திட்ட விவரம்

நிரம்பி வழிய 21 நாட்கள்மாதிரி

21 Days to Overflow

21 ல் 21 நாள்

தேவனின் சம்பூரணம்

கர்த்தர் நமக்காக பெரிய காரியங்களைக் வைத்திருக்கிறார் என்று நாம் நம்பி, அதனை தேவனிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளுமளவிற்கு நம் விசுவாசம் வளர வேண்டும். இதற்கு குறைவானதாக நம் எண்ணங்களைக் குறித்து வருந்தினால் தான் நம் விசுவாசம் அந்தளவிற்கு வளர்ச்சியடையும். நாம் அனைவரும் இக்காரியத்தில் குற்றவாளிகளே. தேவன் எப்படி இயங்குவார் என நமக்குத் தெரியும் என நினைக்கிறோம். நாம் கேட்கும் காரியத்தை அவர் நிறைவேற்றும் விதத்தில் நாம் அனைவரும் கனிக்க முயல்கிறோம். பெரும்பாலும், நாம் நினைப்பது போல அவருடைய வழிகள் இருப்பதில்லை. ஏனெனில் நம்முடைய வழிகளைக் காட்டிலும் அவருடைய வழிகள் சிறந்தவை.


எபேசியர் 3:20, இதை அழகாகச் சொல்கிறது. “நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிறவர்.” தேவன் நமக்கு போதுமானவர். சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும், வெறுமை இருந்தாலும், குறை இருந்தாலும், அவர் போதுமானவர்.


ஐந்து அப்பமும் இரண்டு மீனும் ஆயிரங்களுக்கு உணவளிக்க போதுமானதாய் இருந்தது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நம் கடுமையாக பாடுபட்ட அந்த மீன்களைக் காட்டிலும் திரளான மீன்களைப் பிடிக்க படகின் மறுபுறம் வலையை போட்டால் போதுமானது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நம் சூழ்நிலையைக் காட்டிலும் அவ்வாறே நமக்குத் தம்மை வெளிப்படுத்தும்படி தேவனக் கேட்கும் அளவுக்கு நம் சிந்தனை பலப்பட வேண்டும், மேலும் அவரை நம் திறன்களுக்கு உட்பட்டவராக மட்டுப்படுத்தாதீர்கள். நம்முடைய வழிகளை விட அவருடைய வழிகள் உயர்ந்தவை; அவருடைய எண்ணங்கள் நம் எண்ணங்களை விட உயர்ந்தவை. நிரம்பி வழிதல் என்னும் பாதையில் நடக்க, தேவனுடைய சம்பூரணத்தை அடையும் நிலையில் நம்மை நிறுத்திக் கொள்ள வேண்டும். நான் உறுதியளிக்கிறான், அது உங்கள் வேண்டுதலுக்கும், நினைவிற்கும் அப்பாற்பட்டதாக இருக்கும்.


கொலோசேயர் 2:8-10 மாய்மாலமான, வெறுமையான தத்துவத்தில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கிறது. சர்வ வல்லமையுள்ள, எல்லாம் அறிந்த, எங்கும் நிறைந்திருக்கும் சர்வ வல்லவரை நாம் ஆராதிக்கிறோம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. நாம் மனித அறிவுக்குட்பட்ட சிந்தனைகளைத் தவிர்த்து, தேவன் நம்மில் செய்ய விரும்புகிறதான பெரிய, ஆச்சரியமான, இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களுக்கு நம் மனதை திறந்து வைத்திருக்க வேண்டும்!


இதுவே நிரம்பி வழிதல். நாம் எப்படி,எப்போது,எங்கே,யாரோடு என்னும் கேள்விகளுக்கு பதில் அறிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. நமது நன்மைக்காகவும் அவரது மகிமைக்காகவும் இதை தேவன் செய்வார் என்பதை நாம் விசுவாசித்தால் மட்டும் போதுமானது. இது நமது திட்டங்களை தூக்கி எறிய வேண்டிய நேரம். நாம் அதிசயங்களை நிச்சயமாகவே காண்போம்.


நிரம்பி வழிதல் எது என்று உணர்ந்து அதை தழுவிக் கொள்ள வேண்டிய நேரம் இது, உங்களுக்காக தேவன் விரும்பிய ஆவியானவரால்-ஆளப்படும் வாழ்க்கையை வாழுங்கள். தேவனின் மகிமைக்காக நிரம்பி வழியுங்கள்!


உங்கள் பயணம் இத்தோடு முடியவில்லை. உங்கள் நிரம்பி வழியும் பயணத்தில் இது முதல் 21 நாட்கள் அவ்வளவே. இப்போது, இத்திட்டத்தில் சொல்லப்பட்ட கருத்துகளை உங்கள் அன்றாட வாழ்வில் அப்பியாசப்படுத்துங்கள்.


மேலு அறிந்து கொள்ள, ஜெரேமியா ஹாஸ்ஃபோர்டு- இன் நிரம்பி வழிதலுக்காக 21 நாட்கள்என்னும் புத்தகத்தை வாங்கி பயனடையுங்கள். இப்புத்தகம், இந்த 21 நாட்களுக்கான திட்டத்தை அதிக விவரங்களோடு விவரிக்கிறது மேலும் 22 வது நாள் அதல்கு பின்னர் என்ன செய்ய வேண்டும் என்கிற செயல்முறையையும் வழங்குகிறது.


நாள் 20

இந்த திட்டத்தைப் பற்றி

21 Days to Overflow

நிரம்பி வழிய 21 நாட்கள் என்கிற இந்த யுவெர்ஷன் திட்டத்தில் ஜெரெமியா ஹாஸ்ஃபோர்டு மூன்று வாரப் பயணத்தில் வாசகர்களைச் சுயத்தை வெறுமையாக்கவும், தேவ ஆவியால் நிரம்பவும், நிரம்பி வழியும் வாழ்க்கை வாழவும் அழைத்துச் செல்கிறார். சா...

More

இத்திட்டத்தை வழங்கியமைக்காக ஃபோர் ரிவர்ஸ் மீடியாவிற்கு நன்றி செலுத்துகிறோம். மேலும் விவரங்களுக்கு, காண்க: https://www.theartofleadership.com/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்