அட்வெந்து (இரண்டாம் வருகை): கிறிஸ்து வருகிறார்!மாதிரி

Advent: Christ Is Coming!

91 ல் 1 நாள்

கிறிஸ்துவின் இரண்டாம்வருகையை எதிர்பார்க்கும் வண்ணமாக, உலகெங்கும் நான்கு வார காலத்திற்கு கொண்டாப்படுகிறது. முன்குறிக்கப்பட்ட மேசியாவாகிய நம் இரட்சகரை நாம் சந்திக்க நம் இதயங்களை ஆயத்தப்படுத்தும் காலமிது. இயேசு தன் கன்னி தாய்க்கு பிறந்தது முதல், அவரது வாழ்வு, மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை நாம் நினவுகூர்ந்து, நம் பிள்ளைகளுக்கும் கற்பிக்கும் நேரமிது. இந்த நான்கு வார காலத்தில் இது வரை நாம் என்ன செய்தோம் என்று சிந்திக்கும் அதே வேளையில், ஆண்டவர் அடுத்து மகிமையாய் தோன்றும்வரை, நாம் புது வருடத்திற்குள் தயாராகவும், ஒரு எதிர்பார்ப்புடனும் உந்தி செல்வோம்!

மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள்

நாங்கள் மேசியாவுக்காக காத்திருக்கிறோம்!
இரண்டாம்வருகையைக் குறித்து உங்கள் குடும்பங்களுக்கு விளக்கி , தினமும் இந்த நேரத்திற்காக திட்டமிடுங்கள். ஒரு பெரிய மெழுகுவர்த்தியை எடுத்து அதில் 25 குறிகளை கீறி, 1-25 வரையிலான எண்களை நிரந்திர மை பேனாவினால் அந்த குறிகளுக்கு அருகில் எழுதுங்கள். ஒவ்வொரு மாலையும் நீங்கள் தனியாகவோ அல்லது குடும்பமாகவோ ஆண்டவருடைய வார்த்தையை திறக்கும்போது மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள், ஒவ்வொரு இரவும் ஒரு குறி மறையும் வரை அந்த மெழுகுவர்த்தி எரியட்டும்.

வேதத்தை வாசியுங்கள்

சிருஷ்டிக்கும் மனுஷனுக்குமான ஆண்டவரின் உடன்படிக்கை
ஆதியாகமம் 1:27-28 மற்றும் எரேமியா 33:19-22

ஆராதனையில் மறுமொழி கூறுங்கள்

உங்கள் ஜீவனை கொண்டு ஆராதியுங்கள்
ஆண்டவர் எப்போதும் தன் உடன்படிக்கையின் வாக்குறுதிகளை காப்பாற்றுவார். அவர் வார்த்தை நிச்சயம். நீங்கள் அவரை நம்புகிறீர்களா?
உங்கள் வார்த்தைகளில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் உங்கள் வாக்குறுதிகளை காப்பாற்றுகிறீர்களா?
நீங்கள் சொல்லுவதின் அர்த்தமும், அந்த வார்த்தையில் உள்ள பொருளும் ஒன்றாய் பொருந்துகிறதா?

ஜெபத்தோடு ஆராதியுங்கள்
நீங்கள் வழிபட, ஒப்புக்கொள்ள, ஆராதிக்க, மற்றும் ஆண்டவருக்கு நன்றி சொல்ல வேதத்தை உபயோகியுங்கள்.

பாடலோடு ஆராதியுங்கள்
"சகல சிருஷ்டிக்கும் ஆண்டவரும் ராஜாவுமானவரே" என்று பாடுங்கள்.

இந்த திட்டத்தைப் பற்றி

Advent: Christ Is Coming!

திசல்பென்ட் ஊழியங்களின் 'வருகையின் தியானம்', தனி நபர்கள் மற்றும் குடும்பங்களை மீட்பரின் வருகைக்கு ஆயத்தப்படுத்த உதவுகிறது. இன்று நம்முடைய வாழ்க்கையில் கிறிஸ்துவின் வருகை எதைக் குறிக்கிறது என்பது குறித்த, ஒரு சிறப்பு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் 1ல் தொடங்குவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் இந்த வழிக்காட்டியை பயன்படுத்தி நீங்கா நினைவுகளை ஏற்படுத்தி, உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்கள் பரமதந்தையின் நீங்கா அன்பின் உடன்படிக்கையை தெரிந்து கொள்ளுங்கள்.

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக திசில்பென்ட் மினிஸ்ட்ரீஸுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவல் அறிய, www.thistlebendministries.org க்கு செல்லவும்.