திட்ட விவரம்

நிரம்பி வழிய 21 நாட்கள்மாதிரி

21 Days to Overflow

21 ல் 2 நாள்

கவனச் சிதறல்

இன்று, இவ்வுலகம் நமக்கு மிகுதியாக தரும் கவனச் சிதறல்களில் இருந்து நம்மை நாமே விடுவிப்பதில் கவனம் செலுத்தப் போகிறோம். நமது கவனம் இவ்வுலகத்தில் சிதறி கொண்டே இருப்பின், நாம் தேவனையும், நம்முடைய வாழ்விற்கான தேவனுடைய சித்தத்தையும்,ஆவியால் நிரப்பப்பட்ட ஒரு முழுமையான வாழ்வையும் தொடர முடியாது.


பிலிப்பியர் 4:8ல், பிலிப்பியர்கள் எதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என பவுல் ஆலோசனை சொல்லுகிறார். இப்பகுதியில் சபையானது எதைப்பற்றி சிந்திக்க வேண்டும் என்று சொல்லுகிறது, ஆனால் இதிலிருந்து எதையெல்லாம் சிந்திக்க கூடாது என்று நாம் அனுமானிக்க கூடும். மன அழுத்தம், பதட்டம், பயம், கவலை இவையெல்லாம் பவுல் சொல்லி உள்ள பட்டியலில் இல்லை. மாறாக, உண்மையில், ஒழுக்கத்தில், நீதியில், நற்கீர்த்தியில்,கற்பில், புண்ணியத்தில்,அன்பில் கவனம் செலுத்த சொல்லுகிறார். நாம் இந்த அடியை எடுத்து வைக்கும் போது, தேவன் விரும்பும் வழியில் சிந்திக்கவும், கவனச்சிதறலில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளவும் நாம் ஒரு படி நெருங்கிவிட்டோம்.


யோவான் 17:17ல், இயேசு தனது சீஷர்களுக்காக ஜெபிப்பதை பார்க்கிறோம். தேவனுடைய சத்தியத்தினால் அவர்களை பரிசுத்தமாக்கும்படியாக கேட்கிறார். மேலும் அவர் எதை தேவன் தேவனுடைய சத்தியம் என்று சொல்லுகிறார்? அவரது வசனம்.  பவுல் உண்மையுள்ளவைகளைப் பற்றி பிலிப்பியரை சிந்திக்க சொல்லும் போது எதை சொல்கிறார் என்று இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும்.


தேவனுடைய வசனம் என்னும் சத்தியத்தை நான் சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும். இது நம்முடைய வாழ்க்கையில் முதன்மையாக இருக்கும், போது மற்ற காரியங்களால் நாம் அவ்வளவு சுலபமாக  உலகத்தால் கவனச்சிதறல் அடைய மாட்டோம். ஆவியில் நிறைந்து, நிரம்பி வழியும் வாழ்விற்கு உள்ள படிகளில் இது ஒன்று.


நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

21 Days to Overflow

நிரம்பி வழிய 21 நாட்கள் என்கிற இந்த யுவெர்ஷன் திட்டத்தில் ஜெரெமியா ஹாஸ்ஃபோர்டு மூன்று வாரப் பயணத்தில் வாசகர்களைச் சுயத்தை வெறுமையாக்கவும், தேவ ஆவியால் நிரம்பவும், நிரம்பி வழியும் வாழ்க்கை வாழவும் அழைத்துச் செல்கிறார். சா...

More

இத்திட்டத்தை வழங்கியமைக்காக ஃபோர் ரிவர்ஸ் மீடியாவிற்கு நன்றி செலுத்துகிறோம். மேலும் விவரங்களுக்கு, காண்க: https://www.theartofleadership.com/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்