திட்ட விவரம்

ஆறு நாட்களிள் கர்த்தரின் பெயர்கள்மாதிரி

Six Days Of The Names Of God

6 ல் 6 நாள்

நாள் 6: எல் சிம்சத் கிலி - கர்த்தர் என் அதீத மகிழ்ச்சி


நீங்கள் முதல் முறையாக ஏதோ ஒன்றில் தேர்ச்சி பெறும்போது நீங்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சியைப் பற்றி சிந்தியுங்கள். இறுதியாக வேறொரு நாட்டில் உள்ள தாய்மொழியை பேசுபவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும்வகையில் ஒருவேளை நீங்கள் ஒரு வேற்று மொழியை நன்றாகக் கற்றுக்கொண்டிருக்கலாம். அல்லது நீங்கள் ஒரு மைலுக்கு பிறகு ஒரு மைலாக கடந்து சென்று இறுதியாக ஒரு மராத்தானின் இறுதிக் கோட்டைக் கடந்திருக்கலாம். உங்கள் கல்லூரிப் பட்டத்தை பெற நீங்கள் பல வருடங்களாக முயற்சி செய்து, இறுதியில் உங்கள் பட்டத்தை பெற்றுக்கொள்ள மேடையில் நீங்கள் ஏறி இருக்கலாம். நீங்கள் அபரிமிதமான உணர்ச்சிகளை உணர்கிறீர்கள், ஆனால் மகிழ்ச்சி எப்போதும் முன்னணியில் இருக்கும்.


எல்லா நல்ல விஷயங்களும் கடவுளிடமிருந்து வருகின்றன, மேலும் அவர் எல்லா நல்ல விஷயங்களிலும் மகிழ்ச்சியடைகிறார். மகிழ்ச்சியின் ஒரே மற்றும் உண்மையான ஆதாரம் அவரே, நாம் அவர் மீது நம்பிக்கை வைக்கும்போது, நம்முடைய எல்லா சூழ்நிலைகளிலும் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும். கர்த்தரில் நம்பிக்கை இருந்தால் போராட்டத்தின் மத்தியிலும் நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும்


தேவனுக்கு வெளியே மகிழ்ச்சியைத் தேடுவதுதான் நாம் அடிக்கடி செய்யும் தவறு. நம்மைப் பற்றிய பிறரது கருத்து அல்லது நாம் சம்பாதிக்கும் சம்பளம் அல்லது நமது சமூக நிலை ஆகியவற்றின் அடிப்படையில் நம்மை மதிப்பிடும்போது, உண்மையான மகிழ்ச்சியை இழக்கிறோம். பயணத்தின் மகிழ்ச்சி, கண்டுபிடிப்பின் மகிழ்ச்சி, கடவுளுக்கு திறந்திருக்கும் இதயத்தின் மகிழ்ச்சி ஆகியவற்றை நாம் இழக்கிறோம். மேலும் தேவனின் மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அபாரமான வாய்ப்பையும் இழக்கிறோம். ஆனால் தேவனிடமிருந்து வரும் மகிழ்ச்சியால் நாம் நிரப்பப்படும்போது, ​​நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துகிறோம், உண்மையான மகிழ்ச்சியை அறிகிறோம்.


இந்த தியானம் அர்த்தமுள்ளதாக நீங்கள் கண்டால், யெகோவா யீரே என்ற பெயரில் ஒரு பிரசங்கப் பதிவிறக்கத்தை பரிசாக வழங்க விரும்புகிறோம். உங்கள் டோனி எவன்ஸின் முழு பிரசங்கத்தையும் இங்கே கோருங்கள்


கர்த்தர்
நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

Six Days Of The Names Of God

தேவனின் பல நாமங்களில் இருந்து, அவருடைய குணாதிசயங்கள் மற்றும் அவரது இயல்புகளின் அம்சங்களை அவர் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவிக்குப்புறமே, தேவனின் 80 க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாமங்களை...

More

இந்த திட்டத்தை வழங்கியதிற்கு தி அர்பன் ஆல்டர்நேட்டிவ் மற்றும் டோனி எவன்ஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, https://tonyevans.org/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்