ஆண்டவருடன் ஒரு உறவை வளர்த்துக்கொள்மாதிரி

🚪 டக் டக்…. யார் அது?
ஆண்டவர் உங்களோடு மிகவும் நெருங்கிப் பழகுவார் என்பதை நேற்று உங்களுடன் நான் பகிர்ந்துகொண்டேன். அவருடனான உங்களது உறவு எப்படி இருக்கிறது? ஒருவேளை நீங்கள் இப்படி நினைக்கலாம், "இது நல்ல விஷயம்தானே!" அல்லது "இது இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாமே," "நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? ஆண்டவரோடு நெருங்கிப் பழகுவது சாத்தியம் என்பது எனக்குத் தெரியாதே" என்றெல்லாம் நினைக்கலாம்.
ஆண்டவர் உங்களோடு உறவாடி, நெருங்கிப் பழக ஆசைப்படுகிறார்! அற்புதமான ஒரு செய்தி என்னவென்றால், அவர் அப்படி நெருங்கிப் பழகத் தொடங்குவதற்கு ஒருபோதும் தாமதிப்பதில்லை 😃. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவர் உங்கள் இதயத்துக்குள் வர அவருக்கு இடமளிப்பதுதான்!
“இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்”. (வெளிப்படுத்தின விசேஷம் 3:20)
ஆண்டவருடனான உறவு மனிதனுடனான உறவிலிருந்து வேறுபட்டது என்றாலும், இரண்டிற்குமான அடிப்படைக் கோட்பாடுகள் ஒன்றுதான்: அதற்கு நேரம், முயற்சி மற்றும் உரையாடல் போன்றவை அவசியம்.
உங்கள் நண்பருடன் எவ்வளவு நேரம் நீங்கள் செலவிடுகிறீர்களோ, அவ்வளவு சிறப்பாக நீங்கள் அவர்களைப் பற்றி அறிந்துகொள்வீர்கள், மேலும் உங்கள் நட்பு வலுவடையும். ஆண்டவருடைய நட்பும் அப்படித்தான் வலுவடையும். அவருடைய வார்த்தையை வாசித்தல், அவருக்கு ஆராதனை செய்தல் மற்றும் ஜெபத்தில் நேரத்தைச் செலவிடுதல் போன்ற சில வழிகள் மூலம் நீங்கள் அவரை அறிந்துகொள்ளலாம். வரவிருக்கும் நாட்களில், நாம் சேர்ந்து, ஆண்டவருடனான உறவு என்ன என்பதை ஆராய்ந்து அறிவோம்.
"சிநேகிதருள்ளவன் சிநேகம் பாராட்டவேண்டும்; சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு." (நீதிமொழிகள் 18:24)
இந்த வாரம், ஆண்டவரிடத்தில் நெருங்கி வர உங்களை ஊக்குவிக்கிறேன். ஒவ்வொரு நாளும் 10 நிமிடங்களுக்கு டைமரை அமைத்து, கவனச்சிதறல் இல்லாமல் ஆண்டவரோடு நேரத்தை செலவிடுங்கள் (முடிந்தால் உங்கள் கைபேசியை சற்று அணைத்துவையுங்கள்! 😉). நீங்கள் சற்று நேரம் ஜெபிக்கலாம், வேதாகமத்தை வாசிக்கலாம் அல்லது அவருடைய பிரசன்னத்தில் அமைதியாக உட்காரலாம்.
நீங்கள் ஒரு அதிசயம்!
Jenny Mendes
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

ஆண்டவருடைய அபரிவிதமான அன்பை பற்றியும், நீ அவருடன் ஒரு நெருங்கிய தனிப்பட்ட உறவில் இருக்க வேண்டுமென்ற அவருடைய விருப்பத்தை பற்றியும் ஒரு ஆழமான புரிதலை பெற்றுக்கொள்ள அழைக்கப்படுகிறாய். ஆண்டவருடனான உனது உறவில் உரையாடல், நெருக்கம், அன்பு, சார்ந்திருப்பது மற்றும் மறுரூபமாகுவது என்பது போன்ற விஷயங்களை இந்த திட்டத்தில் ஆராயலாம்.
More
இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=buildarelationshipwithgodtamil
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

ஆண்டவருடைய கணக்கு

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

மேடைகள் vs தூண்கள்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

வனாந்தர அதிசயம்
