ஆண்டவருடன் ஒரு உறவை வளர்த்துக்கொள்மாதிரி

ஆண்டவருக்கு மிகவும் பிடித்த பழம் எது? 🍇🥭🍉
காதலர் தின வாழ்த்துக்கள்! நம்மைச் சுற்றியுள்ள உலகம் பூமிக்குரிய அன்பைக் கொண்டாடிக்கொண்டிருக்கலாம், ஆனால் நாமோ அன்பின் உருவாகவே இருப்பவருடனான உறவைத் தொடர்ந்து பெற்றுக்கொள்ள நாடுகிறோம்.
உறவைத் தொடரலாம் 🥰.
நேற்று யோவான் 15ஆம் அத்தியாயத்தில் திராட்சைச்செடி மற்றும் அதன் கொடிகள் பற்றிய பத்தியை நாம் ஆராய்ந்தோம். நீங்கள் நன்றாக கவனித்திருந்தால், “நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர். என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார். நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்” என்று இயேசு சொன்ன பத்தியை நான் குறிப்பிடாமல் விட்டுவிட்டது உங்களுக்குத் தெரிந்திருக்கும். (யோவான் 15:1-3)
மீண்டும் சொல்லப்போனால், முதல் பார்வையில், இந்தப் பத்தி நம்மை பயமுறுத்துவதாய் இருக்கிறது. இருப்பினும், வேதாகமம் முதலில் ஆங்கிலத்தில் எழுதப்படவில்லை என்பதை நாம் நினைவில்கொள்வது முக்கியம். சில சமயங்களில் மூல பாஷையான கிரேக்க உரையில் உள்ள வார்த்தைகள் வெவ்வேறு நுணுக்கங்களைக் கொண்டிருக்கக் கூடும்.
"அறுத்துப்போடுதல்" என்பதற்கு "எழும்பப்பண்ணுவது, உயர்த்துவது, மேலே தூக்குவது" என்று பொருள் தரும் சொல்லைத்தான் இயேசு பயன்படுத்தினார். ஒரு தோட்டக்காரர் பழம் தராத ஒரு கிளையைக் காணும்போது, அது அதிக சூரிய ஒளியில் படும் வண்ணம் அதை உயர்த்துவது உட்பட, அதன் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார்.
நீங்கள் அதிக கனிகளைத் தரும்படிக்கு, ஒரு விடாமுயற்சியுள்ள தோட்டக்காரனைப்போல, ஆண்டவர் உங்களை உயர்த்த விரும்புகிறார். ஆண்டவர் நீங்கள் இருக்கிற வண்ணமே உங்களை நேசிக்கிறார், அவர் உங்களை மிகவும் நேசிக்கிறார்.
ஆண்டவர் நம்மோடு நெருங்கிப் பழக விரும்புபவராய் இருக்கிறார் மற்றும் நம்மை உருமாற்ற ஆவலுள்ளவராய் இருக்கிறார். கடந்த சில நாட்களாக நாம் அறிந்துகொண்டதைப்போல், ஆண்டவர் உங்களுடன் ஆழமாக ஒரு உறவு வைத்திருக்க விரும்புகிறார். அவர் உங்களுக்கு நெருக்கமான நபராக இருக்கவும், நீங்கள் அவரைச் சார்ந்திருக்கவும் வேண்டும் என்று விரும்புகிறார். இறுதியில், அவர் உங்களை சிறந்த ஒரு நபராக மாற்ற விரும்புகிறார். அவருக்கென்று கனிகள் தந்து கிறிஸ்துவின் சாயலைப் பிரதிபலிக்கும் ஒரு நபராக நீங்கள் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். (2 கொரிந்தியர் 3:18)
ஆண்டவருக்குப் பிரியமான கனிகளையே அவர் உங்களுக்குள் விளையச் செய்கிறார்! அவரால் உருமாற்றப்பட நீங்கள் தயாரா?
சிறிது நேரம் ஒதுக்கி, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பலன் கொடுக்காத (போதுமான) பகுதிகளை வெளிப்படுத்தும்படி ஆண்டவரிடத்தில் கேளுங்கள். அவரை ஒரு தெய்வீக தோட்டக்காரராக அந்தப் பகுதிகளுக்குள் வரவழைத்து, ‘பிதாவே, உமது விருப்பம் என்னில் நிறைவேறுவதாக’ என்று சொல்லுங்கள்.
நீங்கள் ஒரு அதிசயம்.
Jenny Mendes
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

ஆண்டவருடைய அபரிவிதமான அன்பை பற்றியும், நீ அவருடன் ஒரு நெருங்கிய தனிப்பட்ட உறவில் இருக்க வேண்டுமென்ற அவருடைய விருப்பத்தை பற்றியும் ஒரு ஆழமான புரிதலை பெற்றுக்கொள்ள அழைக்கப்படுகிறாய். ஆண்டவருடனான உனது உறவில் உரையாடல், நெருக்கம், அன்பு, சார்ந்திருப்பது மற்றும் மறுரூபமாகுவது என்பது போன்ற விஷயங்களை இந்த திட்டத்தில் ஆராயலாம்.
More
இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=buildarelationshipwithgodtamil
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

ஆண்டவருடைய கணக்கு

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

மேடைகள் vs தூண்கள்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

வனாந்தர அதிசயம்
