திட்ட விவரம்

புதையல் வேட்டை 2மாதிரி

புதையல் வேட்டை 2

5 ல் 2 நாள்




நீ முற்றிலுமாக புதிதாக்கப்பட்டாய்!

பிடி

உலகிலேயே மிகவும் வேகமான மனிதன் உசைன் போல்ட் ஆக இருக்கலாம், அவரால் ஒரு மணி நேரத்தில் 28 மைல்கள் ஓட முடியும். அப்படி ஒரு வேகத்தை பெற அவர் பல வருடங்கள் பயிற்சி செய்தார். நிச்சயமாகவே, அவர் பிறந்த முதல் வருடத்தில் அவரால் ஓடியிருக்க முடியாது. ஆனால் ஒரு சிறிய மான் அது பிறந்த அடுத்த நாளிலேயே உசைன்னுக்கு சமமான வேகத்தில் ஓட முடியும் என்பது உனக்கு தெரியுமா?

குட்டி மான்கள் சிறப்பு தன்மையுடன் பிறக்கின்றன, நாம் இயேசுவிடம் வரும்போது, நாம் சிறப்புடன் மீண்டும் பிறக்கிறோம். நாம் இயேசுவிடம் வரும்போது, அவர் அனைத்தையும் மாற்றுகிறார், இதனால் நாம் திடீர்ரென்று புதிய சாத்தியக்கூறுகளுடன் ஒரு புதிய வாழ்க்கையைப் பெறுகிறோம்!

எல்லோருக்கும் புழுக்களை பிடிப்பதில்லை, ஆனால் அநேகருக்கு பட்டாம்பூச்சிகளை பிடிக்கும். இரண்டுமே ஒரே ஜீவன்தான் ஆனால் முற்றிலும் புதிதான தோற்றத்தை கொண்டது. ஒரு கூச்சில் மூடப்பட்டிருக்கும் அந்த புழுவானது முற்றிலுமாக குழைக்கப்பட்டு பல்லாயிரம் மைல்கள் தாண்டி மேகத்துக்குள் பறந்து செல்லும் அழகும் வலிமையையும் வாய்ந்த ஒரு ஜீவனாக மறுவடிவம் பெற்றுக்கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது.

ஆண்டவருடைய வார்த்தை சொல்கிறது: இப்படிப்பட்ட ஒன்றுதான் நமக்கும் நடந்ததென்று…

படி

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின.
2 கொரிந்தியர் 5:17

பார்

நீ இயேசுவுக்குள் இருக்கும்போது, என்ன நடக்கிறது?

சரியாக சொன்னாய் - ஒரு புதிய படைப்பு.

நீ புதியதானாய். நீ பழைய வழியில் வாழத் தேவையில்லை. நீ செய்த பழைய சுயநலமான விஷயங்களைத் தான் பாவம் என்கிறோம். இப்போது நீ இயேசுவுக்கு சொந்தமானதால், பாவத்திற்கு பதிலாக நன்மை செய்ய விரும்புகிறாய்.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், இந்த உலகில் நீ வாழும்வரை, உன்னில் ஒரு பங்கு அந்த பழைய விஷயங்களில் பல காலம் ஊறியதால் அது திரும்பவும் அதற்க்கு செல்ல முயற்சிக்கும் (நாய் தன் சொந்த வாந்தியை சாப்பிட செல்வதுபோல், அல்ல வேறு மோசமான எதையாவது!). நம் எதிரியானவன், பிசாசு, உன்னை பாவம் செய்ய வைக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வான். ஆனால் இங்கே நல்ல செய்தி என்னவென்றால், நீ இப்போது அவ்வாறு செய்யவேண்டாம். நீ இனி ஒருபோதும் பாவத்திற்கு அடிமையில்லை.

இப்படி சிந்தித்துப் பார் : நீ பழைய இறந்த ஒருவராகவும் புதிய விடுதலை பெற்ற இன்னொருவராகவும் இருக்கிறாய். இரண்டு நாய்களைப் போல - ஒரு நல்ல நாய், ஒரு கெட்ட நாய் (வாந்தியை சாப்பிடும் அந்த நாய்). நீ நன்மையைத் தேர்ந்தெடுக்கும் போது, நல்ல நாயை வளர்க்கிறாய். தீமையைத் தேர்ந்தெடுக்கும் போது, கெட்ட நாயை வளர்க்கிறாய். அந்த கெட்ட நாய் கடிக்கும். நீ எந்த நாயை வளர்கிறாயோ அதுவே வளர்ந்து வலிமையாகும். ஆண்டவருக்கு எதிராக பாவம் செய்தால், கெட்ட நாய் வலிமை பெறும். ஆண்டவருக்கு கீழ்படிந்தால் நல்ல நாய் வலிமை பெறும். இதில் நீ தேர்வு செய்ய முடியும்.

எடு

இயேசுவுக்குள், நீ என்ன ஆகியிருக்கிறாய்?

ஆம், நீ முற்றிலும் புதியது ஆனாய்.

ஆகையால், பழையபடி விஷயங்களை செய்யத் தூண்டும்போது நீ என்ன செய்வாய்?

முதலில், கெட்ட நாய் பட்சிக்க முயற்சிக்கிறது என்பதை நினைவில்கொள். பிறகு, அதற்க்கு பதிலாக நல்ல நாயை போஷி - ஆண்டவருடைய உதவிக்காக ஜெபி - மற்றும் நீ பெற்றுக்கொண்டாய் என்று விசுவாசி!

நீ சூப்பர்!

Dr. Andy

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

புதையல் வேட்டை 2

வியப்படைவதற்கு தயாராகு. ஆண்டவரின் அற்புதமான அனுபவத்திற்குள் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த புதையல் வேட்டை தொடர் உன் மனதைக் கவரும்! இந்த மூன்று திட்டங்களுடைய கருப்பொருட்கள் இங்கே: விசுவாசம், அடையாளம் மற்றும் முடிவைக் ...

More

Every Day Japan க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.treasurehuntproject.com/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்