நிரம்பி வழிய 21 நாட்கள்மாதிரி

ஆவியானவரோடு நட்புறவு கொள்ளுதல்
ஒரு வாரம் நம்மை நாமே வெறுமையாக்கினோம். ஒரு வாரம் ஆவியானவரால் நிரப்பப்பட்டோம். இப்பொழுது நமக்குள் நடக்கும் செயல்களிலிருந்து, நிரம்பி வழிதலின் ஆழத்துக்கு செல்லப் போகிறோம். நான் விசுவாசிக்கிறேன், நீங்கள் தேவனால் இந்த நிரம்பி வழிதலை ஏற்கனவே அனுபவிக்கிறீர்கள் என.
நிரம்பி வழிதல் என்னும் அனுபவத்தில் நடக்க, நம்முடைய வாழ்வின் ஒரு சில நிகழ்வுகளில் ஆவியானவர் அசைவாடினார் என்றல்ல ஆவியானவர் நம்முடைய வாழ்க்கை முறையாக மாற வேண்டும். நாம் பேசுவது சிந்திப்பது உணர்வது இவை எல்லாம் ஆவியானவரால் உந்தப்படுவதாகும், ஊக்கமளிப்பதாகவும் இருந்தால், நாம் ஆவியானவரோடு நட்புறவில், ஐக்கியத்தில் இருக்கிறோம் என்றறியலாம்.
பவுல் கொரிந்து சபைக்கு எழுதிய கடிதத்தை (2 கொரிந்தியர்) முடிக்கும்போது இதைத்தான் சொல்கிறார். 2 கொரிந்தியர் 13:14ல், பவுல் அந்த சபையாருக்கு இயேசு கிறிஸ்துவின் கிருபையும், தேவனுடைய அன்பும், ஆவியானவரின ஐக்கியமும் கிடைக்க வேண்டும் என்று வேண்டுகிறார். பவுல் பேசும்போது ஏதோ ஒரு நொடி ஐக்கியத்தைப் பற்றி பேசவில்லை – அவர் வாழ்க்கை முறையை பற்றி பேசுகிறார்.
யோவான் 14:16ல் ஆவியானவர் நம்முடைய வாழ்க்கை முறையாய் இருக்க வேண்டும் என்பதை பற்றி மீண்டும் பார்க்கிறோம். நம்மோடு "எப்போதும்" இருப்பதற்காக ஆவியானவரை அனுப்பும்படி இயேசுவானவர் தன் பிதாவிடம் வேண்டிக்கொள்வதாக அவ்வசனங்களில் இயேசு உரைக்கிறார்.
நாம் தினமும் காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக ஆவியானவரிடம் பேசினால் எப்படி இருக்கும்? கொடுக்கப்பட்ட இந்த நாளிலே நாம் என்ன செய்ய வேண்டிய தேவ சித்தம் என்னவென்று ஆவியானவரிடம் கேட்டு நடந்தால் எப்படி இருக்கும்? நாம் போவோம் என்று கற்பனையில் கூட எண்ணியிராத இடங்களுக்கு ஆவியானவருடைய வழிநடத்துதல் அழைத்துச் செல்லும் மேலும் நம்மால் கற்பனை கூட செய்து முடிக்க முடியாத காரியங்களை தேவ ஆவியானவரால் சாதிப்போம். பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு நாளும் நம்மோடு ஐக்கியப்பட,உறவாட விரும்புகிறார், ஒவ்வொரு நாளையும் குறித்து நம்மோடு பேச விரும்புகிறார். வேத வாக்கியங்களின் மறைப்பொருட்களை, தரிசனங்களை, கனவுகளை பரிசுத்த ஆவியானவர் நமக்கு காண்பிக்க விரும்புகிறார்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

நிரம்பி வழிய 21 நாட்கள் என்கிற இந்த யுவெர்ஷன் திட்டத்தில் ஜெரெமியா ஹாஸ்ஃபோர்டு மூன்று வாரப் பயணத்தில் வாசகர்களைச் சுயத்தை வெறுமையாக்கவும், தேவ ஆவியால் நிரம்பவும், நிரம்பி வழியும் வாழ்க்கை வாழவும் அழைத்துச் செல்கிறார். சாதாரணமாக வாழ்வதை நிறுத்தி நிரம்பி வழியும் வாழ்வை வாழ்வதற்கு இதுவே நேரம்!
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

மேடைகள் vs தூண்கள்

ஆண்டவர் சர்வவல்லவர்

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்
