திட்ட விவரம்
21 நாள் உபவாசம்மாதிரி
![21 Day Fast](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F35%2F1280x720.jpg&w=3840&q=75)
உபவாசம் என்பது நமக்கும் தேவனுக்கும் இடையிலான தனிப்பட்ட காரியம் அல்லவா? நீங்கள் ஒருவேளை சிலரோடு கூட ஒரு குழுவாக இணைந்து இந்த உபவாசத்தை கடைபிடிக்கலாம். தவறில்லை! வேதத்தில் பலமுறை கூட்டு உபவாச கூடுகைகள் நடைபெற்றிருக்கிறது. பல வேதாகம தலைவர்கள் இஸ்ரவேல் ஜனங்களை கூட்டு உபவாசத்திற்கு அழைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த குறிப்பிட்ட வேத பகுதியில் இயேசு எதை குறிப்பிட்டு விளக்கி பேசுகிறார் என்று உன்னிப்பாக சிறிது சிந்தியுங்கள். உங்கள் உபவாசத்தை குறித்து பிறரிடம் நீங்கள் பேசும்போது உங்கள் நோக்கம் என்னவாக இருக்கிறது? மற்றவர்களை உபவாசத்தில் ஊக்குவிக்க பேசுகிறீர்களா? இல்லை, ஏதேனும் அவரிடம் எதிர்பார்த்து பேசுகிறீர்களா? அல்லது உங்களை பிறரிடம் பக்திவானாக காட்டிக்கொள்ள உபவாசத்தை பயன்படுத்துகிறீர்களா? இந்த கேள்விகளுக்கு உங்களுக்கும் தேவனுக்கும் மட்டுமே பதில் தெரியும். எவ்வகையிலும் பெருமையினால் இழுப்புண்டு போகாமல் கபடற்ற மனதுடனும், சரியான நோக்கத்துடனும் உபவாசிக்க தேவனிடம் உதவி கேளுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
![21 Day Fast](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F35%2F1280x720.jpg&w=3840&q=75)
உங்களுடைய புதிய வருடத்தை உபவாசம் எனும் ஆவிக்குரிய ஒழுங்கின் மீதான கருத்துடன் துவங்கவும். இந்த திட்டம் உபவாசத்தை குறித்தும் தேவனை பற்றி மீண்டும் சிந்திக்க மற்றும் அவரோடு கிட்ட சேரும்படி ஊக்குவிக்கும் விதத்திலும் பல வசனங்க...
More
We'd like to thank Life.Church for their generosity in providing the structure for the 21 Day Fast reading plan.