தனித்துவமான உவமைகள் - ஆழமான அர்த்தங்கள் அடங்கிய சிறுகதைகள்மாதிரி

பட்டர் சிக்கனுக்கும் பாடல் எழுதுவதற்கும் உள்ள ஒற்றுமை என்ன?
கடந்த ஒன்பது வருட திருமண வாழ்க்கையில் ஒரு கலைஞருடன் வாழ்ந்ததால் இசையைப் பற்றி நான் நிறைய கற்றுக்கொண்டேன். இருப்பினும், சில நேரங்களில் கேம்ரன் ஒரு முழுமையான ஆடியோ இன்ஜினியராக பேச ஆரம்பிக்கும் போது, நான் குழம்பிப் போயிடுவேன்.
அந்த சமயங்களில், அவர் சமையல் உதாரணங்களை பயன்படுத்துவார், ஏனெனில் அதுவே எனக்குப் புரியும் மொழி. 🤪
உதாரணமாக, ஒரு நாள் அவர் மிக்ஸிங் மற்றும் மாஸ்டரிங் செய்வதன் முக்கியத்துவத்தை எனக்கு விளக்க முயன்றார். “நீ பட்டர் சிக்கன் சமைக்கும் போது, கோழியையும் கிரேவியையும் ஒன்றாகக் கலந்து, கடைசியாக அலங்கரிக்கும் வரை அதன் சுவை எப்படி இருக்கும் என்று உன்னால் சொல்ல முடியாது, இல்லையா? அதேபோல்தான், ஒரு பாடல் மிக்ஸ் செய்யப்பட்டு, மாஸ்டர் செய்யப்படும் வரை அதன் முழுமையான வடிவம் கிடைக்காது” என்றார்.
இதன் முக்கியக் கருத்து என்னவென்றால், நீங்கள் ஒரு விஷயத்தை தெளிவாகப் புரிய வைக்க விரும்பினால், உங்கள் பார்வையாளர்களைத் தெரிந்து கொண்டு, அவர்களுக்குப் புரியும் மொழியில் பேச வேண்டும்.
கெட்ட குமாரன் உவமையில் இயேசுவின் செய்தியை உண்மையாகப் புரிந்துகொள்ள, அவர் யாரிடம் இந்த உவமையை கூறினார் என்பதை நாம் ஆராய வேண்டும்.
லூக்கா 15-ஆம் அதிகாரத்தின் தொடக்கத்தில், அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
பாவிகளும் வரி வசூலிப்பவர்களும் அவருடைய போதனைகளைக் கேட்கக் கூடினர். இதைக் கண்ட பரிசேயர்களும், மத போதகர்களும் முணுமுணுத்தனர், “இவன் பாவிகளை வரவேற்று அவர்களோடு உண்கிறானே” – லூக்கா 15:1-2 TAOVBSI
இயேசுவின் பார்வையாளர்களை நாம் இரண்டு குழுக்களாகப் பிரிக்கலாம்:
- வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் = ஒதுக்கப்பட்டவர்கள்
- பரிசேயர்களும் மத போதகர்களும் = மதத் தலைவர்கள்
இயேசுவின் கதையில் வரும் இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள், இரண்டு சகோதரர்கள், அவரது பார்வையாளர்களில் உள்ள இரண்டு குழுக்களுடன் நேரடியாக தொடர்புடையது.
ஒதுக்கப்பட்டவர்கள் இளைய சகோதரருடன் ஒப்புமை உடையவர்கள். அவர்கள் விதிகளைப் பின்பற்றுவதில்லை மற்றும் பாவம் நிறைந்த "கட்டுப்பாடற்ற" வாழ்க்கையை வாழ்கின்றனர்.
மூத்த சகோதரன் மதத் தலைவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்; அவர்கள் விதிகளின்படி வாழ்ந்தனர் மற்றும் சட்டத்திற்கு கீழ்ப்படிய கடினமாக உழைத்தனர்.
கதையில் வரும் மூத்த சகோதரன் தனது தந்தையை, கட்டுப்பாடில்லாமல் வாழ்ந்த இளைய சகோதரனை மீண்டும் வரவேற்றபோது கோபப்பட்டது போலவே, மதத் தலைவர்களும், “இவன் பாவிகளை வரவேற்று அவர்களோடு உண்கிறானே” என்று குறை கூறுகின்றனர்.
நீங்கள் இதில் எந்த குழுவுடன் உங்களை அதிகமாக அடையாளப்படுத்த முடிகிறது?
நீங்கள் ஒரு அதிசயம்!
Jenny Mendes
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

இயேசு கிறிஸ்து பெரும்பாலும் போதிப்பதற்கு உவமைகளையே பயன்படுத்தினார். அதற்குக் காரணம் உண்டு: இந்த எளிய, ஆனால் ஆழமான கதைகள், ஆழ்ந்த ஆவிக்குரிய உண்மைகளையும், என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய வாழ்க்கைப் பாடங்களையும், அவருடைய சீடர்கள் மற்றும் பொது மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இருந்தன. இந்தக் கதைகள் சொல்லப்பட்ட வரலாற்று மற்றும் கலாச்சாரப் பின்னணியை நாம் ஆராய்ந்து புரிந்துகொள்ள முயற்சி செய்யும்போது —அதை முதலில் கேட்டவர்களுக்கு அவை எந்தப் பொருளை உணர்த்தியதோ, அதே வகையில் நாமும் அதை புரிந்து உணர்ந்துகொள்ள நமக்கு உதவும்.
More
இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net

