பாகால்பிராசீம் 2சாமு.5:20 = பெருவளர்ச்சி+தடைமுறிவு+திருப்புதலின் சம்பவங்கள்- சகோதரன் சித்தார்த்தன்மாதிரி

பாகால்பிராசீம்   2சாமு.5:20 = பெருவளர்ச்சி+தடைமுறிவு+திருப்புதலின் சம்பவங்கள்- சகோதரன் சித்தார்த்தன்

6 ல் 3 நாள்

உங்களில் சிலர் உங்களுடையதாக இல்லாத பாரத்தைச் சுமக்கின்றீர்கள் தேவன் தாமே தீர்த்து வைக்க வேண்டிய பிரச்சினையை -நான் தீர்த்து விடுவேன் என்று - உங்கள் சுயபெலத்தில் யுத்தம் செய்து வருகின்றீர்கள்.

அவர் இன்றைக்கும் அற்புதம் செய்கின்றார் என்று உங்களுக்கு நான் சொல்கின்றேன். அவர் மாறாதவர். குஷ்டரோகியை தொட்டு அவனது அழுகிய கரங்களை மீட்டெடுத்தவர்; கொந்தளித்த காற்றை அதட்டினவர் -அவர் தான் இயேசு.

உன் நிலைமை ரொம்ப மோசமாயிடுச்சு என்று சத்துரு உங்களை நம்பவைத்திட இடம் தராதிருங்கள். நம் எஜமானரின் ஒரேயொரு தொடுதல் எல்லாவற்றையும் மாற்றிப் போட முடியும்.

உங்களில் சிலர் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றீர்கள் – கட்டவேமுடியாது என்ற அளவிற்கு பில்தொகை ஒருபக்கம் -மறுபக்கம் தோளின் மீது கடன் சுமை;

ஆனால்

சமாதானத்துக்கான நினைவுகள்: தேவன்யெகோவா யீரே என்பது இவரது நாமம் நமது தேவைகளை சந்திப்பவர் சர்வலோகமும் இவருக்குச் சொந்தம். இவருக்கு கடினமாது என்று எந்தவொரு செயலும் இல்லை.

வேதவசனங்கள்

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

பாகால்பிராசீம்   2சாமு.5:20 = பெருவளர்ச்சி+தடைமுறிவு+திருப்புதலின் சம்பவங்கள்- சகோதரன் சித்தார்த்தன்

எரேமியா 29:11 ....அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே. இன்றைய தேவை - சமாதானத்துக்கான நினைவுகள்; நம்பிக்கை ; சொன்னபடி நிறைவேறும் வாக்குகள் – இவை நமக்கு சர்வலோகத்தை ஆட்சி செய்யும் தேவாதி தேவனின் சர்வவல்ல கரத்தால் மட்டுமே சம்பவமாக்கித் தரமுடியும். ஏன் இந்த வலி, வேதனைகள், நோய்கள், இழப்புகள்....காரணம் : சத்துரு -அவன் எப்படிப்பட்டவன்: திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். (யோவான்:10:10) தீர்வும் இந்த 10 ஆம் வசனத்திலேயே இயேசு தருகிறார்: நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். இயேசு யார்- இன்றைக்கு எனக்கு நன்மை செய்கிறவர்; பிசாசிடம் அகப்பட்ட என்னை குணப்படுத்துகிறவர். அப்போஸ்தலர் 10:38 நமது இன்றைய சமாதானத்துக்கேதுவான நினைவுகள்: பலவருடங்களாக நமக்கு பாரமாக இருந்த பாரம் திடீரென எடுபட்டு போகும்;இருதயத்தின் ஒரு மூலையில் நாம் முணுமுணுத்துக் கொண்டிருந்த விருப்பத்திற்கு பதில் –நாம் கற்பனை செய்தும் பார்த்திராத விதத்தில் கிடைக்கும்

More

இந்த திட்டத்தை வழங்கிய Anchor Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.bible.com/organizations/36ac5974-dac1-4d19-82b1-3a0fa597751d