நம்மை பெலவீனப்படுத்தும் ஆயுதத்தை முறியடித்தல் - ஜான் பெவரேயுடன் மாதிரி

இன்றைய தேவ ஜனங்கள் மனம்திரும்ப வேண்டிய ஒரு முக்கியமான ஒரு காரியம்: உண்மையான அன்பு. இன்றைய திருச்சபைகளில் நடக்கும் ஆராதனைகளில், நடத்தும் ஊழியர்களில், வீடுகளில் எங்குமே உண்மையான அன்பை காண முடியவில்லை. சகிப்புத்தன்மை மற்றும் சட்டவாதம் மட்டுமே நிறைந்திருக்கிறது.
சகிப்புத்தன்மையின் ஒரு பிரச்சனை என்னவென்றால், அதையும் அன்பென்று சிலர் தவறாக எண்ணிவிடுகின்றனர். அன்புக்கு பொறாமை இல்லை, இறுமாப்பாயிராது, தன்னை புகழாது, தற்பொழிவை நாடாது, சினமடையது, தீங்கு நினையாது என்று இன்னும் பல்வேறு குணநலன்களுடன் அன்பென்றால் என்னவென்று 1 கொரிந்தியர் 13ல் நாம் நாம் வாசிக்கலாம். ஒரு வேளை இவைகளில் சில குணங்கள் உலக அன்பிலும் பேசப்படுபவையாக இருக்கலாம்.
உலக அன்பிற்கும், கிறிஸ்தவ அன்பிற்கும் உள்ள ஒரே வேறுபாடு என்னவென்றால், கிறிஸ்தவ அன்பு தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியும். "நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறோமென்று அறிந்துகொள்ளுகிறோம்" என்று கிறிஸ்தவ அன்பை குறித்து யோவான் குறிப்பிடுகிறார். (1 யோவான் 5:2)
அப்படியென்றால் என்ன அர்த்தம்? சகிப்புத்தன்மை கொண்டிருப்பதாலோ, தற்பெருமை இல்லாமல் இருப்பதாலோ, தீங்கு நினையாமல் இருப்பதாலோ நாம் கிறிஸ்துவின் அன்பை உடையவர்கள் என்று சொல்லிவிட முடியாது.
உண்மையான அன்பில், அன்பு மட்டும் அல்ல, சத்தியமும் நிறைந்திருக்கும். அன்பில்லாத சத்தியம், நியாயப்பிரமணத்திற்கு நம்மை கொண்டு செல்லும். எழுத்து கொள்ளும் என்று வேதமே நமக்கு சொல்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அநேகர், இதற்கு நேர் எதிராக, சாத்தியமில்லா அன்பின் பக்கம் சாய்கின்றனர். அங்கே சிட்சையோ, கடிந்துகொள்ளுதலோ, சபையின் அரோக்கியத்திற்கு அவசியமான வேத நெறிகளோ, உபதேசங்களோ நம்மால் காண முடியாது.
மனம்திரும்புதலுக்கு வழிநடத்தும் வார்த்தைகளை பேசும் ஊழியர்களோ மூப்பர்களோ இரக்கம், அன்பு, சாந்தம் இல்லாதவர்களாகவே பார்க்கப்படுகின்றனர். யோசித்து பாருங்கள்: ஒரு பார்வையற்ற மனிதன் மலையின் உச்சியில் நின்று கொண்டிருப்பதை நான் கண்டால், தவறி கீழே விழுந்துவிடுவாரோ என்ற இரக்கத்தில், அவர் நலன் மீது கொண்ட அக்கரையில், அன்பில், அவரை எச்சரித்து சரியாக வழிநடத்த முயற்சிக்க மாட்டேனோ?
நம்முடைய கிறிஸ்தவ சமுதாயத்தில் உண்மையான அன்போடு கூட மனம்திரும்புதலுக்கு அறைகூவல் விடும் சத்தங்கள் பெரும்பாலும் அன்பில்லாத, வெறுப்பின் சத்தங்களாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால், இம்மமைக்குரிய வாழ்வை குறித்து மட்டுமே அநேகர் சிந்தித்து கொண்டிருக்கிறோம். மறுமைக்குரிய வாழ்வை குறித்து யோசிப்பதே இல்லை.
மறுமையின் வாழ்வை ஒப்பிட்டு பார்க்கையில் இம்மைக்குரிய வாழ்க்கை காற்றை போல சட்டென்று கடந்து போகும் வாழ்க்கை. இரண்டு வாழ்விற்கும் உரிய வாழ்க்கை முறை வேறு. உண்மையான அன்பை கைக்கொள்ள, நாம் மறுமையின் வாழ்வின் கண்கள் வழியாக இவ்வுலக வாழ்வை நாம் பார்க்க ஆரம்பிக்க வேண்டும்.
இன்றைக்கு சபைக்கு அவசியப்படும் அன்பும் இத்தகைய உண்மையான அன்பு தான். உண்மையான அன்பு தவறை கண்டிக்கும், நீதியை உணர்த்தும், மனம் திரும்புதலை பேசும், அதே நேரத்தில் பொறுமையும் சாந்தமும், தயவும் பெருத்திருக்கும்.
இந்த தியான திட்டம் உங்களுக்கு பிரயோஜனமாக இருந்ததா?இன்னும் ஆழமாக அநேகம் காரியங்களை கற்றுக்கொள்ள நான் எழுதிய இந்த புத்தகத்தை வாசிக்க உங்களை அழைக்கிறேன். Killing Kryptonite.
இந்த திட்டத்தைப் பற்றி

ஒரு சூப்பர்மேன் எப்படி ஒவ்வொரு எதிரயையும் வீழ்த்துகிரானோ, கிறிஸ்துவை பின்பற்றுகிற உங்களுக்கும் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களை மேற்கொள்ள உங்களுக்கு ஒரு இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட ஆற்றல் உள்ளது. ஆனால் சூப்பரமேனுக்கும் உங்களுக்கும் ஒரே ஒரு பிரச்சனை, கிரிப்டோனைட் (கதையினுள் உள்ள கற்பனை பொருள்)உங்களுடைய பெலனை திருடுவது தான். இந்த திட்டம் உங்கள் வாழ்க்கையில் உள்ள அந்த ஆவிக்குரிய கற்பனை கதாபாத்திரத்தை வேரோடு பிடுங்கி எரிந்து, தேவன் உங்களுக்கு அளித்த அசாதரமான ஆற்றலை வரம்புகளின்றி வாழ்க்கையில் பூர்த்தி செய்திட உதவிடும்
More