திட்ட விவரம்

தெய்வீக திசைமாதிரி

Divine Direction

7 ல் 5 நாள்

சேவை செய்யுங்கள்

மற்றவர்களுக்கு சேவை செய்வது எனக்கு இயல்பாக வருவதில்லை. நான் ஒரு சுயநலமான மனிதன். நான் என் வழியில் வாழ்வதை விரும்புகிறேன். இது நான் பெருமைப்படக்கூடிய ஒன்றல்ல என்றாலும் துரதிர்ஷ்டவசமாக, இது தான் உண்மை.


இவ்வாறாக இருப்பது நான் மட்டும் அல்ல. நம் அனைவருக்குள்ளும் கொஞ்சம் சுயநலம் இருக்கும். இயற்கையாகவே, நாம் சுயநலவாதிகள். இதைப் பற்றி சற்று யோசித்துப் பாருங்கள்: நீங்கள் ஒரு குழந்தைக்கு சுயநலமாக இருக்க கற்பிக்க வேண்டியதில்லை. இயேசுவின் கூற்றுப்படி, வாழ்க்கை என்பது நம்மைப் பற்றியது அல்ல, இன்னும் நம் கலாச்சாரத்தில் உள்ள அனைத்தும் (அந்த பர்கர் கடை உட்பட) நம் வழியிலேயே வாழச்சொல்ல முயற்சிக்கிறது.


தேவனை மறக்க விரைவான வழிகளில் ஒன்று "சுயத்துடன்" நம்மை நாமே ஆட்கொண்டு இருப்பது. தம்மைப் பின்பற்ற விரும்புவோருக்கு இயேசு அழகான நேரடி வார்த்தைகளைக் கொண்டிருந்தார். அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: “ ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.” மத்தேயு 16:24.


தேவன் நாம் நம்முடைய வாழ்க்கையை அவருடைய வழியில் வைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவர் கூடுதல் இறைச்சியைப் பற்றி பேசவில்லை, கீரையை வைத்திருங்கள்.


உணவைப் பற்றி பேசுகையில், இயேசு ஒரு அறிக்கையை வெளியிட்டார் அது நம்முடைய அடுத்த பர்கரை ஆர்டர் செய்வதற்கு முன்பு கேட்க வேண்டிய ஒன்று. “.இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது. யோவான் 4:34


“என் உணவு பிதாவுக்கு சேவை செய்வதாகும். அவரைப் பிரியப்படுத்துவதே என் உணவு. தேவன் என்னை அனுப்பிய வேலையை முடிப்பதே எனது உணவு. என் உணவு என் பிதாவின் சித்தத்தைச் செய்வதும் அவருடைய வேலையை முடிப்பதும் ஆகும். ” இது ஒரு வித்தியாசமான ஊட்டச்சத்து. அது தெய்வீக திசையுடன் வாழும் வாழ்க்கை.


கலாச்சாரம் அனைத்தும் “உங்களை நிரப்புங்கள்” என்று கூறும்போது, ​​மற்றவர்களை நிரப்ப தேவன் சொல்கிறார்.


நம்மைச் சுற்றியுள்ளவர்கள், “உங்களால் முடிந்த அனைத்தையும் பெறுங்கள்! இது உங்களைப் பற்றியது,” நமக்கென்று உட்கொள்வதை விட நாம் மற்றவர்க்கு பங்களிக்க வேண்டும் என்றே தேவன் விரும்புகிறார். எல்லா கலாச்சாரமும் “உங்களை நிரப்புங்கள்” என்று கூறும்போது, ​​மற்றவர்களை நிரப்ப கடவுள் சொல்கிறார். கடவுள் நம்மை எடுப்பவர்களாக உருவாக்கவில்லை. கொடுப்பவர்களாக இருக்கவே அவர் நம்மைப் படைத்தார். நம்முடைய ஆசைகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, மற்றவர்களின் தேவைகளில் கவனம் செலுத்த அழைக்கப்படுகிறோம். கோட்டின் முன்னால் வெட்டுவதற்குப் பதிலாக, இறுதியில் காத்திருக்க அழைக்கப்படுகிறோம். சேவை செய்ய கடவுள் நம்மைப் படைத்தார்.

இந்த வகையான வாழ்க்கை உங்கள் கதையை மாற்றும்.


இதைப் பற்றி சிந்தியுங்கள். நீங்கள் நினைத்து பார்க்க விரும்பும் கதைகள், நீங்கள் உங்கள் அயலவருக்கு உதவி செய்தபோது, ​​தேவாலயத்தில் ஈடுபட்டபோது அல்லது எதையாவது கொடுத்தபோது வந்தவை. ஏனென்றால், இயேசு பூமியில் செய்ததைப் போலவே சேவை செய்யும்படி உருவாக்கப்பட்டோம். சேவை செய்யும் பண்பு நமக்கு இயல்பாக வருவதில்லை. இது எப்போதும் எனக்கு இல்லை. ஆனால் சேவை செய்வது என்பது நமது செயல் அல்ல என்பதை நான் உணர்ந்தேன். ஒரு ஊழியராக இருப்பதற்க்கே நாம் அழைக்கப்பட்டோம். ஏனென்றால், நாம் சேவை செய்யும்போது, ​​நாம் கிறிஸ்துவைப் போல ஆகிவிடுகிறோம்.


ஜெபம்: தேவனே, என்ன சேவை செய்ய என்னை அழைக்கிறீர்? யாருக்கு சேவை செய்ய என்னை அழைக்கிறீர்? எங்கே சேவை செய்ய என்னை அழைக்கிறீர்?


நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

Divine Direction

தினம்தோறும் நாம் வாழ்க்கையின் கதையை வடிவமைக்கும் முடிவுகளை தேர்ந்தெடுக்கிறோம். ஒருவேளை இப்படி தேர்ந்தெடுப்பதில் நீங்கள் தேறினவராகிவிட்டால் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்? நியூயார்க் டைம்ஸ் சிறந்த எழுத்தாளர் மற்றும் லைஃ...

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்களுக்கும் LifeChurch.tv க்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய http://craiggroeschel.com க்கு செல்லவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்