திட்ட விவரம்

தெய்வீக திசைமாதிரி

Divine Direction

7 ல் 7 நாள்

நம்பிக்கை

நான் ஓக்லஹோமாவில் வசிக்கிறேன், அங்கு வானிலை வியத்தகு விதத்தில் மற்றும் மிக விரைவாக மாறக்கூடும். மார்ச் மாதத்தில் ஒரு வருடத்தில், நாங்கள் மிகவும் அழகான வசந்த நாளினைக் கண்டோம் அதிகபட்சம் 83 டிகிரி இருந்தது. அடுத்த நாள் அங்கு மூன்று அங்குல பனிமூடியது. இந்த வியத்தகு மாற்றங்கள், சூறாவளி பருவத்துடன் ஒப்பிடும்போது ஒன்றுமில்லை. புயல்கள் எங்கு இருந்து வருகிறது என்ற தெரியாத வகையில் வரும்.


நம் வாழ்க்கையில் வருவது போன்றே


சமீபத்தில் எனது மகனின் கால்பந்து விளையாட்டில் கலந்துக்கொண்ட போது ஒரு பெண்ணுடன் பேசினேன், அவர் சில உடல்நலப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் தேவனுடன் எப்படி நெருக்கமாக இருந்தார் என்றும், எங்கள் தேவாலயத்தில் எந்த அளவுக்கு ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதையும் அவர் விளக்கினார். ஆனால் அவர் வாழ்வில் தேவன் சில உண்மையான சோதனைகளைச் செய்யத் தொடங்கியபோது, ​​தேவன் ஏன் அதை அனுமதிக்கின்றார் என்று கேள்வி எழுப்பினார். "நான் நம்ப முடியாத ஒரு தேவனை எப்படி ஆராதிக்க முடியும்?"


நமது வாழ்க்கை நம்பத்தகும் வகையில் இல்லை என்றாலும் கூட தேவன் நல்லவர் என்று நாம் நம்புவோமா?


இந்த பெண்ணின் கேள்வி வாழ்க்கையின் மிகப்பெரிய முடிவுகளில் குத்தும் ஒன்றாகும். நமது வாழ்க்கை நம்பத்தகும் வகையில் இல்லாதபோதும் கூட தேவன் நல்லவர் என்று நாம் நம்புவோமா? வலி மற்றும் சவால்களுக்கான நமது பதில்கள் நமது எதிர்காலத்தைப் பற்றி அதிகம் தீர்மானிக்கிறது.


இயல்பிலேயே, விசுவாசம் என்பது மனிதனின் தரங்களால் எப்போதும் கணிக்க முடியாத அல்லது புரிந்துகொள்ள முடியாத ஒரு விஷயத்தில் அல்லது ஒருவர் மீது நம்பிக்கை வைப்பதே. நாம் நேர்மையாக சொல்லப்போனால் நம் எல்லாருக்கும், நம் வாழ்வில் தேவனின் கருணைமிக்க இருப்பு இருப்பதை உணரும் வகையில் மறுக்கமுடியாத ஆதாரத்தை நம்மில் பெரும்பாலோர் விரும்புகிறோம்.


இது புதியதல்ல. தோமா சந்தேகித்தது நினைவிருக்கிறதா? இயேசு சிலுவையில் இறந்து மரித்தோரிலிருந்து எழுந்த பிறகு, தோமா ஆதாரம் காணாவிட்டால் அதை நம்பமாட்டேன் என்று கூறினார். கோவப்படுவதற்கும், விசுவாசமின்மைக்காக அவரை ஒதுக்கி வைப்பதற்கும் பதிலாக, இயேசு தோமாவிடம் தனது ஆணி பாய்ந்த கரங்களைக் காட்டினார்.


புயலில் சீடர்களை நினைவிருக்கிறதா? ஒரு சீற்றம் எழுந்தது, மற்றும் அலைகள் படகினை உடைத்தன, அது கிட்டத்தட்டரால் நிறைந்து இருந்தது. மாற்கு 4:37. புயலின் நடுவே, சீடர்கள் தனியாக இருக்கவில்லை. படகில் இயேசு தூங்கிக்கொண்டு இருந்தார் என்பதை அடுத்த வசனத்தில் மாற்கு நமக்கு நினைவூட்டுகிறார்.


இயேசுவுடன்  உங்கள் படகில் புயல்கள் உங்களை உலுக்கக்கூடும் என்றாலும் கூட, நீங்கள் மூழ்க மாட்டீர்கள்.


உங்களைப் போன்றவர்கள், கால்பந்து விளையாட்டில் சந்தித்த பெண், தோமா மற்றும் சீடர்கள்,
தேவன் உண்மையில் நம்முடன் இருந்தால் நாம் புயலுக்கு ஆளாக மாட்டோம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது இல்லை. இயேசு உங்கள் படகில் இருப்பதால், புயல்கள் உங்களை உலுக்கக்கூடும், ஆனால் நீங்கள் மூழ்க மாட்டீர்கள். அவர் உங்களுடன் வசந்தக்கால மழை மற்றும் கற்பனை செய்ய முடியாத மிக மோசமான சூறாவளியிலும் உங்களோடவே இருக்கிறார்.


அவர் உங்களுடன் மட்டுமல்ல, அவர் உங்களுக்காகவும் இருக்கிறார். அவர் உங்களுக்காக இருந்தால், உங்களுக்கு எதிராக யார் இருக்க முடியும்? நீங்கள் எதைத் தடுத்து நிறுத்தினாலும் அவர் உங்களுடன் மட்டுமல்ல, அவர் உங்களுக்காகவும் இருக்கிறார். அவர் உங்களுக்காக இருந்தால், உங்களுக்கு எதிராக யார் இருக்க முடியும்? உங்களை எது தடுத்து நிறுத்தினாலும் தேவனை நம்புங்கள். உங்கள் எதிர்கால வாழ்க்கைத் துணையுடன் அவரை நம்புங்கள். உங்கள் பிள்ளைகளுடைய வாழ்க்கையில் அவரை நம்புங்கள். உங்கள் தொழில் வாழ்க்கையில் அவரை நம்புங்கள். உங்கள் ஆரோக்கியத்துடன் அவரை நம்புங்கள். உங்கள் நிதிகளில் அவரை நம்புங்கள்.


பாரபட்சம் இல்லாமல் அவரை நம்புங்கள்.


காலம்.


ஜெபம்: பரலோகத் தகப்பனே, நான் தொடங்குவதிலும் நிறுத்துவதிலும் உம்மை நம்புகிறேன். நான் தங்கியிருக்கும் இடத்திலும் நான் போகும் இடத்திலும் உம்மை நம்புகிறேன். மக்களுக்கு சேவை செய்வதற்காக என் உயிரைக் கொடுப்பதற்கும் இணைவதற்கும் நான் உம்மை நம்புகிறேன். என் வாழ்க்கையின் புயல்களுக்கு மத்தியில் நீங்கள் எனக்கு நோக்கத்துடன் இருப்பதை நான் நம்புகிறேன். என்னுடன் இருப்பதற்கும், என்னை வழிநடத்துவதற்கும், மற்றும் என்னை உமக்குள் வழிநடத்துகின்றதுக்கும் நன்றி. ஆமென்.


எனது புத்தகத்தைப் பற்றி மேலும் அறிய,Divine Direction.


நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

Divine Direction

தினம்தோறும் நாம் வாழ்க்கையின் கதையை வடிவமைக்கும் முடிவுகளை தேர்ந்தெடுக்கிறோம். ஒருவேளை இப்படி தேர்ந்தெடுப்பதில் நீங்கள் தேறினவராகிவிட்டால் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்? நியூயார்க் டைம்ஸ் சிறந்த எழுத்தாளர் மற்றும் லைஃ...

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்களுக்கும் LifeChurch.tv க்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய http://craiggroeschel.com க்கு செல்லவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்