நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்மாதிரி

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27   - சகோதரன் சித்தார்த்தன்

4 ல் 3 நாள்

நெருக்கத்திலே நாம் என்ன ஜெபிக்க வேண்டும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையே இந்த 7-11 வசனங்கள் நமக்கு கற்றுத் தருகின்றன.நமது கர்த்தரின் அன்பு நம் பெற்றோரின் அன்பைக் காட்டிலும் அசைக்கமுடியாதது அவருடைய உண்மை மாறாதது...(வசனம்10).

நமது நெருக்கத்தில் சத்துரு கொண்டு வரும் சோதனையே – உன் மீது ஒருவருக்கும் அக்கறை இல்லை; உன்னுடைய கஷ்டம் யாருக்குத் தெரியும் என்பதே... ஆனால் இன்றைய வேதவாக்கியத்தில் சத்துருவின் அந்த பொய்-தவிடுபொடியாகிடுகிறது. நம்முடைய பயம் பெரியது என்ற எண்ணத்தை மாற்றி, நமது தேவன் எவ்வளவு பெரியவர் என்பதை நம் கருத்திற்கு கொண்டுவருவதே சங்கீதம் 27ன் வல்லமை. இந்த சங்கீதம் சுலபமான வாழ்க்கை வாழ்பவர்களுக்காக எழுதப்பட்டது அல்ல; அவர்களுடைய பெலத்திற்கும் மேலாக - -போராட்டத்தையும், நெருக்கத்தையும் சந்தித்து அவரை அழைக்கும்-மக்களுக்காக எழுதப்பட்ட சங்கீதம். தேவனிடத்தில் நீங்கள் கொண்டிருக்கும் விசுவாசம்-= கோட்டையாக எழும்பட்டும். பயம் வந்து கதவை தட்டும்; ஆனால், உங்கள் இருதயம் அவரில் நங்கூரமிட்டு இருக்கும் போது பயத்திற்கு நிற்க கூட இடம் இருக்காது. ஒருவேளை எல்லாம் நமக்கு விரோதமாக செயல்படுவது போல இருந்தாலும், சத்துரு வந்து உங்கள் காதில் இத்துடன் உன்கதை முடிந்தது என்று ஓதினாலும்.....
என் எதிராளிகளினிமித்தம் செவ்வையான பாதையில் என்னை நடத்தும்.என்ற தாவீதின் நம்பிக்கை போன்ற நம்பிக்கை உங்களுக்குள் வரவேண்டும். இது ஒரு நேர்மறை அறிக்கை அல்ல; அல்லது சுயத்தை சார்ந்திருப்பது அல்ல; மாறாக, அவன் தன் தேவனிடத்தில் கொண்டிருந்த நம்பிக்கை - அவனை எதிர்த்த சத்துருக்களின் சேனையில் அளவைக்காட்டிலும் அதிகமாக இருந்தது. உங்கள் எதிராளி வரும்போது நீங்கள் எப்படி பதில் அளிக்கிறீர்கள்? எதிர்பாராத செய்தி ஒன்று -உங்கள் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடும் போது, நீங்கள் நம்பியிருந்தவர்கள் உங்களுக்கு விரோதமாக எழும்பும் போது- நீங்கள் பீதி, பதற்றம் அடைகின்றீர்களா அல்லது தேவ பிரசன்னத்திற்குள் ஓடுகின்றீர்களா?

நெருக்கத்திலே நடந்து கொள்ள வேண்டியதை இன்றைக்கு கற்றுக்கொள்கிறோம்:

நம்பிக்கை எதில் வைக்கிறோம்-என்பது நமது தெரிந்தெடுப்பு [CHOICE]

யுத்தம் முற்றினாலும், நமக்கு நெருக்கம் நேரிட்டாலும் - தேவாதி தேவன் ”அவர் தனது கட்டுப்பாட்டிற்குள் தான்” யாவற்றையும் வைத்திருக்கின்றார் என்பதே ...

நாம் தெரிந்தெடுத்த நம்பிக்கையாக - இன்றைக்கு நமக்குள் இருக்க வேண்டும்.

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27   - சகோதரன் சித்தார்த்தன்

காலையில் கண் விழிக்கும் போது - நேற்றைய தின கவலைகளைப் பார்க்கின்றீர்களா? அல்லது இன்றைய நாளின் – புதிய தேவ கிருபையை உற்று நோக்குகின்றீர்களா? ஒவ்வொருநாளும் நாம் நெருக்கத்திற்கா அல்லது விசுவாசத்திற்கா? எதற்கு முதலிடம் தருகிறோம். ”என்கையிலஒன்னும் இல்லை” என்பதை விட யாவும் தேவன் - அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்ற அறிவுடன் செயல்படுகின்றோமா? கர்த்தர் என் வெளிச்சம் – யாருக்குப் பயப்படுவேன் (சங்கீதம் 27:1) சொல்லிப்பாருங்கள் உங்கள் இருள், சந்தேகம் விலகி ஓடும். கர்த்தர் என் இரட்சிப்பு என்னும் போது உங்கள் நம்பிக்கையிழந்த சூழ்நிலை மாறி – பெலவீனத்தில் பெலன் உண்டாகும். இந்த சங்கீதம் தேவன் அவர் ஏதோ தூரத்தில் இருந்து நம்மை பார்த்துக்கொண்டு இருப்பவர் அல்ல- அவரே எனது கோட்டை. நிலையற்ற உலகில் எனது அஸ்திபாரம் இயேசு கிறிஸ்துவே என்று யோசிக்கச் சொல்கிறது. நெருக்கத்திலே நாம் அவரை அழைக்கலாம் - வாங்க!

More

இந்த திட்டத்தை வழங்கிய Anchor Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.bible.com/organizations/36ac5974-dac1-4d19-82b1-3a0fa597751d