திட்ட விவரம்

நிரம்பி வழிய 21 நாட்கள்மாதிரி

21 Days to Overflow

21 ல் 7 நாள்

மன்னியாமை

மன்னியாமை மிகவும் பொல்லாதது. உடல் ரீதியாக, உணர்வு ரீதியாக, ஆன்மீக ரீதியாக மன்னியாமை என்பது அழிவுக்கு இழுத்துச் செல்லும். மன்னியாமல் இருப்பதால் நமக்கு ஒன்றும் கிடைக்கப் போவது இல்லை. மேலும், வேதத்தில் வாசிக்கிறோம், தேவன் நமக்கு கொடுக்கும் மன்னிப்பு என்பது நாம் மற்றவர்களுக்கு வழங்கும் மன்னிப்போடு தொடர்புடையது. உண்மையில் நித்தியமான பரலோகமா அல்லது நித்திய நரகமா என்பது மன்னிப்பதற்கான நமது விருப்பத்தை பொறுத்தது. மற்றவர்களை நம் மன்னிக்கிறோமோ இல்லையா என்பதை பொறுத்தே நமது ஆத்துமாவின் இளைப்பாறுதல் இருக்கிறது.


மத்தேயு 6:14-15 இக்கொள்கையை மேலும் தெளிவாக்குகிறது. நம் சகோதர சகோதரிகள் நமக்கு விரோதமான காரியங்களைங் செய்யும்போது அவர்களை நாம் மன்னித்தால், தேவனும் நம்மை மன்னிக்கிறார். நாம் மன்னியாதபோது, தேவனும் நம்மை மன்னிக்க மாட்டார்.


எபேசியர் 4:32 சொல்கிறது, கிறிஸ்து நமக்குக் காண்பித்த மன்னிப்பை நாம் மற்றோருக்கும் காண்பிக்க வேண்டும். நம்  சகோதர சகோதரிகளிடம் இரக்கம் காண்பிக்க வேண்டும். எப்படி இரக்கம் காண்பியாமல் இருப்பது? தேவன் காண்பித்த இரக்கத்திற்கு தகுதியற்றவர்களாக இருந்தோம். அப்படியிருக்க நமது இரக்கத்திற்கு மற்றவர்கள் தகுதியற்றவர்கள் என்று எப்படி சொல்வது?


இதைப் புரிந்து கொள்ளுங்கள்: நாம் அவர்களை மன்னிப்பது அவர்களுக்காக அல்ல. நாம் நமக்காகவே அவர்களை மன்னிக்கிறோம். நாம் ஒருவரை மன்னிக்க முடியவில்லை என்றால், அந்த மன்னியாமை அவர்களையல்ல, நம்மையே கட்டி வைக்கிறது. நாம் மன்னிக்கும் போது நமக்கு ஒரு சுதந்திரம் கிடைக்கிறது. இன்று ஜெபிக்கும்போது, மன்னியாமையால் நம்மைக் கட்டி வைத்திருக்கும் கட்டுகள் நம்மில் இருந்து விழட்டும். மற்றொருபோதும் நம்மை மன்னிக்கவில்லை என்றாலும் அதைக் கண்டு கொள்ளாதீர்கள். நாம் சுதந்திரமாக இருக்கிறோம். மற்றவர்களை நாம் மன்னிப்பதால் நாம் தேவனோடு உள்ள உறவில் சரியாக இருக்கிறோம்.


நாள் 6நாள் 8

இந்த திட்டத்தைப் பற்றி

21 Days to Overflow

நிரம்பி வழிய 21 நாட்கள் என்கிற இந்த யுவெர்ஷன் திட்டத்தில் ஜெரெமியா ஹாஸ்ஃபோர்டு மூன்று வாரப் பயணத்தில் வாசகர்களைச் சுயத்தை வெறுமையாக்கவும், தேவ ஆவியால் நிரம்பவும், நிரம்பி வழியும் வாழ்க்கை வாழவும் அழைத்துச் செல்கிறார். சா...

More

இத்திட்டத்தை வழங்கியமைக்காக ஃபோர் ரிவர்ஸ் மீடியாவிற்கு நன்றி செலுத்துகிறோம். மேலும் விவரங்களுக்கு, காண்க: https://www.theartofleadership.com/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்