தனித்துவமான உவமைகள் - ஆழமான அர்த்தங்கள் அடங்கிய சிறுகதைகள்மாதிரி

தனித்துவமான உவமைகள் - ஆழமான அர்த்தங்கள் அடங்கிய சிறுகதைகள்

30 ல் 14 நாள்

எனது வலியில் நான் கற்றுக்கொண்டது…

பத்து கன்னிகைகளின் உவமையை (மத்தேயு 25, TAOVBSI) நாம் ஒன்றாகப் புரிந்துகொள்வதற்கான கடைசி நாளுக்கு வந்துவிட்டோம். நேற்று, இயேசுவுடனான நெருக்கத்தின் எண்ணெய் விலை கொடுத்து வாங்க முடியாதது என்றும் - அது காலப்போக்கில் வளர்க்கப்பட வேண்டும் என்றும் நாம் சிந்தித்தோம்.

நான் குறிப்பிட்டது போல, ஜெபம், ஆராதனை, வேதாகம வாசிப்பு அல்லது அமைதியான நேரம் ஆகியவை இந்த நெருக்கத்தை வளர்ப்பதற்கான அத்தியாவசிய வழிகள். ஆனால், சில சமயங்களில் வாழ்க்கை இயேசுவுடனான நெருக்கத்தின் எண்ணெயை வளர்க்க ஒரு தனித்துவமான வாய்ப்பை நமக்கு வழங்குகிறது, அதாவது துன்பத்தின் மூலம்.

இது எனக்கு நன்றாகத் தெரியும். உங்களுக்குத் தெரிந்திருக்கலாம், எங்கள் மகன் ஜாக் (Zac) இந்த ஆண்டின் தொடக்கத்தில் காலமானான். கடுமையான உடல் குறைபாடுகளுடன் இருந்த எங்கள் அருமையான மகனை கிட்டத்தட்ட 4.5 ஆண்டுகளாக கவனித்துக்கொண்டோம். அந்த ஆண்டுகள் நம்பமுடியாத அளவிற்கு கடினமாக இருந்தன - பெரும்பாலும் சமாளிக்கமுடியாத அளவுக்கு. ஜாக் (Zac) நிறைய துன்பப்பட்டான், பல நேரங்களில், நாங்கள் முற்றிலும் உதவியற்றவர்களாக உணர்ந்தோம்.

ஆனால் அந்த வலியில், நான் ஒரு ஆழமான விஷயத்தைக் கண்டுபிடித்தேன்: இயேசுவுடன் துன்பப்பட நாம் கற்றுக்கொள்ளும்போது அவரோடு ஒரு புனிதமான நெருக்கத்தைக் காண்கிறோம்.

இயேசுவே துன்பத்திற்கு அந்நியர் அல்ல. வேதாகமம் சொல்கிறது:

"அவர் அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்." – ஏசாயா 53:3 (TAOVBSI)

இயேசுவுடன் துன்பப்படுவது என்றால், உங்கள் ஆழ்ந்த வலிகளையும் இருண்ட ரகசியங்களையும் அவரிடம் பகிர்ந்துகொள்வதாகும். உங்களால் புலம்ப மட்டுமே முடியும் என்றாலும் ஜெபிக்கத் தேர்ந்தெடுப்பதாகும். அவருடைய பிரசன்னத்தில் அழுது, உங்கள் உணர்வுகளைப் பற்றி நேர்மையாக இருப்பதும் இதில் அடங்கும். சில சமயங்களில் உங்கள் கோபத்தை கடவுள் மீது திருப்புவதும் இதில் அடங்கும்.

யோபு இதை நன்றாகச் செய்த ஒரு நபர். என் மனைவி ஜெனி அவரது கதையைப் பற்றி எழுதிய ஒரு அழகான வாசிப்புத் திட்டம் YouVersion வேதாகம செயலியில் வெளியிடப்பட்டுள்ளது.

நாம் பரலோகத்திற்கு மறுபக்கமான இவ்வுலகில் இருக்கும் வரை, இயேசுவுடன் துன்பப்படக் கற்றுக்கொள்ளும் சிலாக்கியம் நமக்கு உண்டு, ஏனென்றால் நாம் பரலோகத்திற்குச் செல்லும்போது, அவர் நம் கண்களிலிருந்து ஒவ்வொரு கண்ணீரையும் துடைப்பார். மரணம், துக்கம், அழுகை அல்லது வலி இனி இருக்காது (வெளிப்படுத்தின விசேஷம் 21:4, TAOVBSI).

நீங்கள் எதில் துன்பப்படுகிறீர்கள்?

அந்த வலியில் இயேசுவை அழைக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?

அவர் ஏற்கனவே காத்திருக்கிறார்.

நீங்கள் ஒரு அதிசயம்!

Cameron Mendes

இந்த திட்டத்தைப் பற்றி

தனித்துவமான உவமைகள் - ஆழமான அர்த்தங்கள் அடங்கிய சிறுகதைகள்

இயேசு கிறிஸ்து பெரும்பாலும் போதிப்பதற்கு உவமைகளையே பயன்படுத்தினார். அதற்குக் காரணம் உண்டு: இந்த எளிய, ஆனால் ஆழமான கதைகள், ஆழ்ந்த ஆவிக்குரிய உண்மைகளையும், என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய வாழ்க்கைப் பாடங்களையும், அவருடைய சீடர்கள் மற்றும் பொது மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இருந்தன. இந்தக் கதைகள் சொல்லப்பட்ட வரலாற்று மற்றும் கலாச்சாரப் பின்னணியை நாம் ஆராய்ந்து புரிந்துகொள்ள முயற்சி செய்யும்போது —அதை முதலில் கேட்டவர்களுக்கு அவை எந்தப் பொருளை உணர்த்தியதோ, அதே வகையில் நாமும் அதை புரிந்து உணர்ந்துகொள்ள நமக்கு உதவும்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net