திட்ட விவரம்

புதையல் வேட்டை 2மாதிரி

புதையல் வேட்டை 2

5 ல் 4 நாள்




உலகிலேயே மிகச் சிறந்த “கூட்டணி”!

பிடி

உங்களை சிறந்த குடும்பமாக விளங்கச்செய்வது எது? உங்கள் வீட்டில் அம்மா சுவையான உணவுகளை தயார் செய்கிறார்களா? உன் அப்பா உன்னுடன் கால்பந்து விளையாடுவாரா? ஏதாவது சண்டையென்றால் உன் சகோதர சகோதரிகள் உன் சார்பாக நிற்கிறார்களா? நீ வீடு திரும்போது உன் செல்லப்பிராணி உன்னிடம் ஓடி வருகிறதா?

இவை அனைத்தும் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது, அல்லவா? கிறிஸ்துமஸ் அன்று பரிசுகளை பகிர்ந்து கொள்வது, கோடைக்காலத்தில் கடற்கரை சுற்றுலா செல்வது, குச்சி ஐஸ் சாப்பிட்டுக்கொண்டே வானவேடிக்கைகளை பார்ப்பது, சாப்பாட்டு மேஜையைச் சுற்றி உட்கார்ந்து பிறந்தநாள் வாழ்த்துப்பாடி கேக் வெட்டிக் கொண்டாடுவது. இவை அனைத்தையும் கேட்க மிகவும் சிறப்பாக இருக்கிறது.

ஒருவேளை உனக்கு கேக், சுற்றுலா, சிற்றுண்டிகள் இல்லாமல் இருக்கலாம். ஒருவேளை உனக்கு, அம்மாவோ, அப்பாவோ, சகோதர சகோதரிகளோ இல்லாமல் இருக்கலாம். ஒருவேளை நீ அவர்களை இழந்ததால் உன் உள்ளத்தில் ஒரு பெரிய வெற்றிடம் இருக்கலாம். ஒருவேளை "குடும்பம்" என்ற சொல் உன்னை வேதனைப்படுத்துவதாக இருக்கலாம்.

ஒரு அற்புதமான குடும்பம் உனக்கு இருக்கிறதோ இல்லையோ, குடும்பம் என்பது முக்கியமான ஒன்று. இருந்தாலும், இப்போது ஒரு அற்புதமான செய்தியைப் பெற தயாராகு. நீ ஆண்டவருக்கு சொந்தமான ஒருவராக இருந்தால், நீ இன்னொரு குடும்பத்தின் உறுப்பினராகவும் இருக்கிறாய்... அது மிகவும் பெரிய ஒரு குடும்பம்! அதுதான் ஆண்டவரின் குடும்பம்.

இதில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இந்த குடும்பத்திற்கு ஒரு சிறப்பான தந்தை உண்டு, நம் பிதா. அவர் நம் ஒவ்வொருவரையும் அறிவார் மற்றும் நம் ஒவ்வொருவரிலும் களிகூருகிறார். அவருடைய குமாரன், இயேசு, அவர் எப்படிப்பட்டவர் என்பதன் பரிபூரண பிரதிபலிப்பாக இருக்கிறார், மேலும் இயேசு தந்தையின் இதயத்தை கீழே உள்ள பைபிள் கதையில் நமக்குக் காட்டுகிறார்...

படி

அப்பொழுது, சிறு பிள்ளைகளை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள். இயேசு அதைக் கண்டு, விசனமடைந்து: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவன் அதில் பிரவேசிப்பதில்லையென்று, மெய்யாகவே உஙகளுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்.
மாற்கு 10: 13-16

பார்

இயேசுவுக்கு, ஒவ்வொரு குழந்தையும் விசேஷமானவர். ஒவ்வொருவருக்கும் நேரம் ஒதுக்கினார். இயேசு ஒவ்வொரு குழந்தையையும் அனைத்துக் கொண்டார். அவர்களைப் பார்த்து சிரித்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் ஒவ்வொருவரையும் மற்றவர்களை விட நன்றாக அறிந்திருந்தார்.

அவர் உலகைப் படைப்பதற்கு முன்னதாகவே உன்னை அறிந்திருந்தார் என்று பைபிள் சொல்வது உனக்கு நினைவிருக்கிறதா! அப்போது, அவர் உன்னை அவருடையவராகத் தேர்ந்தெடுத்தார். அது சரி, உன் பெற்றோர், அல்லது தாத்தா, பாட்டி அல்லது கொள்ளு தாத்தாக்கள் இருப்பதற்கு முன்பே, அவர் உன்னை ஏற்கனவே அறிந்திருந்தார், மேலும் உனக்காக ஒரு சிறப்புக் கனவைத் திட்டமிட்டிருந்தார். அந்த கனவின் ஒரு பகுதி, நீ என்றென்றும் அவருடைய குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பாய் என்பதாகும்.

எடு

ஆண்டவருடைய குடும்பத்தை உலகின் மிக அற்புதமான இடமாக மாற்ற நீ எப்படி உதவலாம்? ஒரு நிமிடம் ஒதுக்கி ஆண்டவரிடம் கேள்.

நீ சூப்பர்!

Dr. Andy

வேதவசனங்கள்

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

புதையல் வேட்டை 2

வியப்படைவதற்கு தயாராகு. ஆண்டவரின் அற்புதமான அனுபவத்திற்குள் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த புதையல் வேட்டை தொடர் உன் மனதைக் கவரும்! இந்த மூன்று திட்டங்களுடைய கருப்பொருட்கள் இங்கே: விசுவாசம், அடையாளம் மற்றும் முடிவைக் ...

More

Every Day Japan க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.treasurehuntproject.com/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்