைகளை வளர்ப்பது என்பது எளிய காரியம் அல்ல. சிறந்த சூழலிலும் அது எளியது அல்லவே. இந்த 7 நாள் தியானத்தில், பெற்றோர்களாய் இருக்கும் எமது YouVersion ஊழியர்கள் சிலர், தங்கள் வாழ்வின் இப்பகுதியில் வேதாகம கொள்கைகளை கடைபிடித்த...

More

இந்த திட்டத்தை வழங்கிய YouVersion குழுவிற்கு நன்றி. மேலும் விபரங்களுக்கு, அணுகவும்: http://www.bible.com/reading-plans

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்