ஆண்டவருடன் ஒரு உறவை வளர்த்துக்கொள்மாதிரி

நீங்கள் தன்னிச்சையாக செயல்படுகிறீர்களா?
சுதந்திரமாக இருக்க வேண்டும், மற்றும் உங்களைத் தவிர வேறு யாரையும் நம்பாமல், உங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற எண்ணத்தினால், அதிக பாரத்தை நீங்கள் உணர்கிறீர்களா? தன்னம்பிக்கையுடன் இருத்தல் என்பது நம் சமூகத்தில் கொண்டாடப்படுகிறது; ஆனால் அது ஆண்டவர் உங்களுக்காக வைத்திருக்கும் தெய்வீக வடிவமைப்பு அல்ல.
யோவான் 15:5-6 வசனங்களில் இயேசு இவ்வாறு அறிவிக்கிறார்:
“நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்துபோவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோகும்."
முதல் பார்வையில், அதன் கிளைகள் நெருப்பில் எறியப்படும் என்று வாசிக்கும்போது, இந்த வசனம் நம்மை பயமுறுத்துவதாகத் தெரிகிறது. ஆனால் இயேசு இதைச் சொன்னபோது, தம்முடைய சீஷர்களை பயமுறுத்துவதற்காக இதைச் சொல்லவில்லை; உண்மையில், அவர் அவர்களை கவனித்துக்கொள்வதாக அவர்களுக்கு ஒரு ஆழமான வாக்குத்தத்தத்தை அளித்தார்.
ஒரு திராட்சைச்செடியானது ஒரு கிளைக்கு ஆதரவு மற்றும் வாழ்வாதாரத்தை வழங்குகிறது. ஒரு கிளையால் தனக்குத் தானே உணவளித்துக்கொள்ளவோ தனக்குத்தானே வளரவோ முடியாது; அது முற்றிலும் திராட்சைச்செடியைச் சார்ந்துதான் இருக்க வேண்டும். கிளை செய்ய வேண்டியதெல்லாம், திராட்சைச்செடி தனக்கு வழங்கும் அனைத்தையும் பெற்றுக்கொள்வதுதான்.
திராட்சைச்செடியிலிருந்து ஒரு கிளையைத் துண்டிக்க, குறிப்பாக அது ஆரோக்கியமான கிளையாக இருந்தால் நல்ல பலம் தேவைப்படும். ‘என்னில் நிலைத்திருங்கள்’ என்று இயேசு சொன்னபோது, என்னிடமிருந்து உங்களைத் துண்டித்துக்கொள்ளாமல் இருங்கள் என்பதை அவர் அர்த்தப்படுத்தினார்.
ஒரு கிளை அதன் செடியைச் சார்ந்திருப்பதுபோல, நீங்கள் ஆண்டவரைச் சார்ந்திருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நீங்கள் தொடர்ந்து இணைந்திருப்பதைத் தெரிந்துகொள்ளும்வரை, அவர் உங்களைப் போஷிப்பதாகவும், கவனித்துக்கொள்வதாகவும், உங்களைப் பராமரிப்பதாகவும் வாக்குப்பண்ணுகிறார்.
நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன்: ‘ஆண்டவரே, (உங்கள் பெயர்) இன்று உம்மைச் சார்ந்திருப்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். (உங்கள் பெயர்) உமது பிரசன்னத்தினால் போஷிக்கப்பட்டு, அன்பும், பலமும் பெற்று, உமக்கு அருகில் நெருங்கி வர உதவி செய்வீராக.’
குறிப்பு : உங்களுக்கு யோவான் 15ம் அதிகாரம் பற்றி நன்கு தெரிந்திருந்தால், கனி தராத ஒவ்வொரு கிளையையும் பிதா வெட்டிவிடுவார் என்று குறிப்பிடப்பட்ட பகுதியைப் பற்றி நீங்கள் அதிர்ச்சியடையலாம். நாளை நாம் அதைப் பற்றி ஆராய்வோம், ஆனால் அந்தப் பத்தியில் ஆண்டவரிடமிருந்து மற்றொரு அழகான வாக்குத்தத்தம் மறைந்துள்ளது என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் 😉
நீங்கள் ஒரு அதிசயம்.
Jenny Mendes
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

ஆண்டவருடைய அபரிவிதமான அன்பை பற்றியும், நீ அவருடன் ஒரு நெருங்கிய தனிப்பட்ட உறவில் இருக்க வேண்டுமென்ற அவருடைய விருப்பத்தை பற்றியும் ஒரு ஆழமான புரிதலை பெற்றுக்கொள்ள அழைக்கப்படுகிறாய். ஆண்டவருடனான உனது உறவில் உரையாடல், நெருக்கம், அன்பு, சார்ந்திருப்பது மற்றும் மறுரூபமாகுவது என்பது போன்ற விஷயங்களை இந்த திட்டத்தில் ஆராயலாம்.
More
இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=buildarelationshipwithgodtamil
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

ஆண்டவருடைய கணக்கு

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

மேடைகள் vs தூண்கள்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

வனாந்தர அதிசயம்
