தனித்துவமான உவமைகள் - ஆழமான அர்த்தங்கள் அடங்கிய சிறுகதைகள்மாதிரி

தனித்துவமான உவமைகள் - ஆழமான அர்த்தங்கள் அடங்கிய சிறுகதைகள்

30 ல் 13 நாள்

இந்த எண்ணெய்யை எங்கே வாங்குவது?? 🛢

உங்களுக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் பத்து கன்னிகைகளின் உவமையைப் (மத்தேயு 25, TAOVBSI) படிக்கும்போது, என் மனதில் எழும் மிக அவசரமான கேள்வி: "இந்த எண்ணெய்யை எங்கே வாங்குவது??" என்பதுதான்.

கண்டுபிடிப்போம்!

கதையில், புத்திசாலியான கன்னிகைகள் மற்றவர்களிடம் - எண்ணெய் தீர்ந்து போனவர்களிடம் கூறியது என்னவென்றால் - அவர்கள் சென்று தங்களுக்கு தேவையான எண்ணெய்யை தாங்களே வாங்கிவருமாறு சொல்கிறார்கள் (மத்தேயு 25:9 TAOVBSI) துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் திரும்பி வரும்போது, மிகவும் தாமதமாகி விடுகிறது. திருமணம் அவர்களை இல்லாமலேயே தொடங்கிவிட்டது, அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.

அது நமக்கு முதல் துப்பு கொடுக்கிறது: இந்த எண்ணெயைப் பெறுவதற்கு நேரமும் முயற்சியும் தேவை. முட்டாள் கன்னிகைகள் செய்ய முயற்சித்தது போல அவசரம் காட்ட முடியாது.

இந்த உவமையில் உள்ள எண்ணெய் இயேசுவுடனான நமது உறவை - அவருடனான நமது நெருக்கத்தை - குறிக்கிறது. எனவே கேள்விக்கு பதிலளிக்க, நமது இரட்சிப்பைப் போலவே, அதை வாங்கவோ, சம்பாதிக்கவோ அல்லது கடன் வாங்கவோ முடியாது - அதை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

வேதாகமத்தில் பொதுவாக விளக்குகளுக்கு ஒலிவ மர எண்ணையே பயன்படுத்தப்பட்டது, இந்த எண்ணெய் அழுத்துதல், நசுக்குதல், அரைத்தல் மற்றும் பிரித்தல் போன்ற நீண்ட மற்றும் கடினமான செயல்முறை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

முடிவில், ஒலிவ மரக்காய்கள் அதிகம் மிஞ்சுவதில்லை… எண்ணெய் மட்டுமே இருக்கும்.

இயேசுவுடனான நமது பயணத்தில் இதேபோன்ற ஒரு கருத்து உள்ளது - அதற்கு 'சுயத்திற்கு மரித்தல்' என்று பெயர், வேதாகமம் அதை பலமுறை குறிப்பிடுகிறது:

“ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன். தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.” - லூக்கா 9:23-24 (TAOVBSI).
“மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும். தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அவன் அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான்.” - யோவான் 12:24-25 (TAOVBSI).
“கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.” - கலாத்தியர் 2:20 (TAOVBSI).

சுயத்திற்கு மரித்து, இயேசுவுடனான நெருக்கத்தின் எண்ணெயை வளர்க்கும் இந்த செயல்முறை பல வடிவங்களை எடுக்கலாம், அதாவது ஜெபம், ஆராதனை, வேதாகம வாசிப்பு அல்லது, எனக்குப் பிடித்தமான ஒன்று, அமைதி மற்றும் தனிமை.

முக்கிய விஷயம் என்னவென்றால்: இயேசுவுடன் நேரத்தைச் செலவிடுங்கள், அவசரப்படுத்தாதீர்கள். அவரை அறிந்துகொள்ளுங்கள், அவரிடம் உங்களை வெளிப்படுத்துங்கள்!

நீங்கள் ஒரு அதிசயம்!

Cameron Mendes

இந்த திட்டத்தைப் பற்றி

தனித்துவமான உவமைகள் - ஆழமான அர்த்தங்கள் அடங்கிய சிறுகதைகள்

இயேசு கிறிஸ்து பெரும்பாலும் போதிப்பதற்கு உவமைகளையே பயன்படுத்தினார். அதற்குக் காரணம் உண்டு: இந்த எளிய, ஆனால் ஆழமான கதைகள், ஆழ்ந்த ஆவிக்குரிய உண்மைகளையும், என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய வாழ்க்கைப் பாடங்களையும், அவருடைய சீடர்கள் மற்றும் பொது மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இருந்தன. இந்தக் கதைகள் சொல்லப்பட்ட வரலாற்று மற்றும் கலாச்சாரப் பின்னணியை நாம் ஆராய்ந்து புரிந்துகொள்ள முயற்சி செய்யும்போது —அதை முதலில் கேட்டவர்களுக்கு அவை எந்தப் பொருளை உணர்த்தியதோ, அதே வகையில் நாமும் அதை புரிந்து உணர்ந்துகொள்ள நமக்கு உதவும்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net