திட்ட விவரம்

ஆறு நாட்களிள் கர்த்தரின் பெயர்கள்மாதிரி

Six Days Of The Names Of God

6 ல் 2 நாள்

நாள் 2: ஏலோஹி சாசெத்தி – இரக்கமுள்ள கர்த்தர்


வாழ்க்கை எப்போதும் இரண்டாவது வாய்ப்புகளுக்கு உத்தரவாதம் அளிப்பதில்லை. நண்பரிடம் பேசும் கடுமையான வார்த்தைகள், வேலையில் செய்யும் தவறுகள், ஆரோக்கியமற்ற வாழ்க்கைத் தேர்வுகள் போன்ற நம்முடைய மோசமான முடிவுகளுக்கு விலை கொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் உண்டு. நட்பை இழக்கிறோம். நாம் வேலையிலிருந்து நீக்கப்படுகிறோம். நமது உடல்நலம் பாதிக்கப்படுகிறது. நம் மனம் மாறினாலும், இவையெல்லாம் சரியாகிவிடும் என்பதில் எந்த உறுதியும் இல்லை.


இருப்பினும், தேவனின் இரக்கம், இரண்டாவது வாய்ப்புக்குப் பிறகும் இரண்டாவது வாய்ப்பை நமக்கு வழங்குகிறது. ஏலோஹி சாசெத்தி—இரக்கமுள்ள கர்த்தர் - மன்னிப்பைப் பொழிகிறார், அன்பினால் நம்மை நீராட்டுகிறார். அவர் எப்போதும் உண்மையுள்ளவர். எப்போதும் இரக்கமுள்ளவர். எப்பொழுதும் கருணையுள்ளவர். நாம் அவரை நேசித்து, அவரிடம் மன்னிப்பு கேட்டால், அவர் அதை வழங்குகிறார், எப்போதும்.


அவர் இரக்கமுள்ள கர்த்தர் என்பதால், நாம் பயப்படாமல் வாழ முடியும். அவர் இலவசமாக மிகுதியாகக் கொடுக்கும் மன அமைதிக்கும் இருதயத்திற்கும் எப்போதும் நமக்கு நுழைவுரிமை உள்ளது. அவர் எப்பொழுதும் நம்மோடு கூட இருந்து ஒவ்வொரு சிக்கலான சூழ்நிலையிலும், ஒவ்வொரு கடினமான காலத்திலூடே நம்மைக் கொண்டு வருவார் என்று அவர் உறுதியளிக்கிறார். தவறுகள் நம் சொந்த செயலாக இருந்தாலும் கூட மனந்திரும்பும் இருதயத்திற்கு மன்னிப்பு வழங்க அவர் எப்போதும் தயாராக இருக்கிறார்.


நேற்றைப் பற்றி கவலைப்படுவதற்குப் பதிலாக, இன்றில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். இன்று நாம் அவருக்கு எவ்வாறு சேவை செய்யலாம்? இன்று நாம் நிறைவேற்றுவதற்கு அவர் என்ன திட்டங்களை வைத்திருக்கிறார்? இன்று நாம் அவரை எப்படி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்? அதுதான் கருணையின் அழகு- அவர் நமக்காக வைத்திருக்கும் எதிர்காலத்தை மையமாகக் கொண்ட இரண்டாம் வாய்ப்புகள், எதிர்பார்ப்பு.


நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Six Days Of The Names Of God

தேவனின் பல நாமங்களில் இருந்து, அவருடைய குணாதிசயங்கள் மற்றும் அவரது இயல்புகளின் அம்சங்களை அவர் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவிக்குப்புறமே, தேவனின் 80 க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாமங்களை...

More

இந்த திட்டத்தை வழங்கியதிற்கு தி அர்பன் ஆல்டர்நேட்டிவ் மற்றும் டோனி எவன்ஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, https://tonyevans.org/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்