தனித்துவமான உவமைகள் - ஆழமான அர்த்தங்கள் அடங்கிய சிறுகதைகள்மாதிரி

எனக்கு உங்களைத் தெரியுமா?!?
நான் பயணிக்கும்போது நிறைய பேரைச் சந்திப்பதுண்டு. ஒரு சங்கடமான உண்மை என்னவென்றால் — சில சமயங்களில் பல வருடங்கள் கழித்து மீண்டும் அவர்களைச் சந்திக்கும்போது எனக்கு அவர்களை நினைவிருப்பதில்லை 🫣. சில சமயங்களில் யாராவது என்னுடன் எடுத்த புகைப்படத்தைக் காட்டினாலும்... எனக்கு சுத்தமாக நினைவிருப்பதில்லை. நிச்சயமாக, நான் இதை அவர்களிடம் நேருக்கு நேர் சொல்ல மாட்டேன். நான் வழக்கமாக புன்னகைத்துவிட்டு, "அடடா, உங்களை மீண்டும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி!" என்று சொல்வேன்.
"மன்னிக்கவும், நீங்கள் யார் என்று எனக்குத் தெரியவில்லை" என்று சொல்லி நான் முரட்டுத்தனமாக இருக்க விரும்பவில்லை. ஆனால் இயேசுவின் பத்து கன்னிகைகள் உவமையில், மணமகன் அவ்வாறு செய்வதில் எந்தப் பிரச்சனையும் காணவில்லை (மத்தேயு 25:6, TAOVBSI).
ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாணவீட்டுக்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது. பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள். அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். – மத்தேயு 25:10-12 (TAOVBSI)
ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், கன்னிகைகள் மணமகனைத் தெளிவாக அறிந்திருந்தனர்—அவர்கள் அவரை "ஆண்டவரே, ஆண்டவரே!" என்று அழைத்தனர்.
ஆனால் அவருடைய பதில்? "எனக்கு உங்களைத் தெரியாது." 🤔
இந்தக் கதையில் நாம் தான் கன்னிகைகள், இயேசுவே மணமகன்.
மிக முக்கியமான கேள்வி என்னவென்றால், உங்களுக்கு இயேசுவைத் தெரியுமா என்பதல்ல, இயேசுவுக்கு உங்களைத் தெரியுமா என்பதுதான்.
இப்போது, நீங்கள் யோசிப்பது எனக்கு கேட்கிறது, "ஆனால் இயேசு கடவுள், அவருக்கு எல்லாம் தெரியும், எல்லோரையும் தெரியும்!" ஆம், அது உண்மைதான்! ஆனால் இயேசு இந்தக் கதையில் சொல்ல வரும் கருத்து என்னவென்றால், அவர் நம்மை ஒரு நெருங்கிய விதத்தில் அறிய விரும்புகிறார்.
கன்னிகைகளின் விளக்குகளில் இருந்த எண்ணெய் நெருக்கம் மற்றும் உறவைக் குறிக்கிறது. நாம் அதைப் பற்றி நாளை பேசுவோம், ஆனால் இன்று, இதை மட்டும் யோசியுங்கள்:
இயேசு உங்களை நெருக்கமான உறவுக்காக, நட்புக்காக அழைக்கிறார். நீங்கள் உங்களை அவருக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும், அவரோடு ஒரு தனிப்பட்ட மற்றும் நெருங்கிய உறவைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் விரும்புகிறார்.
நீங்கள் ஒரு அதிசயம்!
Cameron Mendes
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

இயேசு கிறிஸ்து பெரும்பாலும் போதிப்பதற்கு உவமைகளையே பயன்படுத்தினார். அதற்குக் காரணம் உண்டு: இந்த எளிய, ஆனால் ஆழமான கதைகள், ஆழ்ந்த ஆவிக்குரிய உண்மைகளையும், என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய வாழ்க்கைப் பாடங்களையும், அவருடைய சீடர்கள் மற்றும் பொது மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இருந்தன. இந்தக் கதைகள் சொல்லப்பட்ட வரலாற்று மற்றும் கலாச்சாரப் பின்னணியை நாம் ஆராய்ந்து புரிந்துகொள்ள முயற்சி செய்யும்போது —அதை முதலில் கேட்டவர்களுக்கு அவை எந்தப் பொருளை உணர்த்தியதோ, அதே வகையில் நாமும் அதை புரிந்து உணர்ந்துகொள்ள நமக்கு உதவும்.
More
இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net

