திட்ட விவரம்

உப்பும் வெளிச்சமும்மாதிரி

Salt And Light

5 ல் 5 நாள்

"பூமிக்கு உப்பாக இருங்கள்" என்று இயேசு சபைக்கு சொன்னதின் மூலம், என்ன நோக்கத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டுமென்று இயேசு எதிர்பார்க்கிறார்?



நம்முடைய வார்த்தைகள் மூலமாகவும், செயல்பாடுகளின் மூலமாகவும் நாம் எந்தளவிற்கு இயேசு இந்த பூமிக்கு வெளிப்படுத்துகிறோம்? தனி நபராகவும், சபையாகவும் எந்தெந்த முறைகளில் நாம் இந்த சமுதாயத்திற்கு இயேசுவை வெளிபடுத்தி உண்மையான சாட்சி பகிர முடியும்?



உதாரணத்திற்கு, யுத்தங்களினால் பெரும் இழப்புகளில் கஷ்டப்படும் தேசங்களுக்காக ஜெபிப்பதின் மூலம் நாம் இந்த பூமிக்கு உப்பாக செயல்பட முடியும். வறுமையில் வாழும் மக்களுக்கு தியாகத்தோடு நாம் செய்யும் உதவிகளால் இந்த உலகத்தில் நாம் வெளிச்சமாக செயல்பட முடியும். சபையானது ஒடுக்கப்படுகிறவர்களின் பக்கம் நின்று, அவர்களுடைய நியாயத்தை தேட வேண்டும். சமுகத்தால் ஒதுக்கப்பட்டவர்களை இயேசுவை போலவே சபையும் நேசிக்க வேண்டும்.



இறையியலாளரும் போதகருமான டிம் கெல்லர் அவர்கள், தாராளமான நீதி என்ற தன்னுடைய புத்தகத்தில் இவ்வாறாக எழுதுகிறார், “நீதி செய்வதை குறித்து வேதாகமம் உணர்த்துவது என்னவென்றால், எல்லா மனிதரும் செழித்து வாழ்வதற்கு ஏதுவாக ஒரு வலிமையான சமுதாயத்தை உருவாக்கி, மனிதர்கள் சமாதானத்தை இழந்திருந்த பகுதிகளை சீர்படுத்துவதே. ஏழைகளின் தேவைகளை நாம் கண்டுகொண்டு, அவைகளை முக்கியத்துவப்படுத்தும்போது இது சாத்தியமாகும்."



சகல சிருஷ்டிகளையும் குறித்த தேவனுடைய மீட்பின் திட்டத்தில் இணைந்து செயலாற்றவே, இயேசு சபையை அழைத்து, ஏற்படுத்தியிருக்கிறார். சிறுகுழுவாக சேர்ந்து இன்னும் அதிகமாக சபை உப்பாக, வெளிச்சமாக விளங்குவதை குறித்து கலந்து தியானிக்க டியர்பன்ட் அவர்களின் ஆழமான வேதபாடத்தை பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள், என் பங்கு என்ன: தேவனுடைய பணியில் உங்களுடைய இடத்தை கண்டுக்கொள்ளுங்கள்.


நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Salt And Light

இயேசு கிறிஸ்து சபையை இந்தப் பூமிக்கு உப்பாய் இருக்கும்படியாகவும், இந்த உலகத்திற்கு வெளிச்சமாய் இருக்கும்படியாகவும் அழைத்திருக்கிறார். நிறைவான வாழ்க்கை வாழ இந்த இரண்டு காரியங்களும் மிகவும் அவசியமானவை. கிறிஸ்துவுக்குள்ளான ...

More

இந்த திட்டத்தை வழங்கிய டியர்பண்ட் (Tearfund) க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய http://www.tearfund.org/yv க்கு செல்லவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்