திட்ட விவரம்

புதையல் வேட்டை 2மாதிரி

புதையல் வேட்டை 2

5 ல் 5 நாள்




உன் பாக்கெட்டில் சூப்பர் பவர்

பிடி

பூமியில் உள்ள வலிமையான உயிரினங்கள் எது என்று உனக்கு தெரியுமா? பார்க்கப்போனால், யானைகள் தரையில் இருந்து மரங்களை பிடுங்கி, மரக்கட்டைகளை (அதனுடைய மூக்கால்!) தூக்கலாம். ஆனால் அது உண்மையில் ஒன்றுமில்லை. மனிதர்கள் தங்கள் சொந்த எடையை விட அதிகமாக, தலைக்கு மேல் தூக்கமுடிவதென்பது அரிது. ஆனால் பூச்சிகளின் உலகத்தைப் பற்றி சிந்தி. எறும்பு தன் எடையில் 5,000 மடங்கிற்கு மேல் தூக்கமுடியும் என்பது உனக்கு தெரியுமா? ஐயோ! நீ நகரப் பேருந்தை தலைக்கு மேல் சுமந்து செல்வது போன்றது! சரி, எறும்புகள் செய்வது அசாதாரணமான ஒன்று, ஆனால் அதெல்லாம் உண்மையில் ஒன்றுமில்லை…

நம் தேவன் கண்டங்களை நகர்த்துகிறார் - இல்லை, கிரகங்கள் - இல்லை, விண்மீன் திரள்கள்! அவருடைய சக்தியை சந்தேகிக்க எந்த காரணமும் இல்லை.

ஆம், நம் ஆண்டவர் ஈடு இணையற்றவர்! அவர் இயேசுவாக இந்த பூமியில் நடந்தபோது, ​​அதுவரைக்கும் எவரும் கண்டிராத அற்புதமான விஷயங்களை அவர் செய்தார். அவர் தண்ணீரில் நடப்பது, பேய்களை விரட்டுவது, ஊனத்தை ஒரு நொடியில் குணமாக்குவது போன்ற விஷயங்களைச் செய்தார் என்பது உனக்கு தெரியும். ஆனால் இயேசு என்ன சொல்கிறார் என்பதைப் பாரு...

படி

மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான். நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.
யோவான் 14: 12-13

பார்

ஆஹா! இயேசுவின் மீது உனக்கு விசுவாசம் இருந்தால், எந்தமாதிரி விஷயங்களை நீ செய்வாய் என்று அவர் சொல்கிறார்? பெரிய காரியங்களையா? நீ ஜோக் தானே செய்கிறாய்?

ஆனால் இன்னொரு நேரத்தில், உனக்கு கடுகளவு விசுவாசம் இருந்தாலும் கூட, நீ ஒருமலையை அசைக்க கட்டளையிட்டால், அது அசையும் என்று இயேசு சொல்லியிருக்கிறார்! உண்மையாகவே? ஒரு மலையையா? ஆம், அப்படித்தான் இயேசு சொன்னார்.

"உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது" என்றும் அவர் கூறியுள்ளார் (மத்தேயு 17:20)

உன் விசுவாசம் எவ்வளவு பெரியது? ஒரு விதையின் அளவா? ஒரு மண் குருணையின் அளவா? அது பார்க்கக்கூடிய அளவு பெரியதா? எதுவாயினும், உன் விசுவாசம் வளரவேண்டும் என்று நீ ஆசைப்படு.

உன் விசுவாசம் ஒரு தசையைப்போன்றது. தசை எவ்வாறு பெரிதாகும்? உடற்பயிற்சி செய்வதினால். விசுவாசமும் அதைப்போன்ற ஒன்றே. முதலில், சிறிதாக ஆரம்பி, சிறிய ஆவிக்குரிய கூழாங்கற்களை நகர்த்துவதுபோல். அப்புறம், பெரிய ஆவிக்குரிய பாறைகளை நகர்த்தும் அளவிற்கு உன் விசுவாசம் நீ செல்ல முடியும். பின் ஒரு நாள், உன் விசுவாசம் ஒரு மலையையே நகர்த்த முடியும்.

இருப்பினும், முக்கிய விஷயம் என்னவென்றால், உன் விசுவாசம் எவ்வளவு பெரியது என்பது முக்கியமல்ல, உன் ஆண்டவர் எவ்வளவு பெரியவர் என்பதுதான். ஆண்டவர் எவ்வளவு அற்புதமானவர் என்பதை நீ கொஞ்ச அளவு புரிந்து கொண்டால் போதும், பெரிய சவால்கள் சிறிய சவால்களாக மாறும்.

எடு

அவருள் நீ பெரிய காரியங்களைச் செய்வாய் என்று இயேசு சொல்லியிருக்கிறார். இதை நீ விசுவாசிக்கிறாயா? உன்னை வழிநடத்தும்படி இப்போதே அவரிடம் கேள், பின்வாங்க வேண்டாம்.

புதையல் வேட்டைத் திட்டம் பகுதி 3ல் கண்டிப்பாக சேர்ந்து படிக்கவும் :)

நீ சூப்பர்!

Dr. Andy

முழு புதையல் வேட்டை வென்ச்சர் (Treasure Hunt Venture) ஆய்வையும் நீ படிக்கலாம்! தொடரை இங்கே பெறலாம்: https://www.treasurehuntproject.com/

பாக்கெட்-மாங்காவை (comic) இங்கே படிக்கலாம்:

be07c9_2a4cfe5e22f44f6dade5ed16563c656c.pdf (filesusr.com)

வேதவசனங்கள்

நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

புதையல் வேட்டை 2

வியப்படைவதற்கு தயாராகு. ஆண்டவரின் அற்புதமான அனுபவத்திற்குள் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த புதையல் வேட்டை தொடர் உன் மனதைக் கவரும்! இந்த மூன்று திட்டங்களுடைய கருப்பொருட்கள் இங்கே: விசுவாசம், அடையாளம் மற்றும் முடிவைக் ...

More

Every Day Japan க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.treasurehuntproject.com/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்