நம்மை பெலவீனப்படுத்தும் ஆயுதத்தை முறியடித்தல் - ஜான் பெவரேயுடன் மாதிரி

Killing Kryptonite With John Bevere

7 ல் 5 நாள்

அன்றைய இஸ்ரேல் மக்களிடையே புறக்கணிக்கப்பட்ட யெகோவா உருவானதெப்படி? இன்றைய திருச்சபையில் புறக்கணிக்கப்பட்ட இயேசு உருவானதெப்படி? இரண்டுமே நம்முடைய உண்மையான மனந்திரும்புதலுக்குப் பதிலாக இருதயக்கடினத்துடன் இருந்ததே மற்றும் இருப்பதே காரணம்.

இப்போதும், ​​பதற்றப்படாதிருங்கள். மனந்திரும்புதல் அடிமைத்தனத்தை உருவாக்கும் வகையில் பிரசங்கிக்கப்பட்டுள்ளதை நான் அறிவேன், ஆனால் அது வேதாகம மனந்திரும்புதல் அல்ல. உண்மை என்னவென்றால், நமக்கு மனந்திரும்புதல் தேவை, ஏனென்றால் அது இல்லாமல் தேவன் நமக்காக வைத்திருக்கும் வாழ்க்கையை அனுபவிக்க முடியாது.

இதைகுறித்து வேதாகமம் சொல்வதைப் பார்த்தால், புதிய ஏற்பாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் மனந்திரும்புதல் கிறிஸ்துவில் நம் வாழ்வின் அவசியமான ஒரு பகுதி என்று தெளிவாக கூறுவதைக் காணலாம். இதை நேரடியாகச் சொல்லும் நபர்களின் பட்டியலில் பேதுரு, பவுல், யோவான், யாக்கோபு, மற்ற சீடர்கள், இயேசு, பிதாவாகிய தேவன் கூட அடங்குவர். இது ஒரு பெரிய மற்றும் தவரற்ற தெளிவான உண்மை.

இதன் பொருள் என்னவென்றால், அறியப்பட்ட பாவத்திலிருந்து மனந்திரும்பாமல் இயேசு கிறிஸ்துவில் உண்மையான விசுவாசம் நமக்குள் இருக்க முடியாது. பாவம் என்றால் என்ன? பாவம் என்பது தேவன் நமக்காக வைத்திருக்கும் சிறந்ததின் எதிர் உரை ஆகும்.

அதாவது பாலியல் ஒழுக்கக்கேடு, வதந்திகள் மற்றும் மன்னிக்க இயலா தன்மை போன்றவற்றிலிருந்து விலகிச் செல்ல மறுத்தால் நாம் கிறிஸ்துவிடம் மனம் திரும்ப முடியாது.

நீங்கள் இவ்வாறான காரியங்களில் ஈடுபாடு கொண்டிருக்கும் போது, ஒரு கிறிஸ்தவர் என்று உங்களால் எப்படி சொல்ல முடியும்? உண்மை என்னவென்றால், புதிய ஏற்பாட்டில் ஐநூறுக்கும் மேற்பட்ட நடத்தை கட்டளைகள் உள்ளன. தேவன் இந்த கட்டளைகளை நமக்கு அளிக்கிறார், ஏனென்றால் உங்களை அழிக்கக்கூடியதை அவர் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார் - அவர் உங்களை அதிகமாக நேசிக்கிறார்.

ஆனால், நம்மை நமது பாவங்களிலிருந்து விடுவிப்பதற்காக கிறிஸ்து மரித்து உயிர்த்தார். ஆனால் இன்னும் நாம் நமது பாவங்களை பிடித்துக் கொண்டால், நாம் ஒரு புறக்கணிக்கப்பட்ட இயேசுவை நம் வாழ்வில் உருவாக்கி, நம்முடைய நம்பிக்கை ஒரு கற்பனையாகவே இருந்துவிடும்.

வேதாகம மனந்திரும்புதல் என்பது மனத்தாழ்மையின் இறுதிச் செயலாகும், இது நமக்கான தேவனின் கிருபையின் வாழ்க்கையை நமக்கு திறக்கிறது. உண்மையில், நாம் நம்மைத் தாழ்த்திக் கொள்ளும்போது நமக்கு அருள் தருவதாக தேவன் வாக்குறுதி அளிக்கிறார் (யாக்கோபு 4, 1 பேதுரு 5). அதனால்தான் மனந்திரும்புதல் மிகவும் முக்கியமானது. . . நாம் அதை குறித்து வெட்கப்பட கூடாது. இதைத் தேடுவோர் மற்றும் விசுவாசிகள் அறிய வேண்டும். இது நம்முடைய விசுவாசத்திற்கும் இரட்சிப்பிற்கும் இன்றியமையாதது!

மனந்திரும்புதல் என்பது நம் மனதை மிகவும் ஆழமாக மாற்றுவது. நமது ஆளுமையை நம் இருப்பின் மையத்திலிருந்து மாற்றுவது. நாம் கிறிஸ்துவிடம் திரும்பும்போது, ​​அவர் நம்மைப் புதிய மனிதனாக மாற்றுகிறார், அவரைப் போல வாழ நமக்கு அருளைக் கொடுக்கிறார்.

இதுவே வேதாகம மனந்திரும்புதல் - இது கிறிஸ்துவில் மீண்டும் உருவாக்கப்படும் செயல்முறையாகும், இது தேவனின் தன்மையையும் நன்மையையும் நம் உலகில் பிரதிபலிக்கச் செய்யும். இதைவிட பெரிய அழைப்பு ஏதேனும் உங்களுக்கு உள்ளதா?

இந்த திட்டத்தைப் பற்றி

Killing Kryptonite With John Bevere

ஒரு சூப்பர்மேன் எப்படி ஒவ்வொரு எதிரயையும் வீழ்த்துகிரானோ, கிறிஸ்துவை பின்பற்றுகிற உங்களுக்கும் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களை மேற்கொள்ள உங்களுக்கு ஒரு இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட ஆற்றல் உள்ளது. ஆனால் சூப்பரமேனுக்கும் உங்களுக்கும் ஒரே ஒரு பிரச்சனை, கிரிப்டோனைட் (கதையினுள் உள்ள கற்பனை பொருள்)உங்களுடைய பெலனை திருடுவது தான். இந்த திட்டம் உங்கள் வாழ்க்கையில் உள்ள அந்த ஆவிக்குரிய கற்பனை கதாபாத்திரத்தை வேரோடு பிடுங்கி எரிந்து, தேவன் உங்களுக்கு அளித்த அசாதரமான ஆற்றலை வரம்புகளின்றி வாழ்க்கையில் பூர்த்தி செய்திட உதவிடும்

More

இத்திட்டத்தை வழங்கியமைக்காக ஜான் மற்றும் லிசா பெவெரே அவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவல் அறிய, http://killingkryptonite.com க்கு செல்லவும்.