ஆண்டவருடன் ஒரு உறவை வளர்த்துக்கொள்மாதிரி

ஆண்டவருடன் ஒரு உறவை வளர்த்துக்கொள்

6 ல் 6 நாள்

உங்கள் வார்த்தைகளில் கருமியாக இருக்காதீர்கள்!

புதிதாகத் திருமணமான தம்பதிகளுக்கிடையில், கணவன் அவனது காதலை தன்னிடம் வெளிப்படுத்தவில்லையே என்று உணரும் மனைவியின் நிலைமையை சற்று கற்பனை செய்து பாருங்கள்.

மனைவி: "அன்பே, நீங்கள் இன்னும் என்னைக் காதலிக்கிறீர்களா?"

கணவன்: “நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று நம் திருமண நாளிலேயே சொல்லிவிட்டேன். அதில் எப்போதாவது ஒரு மாற்றம் வந்தால், அப்போது நான் உனக்குத் சொல்லுவேன். மீண்டும் மீண்டும் என்னிடம் கேட்டுக்கொண்டே இருக்காதே!"

மனைவி: 🤨

கணவனின் பதில் மனைவிக்கு கடுமையானதாகவும் வேதனையளிப்பதாகவும் இருந்திருக்கும், இல்லையா? எந்தவொரு உறவும் நிலைத்திருக்க, வாய்விட்டுப் பேசுவது முக்கியமானது! அன்பின் வெளிப்பாடுகளைத் தெரிவிக்கும் வார்த்தைகளை நாம் தவறாமல் கேட்க வேண்டும், மேலும் பதிலுக்கு நாமும் அன்பையும் பாராட்டுகளையும் அடிக்கடி வெளிப்படுத்த வேண்டும்.

நாம் பேசுவதற்கு முன்பே, நாம் என்ன சொல்லப் போகிறோம் என்பதை ஆண்டவர் அறிந்திருந்தாலும், அவர் நாம் பேச வேண்டும் என்பதையே விரும்புகிறார். நீங்கள் அவரை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதை அவரிடம் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள். அவர் அதில் மிகவும் பிரியப்படுகிறார்!

ஆண்டவர் மீதான உங்கள் அன்பை வெளிப்படுத்த ஒரு அழகான வழி உண்டு, அவர் உங்களுக்கு எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பதையும் மற்றும் அவர் உங்களுக்காக செய்த அனைத்தையும் பட்டியலிடுவதுதான் அந்த அழகிய வழி. ஆண்டவரைத் தொழுதுகொள்ளும்படி தாவீது தனது இதயத்தை ஊற்றி, அவரைக் குறித்து அவர் விரும்பும் அனைத்து விஷயங்களையும் பட்டியலிட்டதற்கான ஒரு சிறந்த உதாரணத்தை 18ஆம் சங்கீதம் வழங்குகிறது:

“என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன். கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்." (சங்கீதம் 18:1-2)

தாவீதின் முன்மாதிரியைப் பின்பற்றி அவருடைய ஜெபத்தை நம்முடையதாக ஆக்குவோம். ஆண்டவர் உங்களுக்கு யார், அவர் உங்களுக்காக என்ன செய்தார் என்பதை வெளிப்படுத்தி பின்வரும் ஜெபத்தை ஏறெடுங்கள்:

என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்; நீர் என் தேவன்:

நீர் எனக்கு இந்த அற்புதமான காரியங்களைச் செய்தீர்:

நீங்கள் ஒரு அதிசயம்.

Jenny Mendes

இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்.

இந்த திட்டத்தைப் பற்றி

ஆண்டவருடன் ஒரு உறவை வளர்த்துக்கொள்

ஆண்டவருடைய அபரிவிதமான அன்பை பற்றியும், நீ அவருடன் ஒரு நெருங்கிய தனிப்பட்ட உறவில் இருக்க வேண்டுமென்ற அவருடைய விருப்பத்தை பற்றியும் ஒரு ஆழமான புரிதலை பெற்றுக்கொள்ள அழைக்கப்படுகிறாய். ஆண்டவருடனான உனது உறவில் உரையாடல், நெருக்கம், அன்பு, சார்ந்திருப்பது மற்றும் மறுரூபமாகுவது என்பது போன்ற விஷயங்களை இந்த திட்டத்தில் ஆராயலாம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=buildarelationshipwithgodtamil