திட்ட விவரம்

ஆறு நாட்களிள் கர்த்தரின் பெயர்கள்மாதிரி

Six Days Of The Names Of God

6 ல் 5 நாள்

நாள் 5: ஏலோஹே சாதேகி - என் நீதியின் கர்த்தர்


நாம் எப்போதும் அடுத்த பெரிய விஷயத்தை தேடுகிறோம். ஒழுங்குபடுத்தப் பட்டவர்களாக மாறுவதற்கான ரகசியம். வடிவம் பெறுவதற்கான திறவுகோல். நிதி ஸ்திரத்தன்மைக்கான உறுதியான திட்டம். நாம் புத்தகங்களைப் படிக்கிறோம், பாட்காஸ்ட்களைக் கேட்கிறோம் மற்றும் கருத்தரங்குகளுக்குப் பதிவு செய்கிறோம். ஒழுங்கமைப்பு, உடலுறுதி மற்றும் நிதிப் பாதுகாப்பு அனைத்தும் போற்றத்தக்க குறிக்கோள்கள்தான் என்றாலும், அடுத்த பெரிய விஷயத்தைத் தேடும் போது அதன் சாரத்தை நாம் இழந்துவிடவில்லை என்பதை உறுதி செய்வது அவசியமாயிருக்கிறது.


வாழ்க்கையின் முக்கிய அம்சம், தேவனைப் பின்பற்றுவது, அவரைப் போல ஆகி, அவருக்காக நம் வாழ்க்கையை வாழ்வது. மேலும் தேவனைப் போல் மாறுவது என்பது நற்குணத்திலும் நீதியிலும் வளர்ச்சி அடைவதாகும். தேவனிடமிருந்து கருணை, கிருபை, வல்லமை மற்றும் பலம் அனைத்து குணங்களும் ஒழுகுகிறது-நம் வாழ்விலும் நம் உலகிலும் நமக்குத் தேவையானவை இவை. அபரிமிதமான மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு நமக்குத் தேவையான அனைத்தையும் தேவன் அவருடைய வார்த்தை மற்றும் ஆவியின் மூலம் கொடுக்கிறார். நம்முடைய விருப்பங்களை விட அவருடைய விருப்பங்களைத் தேர்ந்தெடுத்து, அவரைப் போல் ஆக முயற்சி செய்யும்போது, அவர் நம்மை வழிகாட்டி நடத்துகிறார்.


தேவனின் திட்டத்தைப் பின்பற்றுவது என்பது, உடலுறுதியைப் பெற ஆறு எளிய வழிமுறைகள் அல்லது உங்கள் வீட்டிலுள்ள ஒழுங்கீனத்தைக் குறைக்க பத்து வழிகளைக் கடைப்பிடிப்பதை விட சவாலானதாக இருக்கலாம். ஆனால் இது மிகவும் பலனளிக்கிறது. நாம் தேவனிடம் திரும்பி நம் வாழ்க்கையை அவரிடம் ஒப்படைக்கும்போது, ​​அவர் நம்மை மன்னித்து தனது இரக்கத்தை நமக்கு வழங்குகிறார். அவர் நம்முடைய உடைந்த உறவுகளைச் சரிசெய்ய உதவுகிறார், மேலும் நம் இருதயங்களை நீதி, கருணை மற்றும் சமாதானத்தால் நிரப்புகிறார். நல்ல பலன் தேவனைப் பின்பற்றுவதன் மூலமும், நம் அடிகளை அவருடைய நீதியினால் வழிநடத்த அனுமதிப்பதிலிருந்தும் வருகிறது.


நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

Six Days Of The Names Of God

தேவனின் பல நாமங்களில் இருந்து, அவருடைய குணாதிசயங்கள் மற்றும் அவரது இயல்புகளின் அம்சங்களை அவர் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவிக்குப்புறமே, தேவனின் 80 க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாமங்களை...

More

இந்த திட்டத்தை வழங்கியதிற்கு தி அர்பன் ஆல்டர்நேட்டிவ் மற்றும் டோனி எவன்ஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, https://tonyevans.org/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்