திட்ட விவரம்

புதையல் வேட்டை 2மாதிரி

புதையல் வேட்டை 2

5 ல் 3 நாள்




உன் ரகசிய சக்திவாய்ந்த ரத்தினம்

பிடி

நீ ஜாலியாக இருக்க வேண்டுமா? இந்த உலகத்தில் ஜாலியாக இருக்கும் மக்களிடம் ஒரு ரகசிய சக்திவாய்ந்த ரத்தினம் உள்ளதென்று உனக்கு தெரியுமா? உனக்கும் அதுவேண்டும் தானே? ஆண்டவருடைய உலகத்தைப் பார்ப்பதுதான் அந்த சக்திவாய்ந்த ரத்தினம் - அவ்வளவுதான், மிகவும் சுலபம்.

ஆண்டவர் மிகவும் ஆச்சரியமான ஒரு உலகத்தைப் படைத்தார், நீ அதை அளவிற்கு உண்மையாக பார்க்கிறாயோ, அவ்வளவு மகிழ்ச்சியடைவாய். அப்படியா? இது அவ்வளவு ஈஸியா?

ஆம், ஆண்டவருடைய உலகத்தை பற்றி சற்று யோசித்துப் பார்... காண்டாமிருகம் மனிதர்களை விட வேகமாக ஓடமுடியும் என்று உனக்கு தெரியுமா? ஒரு குண்டான ஓடும் காண்டாமிருகத்தை கற்பனை செய்து பார் - ஹாஹா! பாண்டாக்கள் மிகவும் அழகாக இருக்கின்றன, ஆனால் அது ஒரு நாளில் 50 முறை கழிக்கும் என்று உனக்கு தெரியுமா? கக்கா போகும் பாண்டாக்களை எண்ணிப் பார்- ஹாஹா!

சிரிப்பது ஒரு ஜாலியான உணர்ச்சி, எல்லாம் நன்றாக செல்லும்போது நீ ஜாலியாக இருக்கிறாய் - அதவாது ஒரு நல்ல வீட்டில் வாழும்போது, அல்லது நல்ல நண்பர்கள் சுற்றியிருக்கும் போது, படிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெறும்போது, அல்லது உனக்கு மிகவும் பிடித்த சுவையில் இரண்டு கரண்டி ஐஸ் கிரீம் கொண்ட கோனை உன் கைகளில் பிடித்துக்கொண்டிருப்பது.

ஆனால் சற்றுப் பொறு... அந்த சக்திவாய்ந்த ரத்தினம் என்பது நீ ஜாலியாக இருப்பது பற்றி மட்டும் கிடையாது, அதற்கும் மேல் ஆழமானது. நண்பர்கள், நல்ல மதிப்பெண்கள், ஐஸ் கிரீம் ஆகியவை சந்தேகமின்றி நீ ஜாலியாக இருக்க உதவும். ஆனால் இவைகளை நீ இழக்க நேரிடலாம்! அப்படியானால் என்ன செய்வது?

ஜாலிக்கும், அதற்கும் மேல் ஆழமான ஒன்றான மகிழ்ச்சிக்கும் இடையில் உள்ள வித்தியாசம் இதுவே. எல்லாம் குதூகலமாகவும் நன்றாகவும் இருக்கும்போது நாம் ஜாலியாக உணர்கிறோம். ஆனால் உண்மையான மகிழ்ச்சிக்கு இப்படிப்பட்டவை தேவையில்லை. அதை அனைத்தையும் நீ இழந்தபின்னும் மகிழ்ச்சி உனக்கு இருக்கும், ஏனென்றால் மகிழ்ச்சி என்பது மாறாத ஒருவரைச் சார்ந்தது - ஆண்டவர் - நம் அற்புதமான ஆண்டவர்.

படி

கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.
பிலிப்பியர் 4:4

பார்

இந்த வசனம் உன்னை என்ன செய்யச்சொல்கிறது?

அடடே, இது ரொம்ப ஈஸி தானே? மகிழ்ச்சியாய் இரு! சந்தோஷமாய் இரு!

இப்படி கட்டாயப்படுத்தி சந்தோஷமா இரு என்று சொல்வது கொஞ்சம் அதிகமா தெரியுதா?

பார்க்கப்போனால், ஆண்டவர் உன் தந்தை, அவர் மிகவும் நல்ல தந்தையாய் இருக்கிறார். நல்ல தந்தைகள் தங்கள் குழந்தைகளை பராமரிக்க சில விதிகளை வைக்கிறார்கள். சிறு பிள்ளைகள் அநேக நேரங்களில் ஆபத்தான விஷயங்களை செய்கின்றனர். அவர்களை மூச்சுத் திணற வைக்கக்கூடிய பொருட்களை வாயில் போடுகிறார்கள், அல்லது பென்சில்களுடன் ஓடுகிறார்கள் அல்லது தனியாக தெருவைக் கடக்க முயற்சிக்கிறார்கள். விதிகள் இல்லாதது மிகவும் ஆபத்தானது.

பெரும்பாலான பிள்ளைகள் விதிகளை விரும்புவதில்லை. ஆனால், ஆண்டவரின் ஒவ்வொரு விதிமுறை அல்லது கட்டளைகளுக்குப் பின்னால் உனக்கு எது சிறந்தது என்பதை அறிந்த ஒரு தந்தை இருக்கிறார் என்பதை உணரும் அளவுக்கு உனக்கு வயதிருக்கும் என்று நான் நம்புகிறேன்.

ஆண்டவர் யார் என்பதையும், அவர் என் செய்தார் என்பதையும் நீ சிந்திக்கும்போது, நீ மகிழ்ச்சியடைய அநேக காரணங்களை கண்டறிவாய். மற்றும், நீ மகிழ்ச்சியாய் இருக்க தேர்ந்துகொள்ளும் ஒவ்வொருமுறையும், நீ இன்னும் பெலனடைகிறாய். மகிழ்ச்சி என்பது ஒரு தசையைப்போன்றது - நீ அதை எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துகிராயோ, அவ்வளவு வலிமை பெறுகிறது!

எடு

மகிழ்ச்சி என்னும் உன் தசையை உபயோகிக்க முயற்சி செய்--

உணவு உண்ணும் ஒவ்வொரு முறையும், ஆண்டவரை பற்றி நீ தெரிந்துகொண்ட, உன்னை சந்தோஷப்படுத்தக்கூடிய ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி சில வினாடிகள் சிந்தி - பிறகு சிரி. முன்னேறி போ! அது உண்மையாக இல்லாதது போல் தோன்றினாலும் பரவாயில்லை, ஆழ்ந்த மூச்சு இழுத்துவிட்டு சிரி!

ஆம், நாம் சிரிக்காமல் இருப்பதற்கு சில காரணங்கள் இருக்கலாம், ஆனால், ஆண்டவருடைய உலகத்தை நீ உண்மையாகக் காணும்போது, புன்னகைப்பதற்கு உனக்கு பல கோடி கரணங்கள் உள்ளன.

அதுவே உன் ரகசிய சக்திவாய்ந்த ரத்தினம் - ஆண்டவருடைய அற்புதமான உலகைக் கண்டு மகிழ்ச்சியை தேர்ந்துகொள்.

நீ சூப்பர்!

Dr. Andy

வேதவசனங்கள்

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

புதையல் வேட்டை 2

வியப்படைவதற்கு தயாராகு. ஆண்டவரின் அற்புதமான அனுபவத்திற்குள் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த புதையல் வேட்டை தொடர் உன் மனதைக் கவரும்! இந்த மூன்று திட்டங்களுடைய கருப்பொருட்கள் இங்கே: விசுவாசம், அடையாளம் மற்றும் முடிவைக் ...

More

Every Day Japan க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.treasurehuntproject.com/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்