தனித்துவமான உவமைகள் - ஆழமான அர்த்தங்கள் அடங்கிய சிறுகதைகள்மாதிரி

என் அப்பா என்னை எப்போதும் அடிப்பார்!
என்னுடைய பெற்றோரும், அண்ணன், அக்காள்களும் பகிர்ந்துகொண்ட கதைகளின்படி, நான் சிறு வயதில் மிகவும் சேட்டைக்காரியாக இருந்தேன்.
இந்தியாவில் அடிப்பது —அதாவது ‘உதை’— சாதாரணமான ஒன்று என்று இப்போது எனக்கு தெரியும். ஆனால் நான் வளர்ந்த இடத்தில் அது அவ்வளவாக இல்லை. இருப்பினும், என் அப்பா பொறுமையை இழந்து, என் பிட்டத்தில் ஒரு உதை கொடுத்த சில தருணங்கள் எனக்கு நினைவிருக்கிறது—அது என் அறைக்குள் நான் ஓடி ஒளிந்து, நான் மன்னிப்புக் கேட்கத் தயாராகும் வரை வெளியே வராததற்கான சமிக்கை.
சில வருடங்கள் கழித்து, இன்னொரு குடும்பத்துடன் பேசும்போது, ஒழுக்கம் பற்றிய பேச்சு வந்தது, அப்போது நான் சாதாரணமாக, "என் அப்பா எப்போதும் என்னை உதைப்பார்!" என்று சொன்னேன். இதைக் கேட்டு, என் பெற்றோர் சிரித்து, "அது இரண்டு முறைதான் நடந்தது!" என்றார்கள். அது முதல், அது எங்கள் குடும்பத்தில் ஒரு நகைச்சுவையாகிவிட்டது—அநேகமாக நான் என் அப்பாவைப் பற்றி இதுவரை சொன்னதிலேயே அதுதான் மிக மோசமான விஷயம்.
அவ்வளவாக மோசமாக இல்லை, இல்லையா?
குறிப்பாக, கெட்ட குமாரன் (லூக்கா 15:11-32, TAOVBSI) உவமையில் உள்ள இளைய மகனுடன் ஒப்பிடும்போது, ஒரு பெரிய விஷயமே இல்லை. அவன் தன் தந்தையைப் பார்த்து, "நீங்கள் செத்துப் போனால் போதும்!" என்ற அளவுக்கு பேசினான். 😳
அவனுடைய உண்மையான வார்த்தைகள், "தந்தையே, சொத்தில் எனக்கு வர வேண்டிய பங்கை எனக்குத் தாரும்" (லூக்கா 15:12, TAOVBSI) என்று இருந்தன. ஆனால் அந்த நாட்களில், அந்த கலாச்சாரத்தில், தந்தை இறப்பதற்கு முன் அவருடைய சொத்தில் பங்கு கேட்பது மிகவும் மரியாதைக் குறைவான செயல். அது தந்தையை அவருடைய நிலத்தின் ஒரு பகுதியை விற்றுப் பிரிக்கச் செய்வதாகும்—இது செல்வத்தை மட்டும் அல்ல, அவருடைய கௌரவம் மற்றும் சமுதாயத்தில் உள்ள மதிப்பையும் தியாகம் செய்வதாகும்.
அந்தக் கோரிக்கையைவிட அதிர்ச்சியானது எது தெரியுமா... தந்தையின் சொன்ன பதில்: "சரி", என்பது.
அந்தக் காலத்தில், மத்திய கிழக்கில் இருந்த தந்தையர், இப்படிப்பட்ட அவமதிப்புக்கு, குறைந்தபட்சம், ‘அடி’ கொடுப்பார்கள் அல்லது அதற்கும் மேலாக, பிள்ளையைத் துரத்தி விடுவார்கள். ஆனால் இந்தத் தந்தையோ தன் மகனின் கோரிக்கைக்குச் சம்மதிக்கிறார்.
அவருடைய மகனின் கோரிக்கை இந்தத் தந்தையை மிகவும் புண்படுத்தியது என்பதில் சந்தேகம் இல்லை. இப்படிப்பட்ட நிராகரிப்புக்கு மனித இயல்பான எதிர்வினை கோபப்படுவதுதான். அது நம்மை மேலும் வலியில் இருந்து காத்துக்கொள்ளும் வழி. ஆனால் இந்தத் தந்தை அப்படி இல்லை; தன் மகன் மீது கொண்ட அவருடைய அன்பும் பாசமும் அப்படியே இருந்தன.
நம் பரலோகத் தந்தையைப் போலவே.
நாம் எவ்வளவு தூரம் ஓடினாலும், நம் செயல்கள் அவரை எவ்வளவு புண்படுத்தினாலும், அவர் நம்மை நேசிப்பது ஒருபோதும் குறைவதில்லை.
இப்படிப்பட்ட அளவற்ற அன்புக்காக அவருக்கு நன்றி சொல்ல ஒரு கணம் எடுத்துக்கொள்வோம்.
பரலோகத் தந்தையே, என்மீதுள்ள உம்முடைய குறையாத அன்புக்காக உமக்கு நன்றி. என் வார்த்தைகளும் செயல்களும் உம்மை எவ்வளவு புண்படுத்தினாலும், என்மீதுள்ள உம்முடைய அன்பு எப்போதும் மாறாமல் இருப்பதற்காக உமக்கு நன்றி. நான் உம்மை நிராகரித்த அந்தத் தருணங்களுக்காக என்னை மன்னியும். இயேசுவின் நாமத்தில், ஆமென்.
நீங்கள் ஒரு அதிசயம்!
Jenny Mendes
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

இயேசு கிறிஸ்து பெரும்பாலும் போதிப்பதற்கு உவமைகளையே பயன்படுத்தினார். அதற்குக் காரணம் உண்டு: இந்த எளிய, ஆனால் ஆழமான கதைகள், ஆழ்ந்த ஆவிக்குரிய உண்மைகளையும், என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய வாழ்க்கைப் பாடங்களையும், அவருடைய சீடர்கள் மற்றும் பொது மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இருந்தன. இந்தக் கதைகள் சொல்லப்பட்ட வரலாற்று மற்றும் கலாச்சாரப் பின்னணியை நாம் ஆராய்ந்து புரிந்துகொள்ள முயற்சி செய்யும்போது —அதை முதலில் கேட்டவர்களுக்கு அவை எந்தப் பொருளை உணர்த்தியதோ, அதே வகையில் நாமும் அதை புரிந்து உணர்ந்துகொள்ள நமக்கு உதவும்.
More
இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net

