நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்மாதிரி

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27   - சகோதரன் சித்தார்த்தன்

4 ல் 4 நாள்

நாம் கண்களால் காண முடியாவிட்டாலும் தேவன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார் என்பதே விசுவாசம். இன்றைய வேதாகம வாக்கியங்களில் நாம் காணும் ”கார்த்தருக்குக் காத்திரு & கர்த்தருக்கே காத்திரு” என்பதில் நாம் சோம்பேறித்தனமாக உட்கார்ந்திருக்க வேண்டும் என்ற அர்த்தம் இல்லை. பதிலைக் காணாத போது ஜெபி; பதற்றத்திற்கு பதிலாக விசுவாசி; கவலைப்படுவதை விடுத்து ஆராதனையில் ஈடுபடு - என்பதே அர்த்தம். காத்திருக்கும் வேளையிலும் கர்த்தர் நல்லவர் என்ற விசுவாசம் மேலிட வேண்டும். காலதாமதம் ஆனால் - சோர்ந்து போய் நாமே - பொறுமையில்லாமல் ஏதேனும் தீர்வுகளைத் தெரிந்தெடுத்துக் கொள்ளக் கூடாது. அவருடைய வாக்குதத்தை இறுகப்பற்றிக் கொண்டு அது நிச்சயம் நிறைவேறும் என்று காத்திருக்கவேண்டும்.

கர்த்தருக்கு காத்திருக்கிறவர்கள் ஒருபோது ஏமாற்றம் அடைவதில்லை. ஏற்றகாலத்தில் அவர் செயல்பட்டு அவர் தந்த வாக்குகளை நிறைவேற்றுவார். நெருக்கதில் இருந்து உங்களை விடுவிப்பார்; உதவிசெய்வார்.

அனுதினமும் நாம் போராட்டங்களை சந்திப்பது உண்மைதான் சில வெளியிலிருந்து வருகின்றன. சில உள்ளிருந்து; சோதனைகள், பயம், உலகத்தின் அழுத்தம் என இப்படி பல வழிகளில் நாம் நெருக்கப்படுவதாக இருந்தாலும் – வெற்றி நம்முடைய சொந்த பெலத்தினால் வருவதில்லை.மாறாக, நாம் கர்த்தரில் நம்பிக்கையாக இருப்பதினாலேயே வருகின்றது. தேவன் அவர் ஏற்கெனவே எனக்காக வெற்றியை பெற்றுவிட்டார் என்பதிலே நம்பிக்கை.

வெற்றி என்பது நாம் யுத்தங்களை தவிர்ப்பதில் இல்லை. அது யார் நமக்கு துணையாக நிற்கின்றார் என்பதை அறிந்திருப்பதில் இருக்கின்றது. நீங்கள் விசுவாசத்தினால் முன்னேறிச்செல்ல வேண்டும் ஏனென்றால் அவர் ஏற்கெனவே நமக்கு முன்பாகச் சென்று விட்டார். நாமும் தாவீதோடு சேர்ந்து சத்துருக்களுக்கு முன்பாக என் தலை உயர்த்தப்படும்” என்று சொல்லலாம். வெற்றி வரும் போது ”கர்த்தரைப்பாடி, அவரைக் கீர்த்தனம் பண்ணுவேன்” என்பது உங்கள் தொனியாக இருக்கும்.

சங்கீதம் 27 நம்முடைய பயத்தை ஒன்றுமில்லாமல் செய்துவிடும் வல்லமையான சங்கீதம். இதன் பிரகடனம் என்ன? - கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்கு பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர் யாருக்கு அஞ்சுவேன்? என்பதை நீங்கள் உங்கள் நெருக்கத்தின் வேளையில் அறிக்கையிடுங்கள்.

அவர் நமக்காக செயல்படும் தேவன் ; ஒருவேளை நாம் எதிர்பார்க்கும் வழியில் / நேரத்தில் - அவர் பதில் அளிக்காதிருக்கலாம் ஆனால், ஒன்றை நிச்சயம் அறிந்து வைத்திருங்கள் நெருக்கத்திலே நீங்கள் அழைக்கும் ஒவ்வொரு அழைப்பையும் அவர் செவிகொடுத்து கேட்கிறார். உங்களது சொல்ல முடியாத துயரம் ஒவ்வொன்றும் அவருக்கு தெரியும். அவர் திரைக்கு மறைவில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார். அவருடைய வேளையில் அவருடைய பதில் எப்பொழுதும் பரிபூரணமானதாகவே வரும். தாவீதோடு நடந்தவர் உங்களோடும் இருக்கின்றார்.

ஜீவனுள்ளோர் தேசத்தின் தேவன் உங்கள் நெருக்கத்தில் இருந்து விடுவித்து - அவர் தாமே உங்களுக்கு பரிபூரண நன்மையை நிச்சயம் கட்டளையிடுவார். ஆமென்.

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27   - சகோதரன் சித்தார்த்தன்

காலையில் கண் விழிக்கும் போது - நேற்றைய தின கவலைகளைப் பார்க்கின்றீர்களா? அல்லது இன்றைய நாளின் – புதிய தேவ கிருபையை உற்று நோக்குகின்றீர்களா? ஒவ்வொருநாளும் நாம் நெருக்கத்திற்கா அல்லது விசுவாசத்திற்கா? எதற்கு முதலிடம் தருகிறோம். ”என்கையிலஒன்னும் இல்லை” என்பதை விட யாவும் தேவன் - அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்ற அறிவுடன் செயல்படுகின்றோமா? கர்த்தர் என் வெளிச்சம் – யாருக்குப் பயப்படுவேன் (சங்கீதம் 27:1) சொல்லிப்பாருங்கள் உங்கள் இருள், சந்தேகம் விலகி ஓடும். கர்த்தர் என் இரட்சிப்பு என்னும் போது உங்கள் நம்பிக்கையிழந்த சூழ்நிலை மாறி – பெலவீனத்தில் பெலன் உண்டாகும். இந்த சங்கீதம் தேவன் அவர் ஏதோ தூரத்தில் இருந்து நம்மை பார்த்துக்கொண்டு இருப்பவர் அல்ல- அவரே எனது கோட்டை. நிலையற்ற உலகில் எனது அஸ்திபாரம் இயேசு கிறிஸ்துவே என்று யோசிக்கச் சொல்கிறது. நெருக்கத்திலே நாம் அவரை அழைக்கலாம் - வாங்க!

More

இந்த திட்டத்தை வழங்கிய Anchor Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.bible.com/organizations/36ac5974-dac1-4d19-82b1-3a0fa597751d

சம்பந்தப்பட்ட திட்டங்கள்