வாழ்க்கை மாற்றப்பட்டது: புத்தாண்டில்மாதிரி

Living Changed: In the New Year

4 ல் 4 நாள்

உங்கள் தாலந்துகளின் மூலமாக வித்தியாசத்தை உருவாக்குங்கள் 

இது ஒரு புதிய ஆண்டு. உங்களுக்கு முன்னால் ஒரு புத்தம் புதிய எழுத்து பலகை மற்றும் முடிவற்ற சாத்தியங்கள் உள்ளன. இன்னும் ஒரு வருடம் கழித்து, இந்த அடுத்த சில மாதங்களை நீங்கள் திரும்பிப் பார்க்கும்போது, ​​நீங்கள் எதைப் பார்க்க விரும்புகிறீர்கள்? இந்த உலகத்திலும் தேவனுடைய ராஜ்யத்திலும் நீங்கள் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதைக் காண விரும்புகிறீர்களா?

நீங்கள் உணர்ந்தாலும் உணராவிட்டாலும், தேவன் உங்கள் பாதையில் சில விஷயங்களை வைத்து, பல்வேறு திறன்களை பலப்படுத்த உங்களுக்கு வாய்ப்புகளை அளிக்கிறார், இதன் மூலம் அவர் உங்கள் நோக்கத்திற்காக உங்களை தயார்படுத்துகிறார்.  

உங்கள் வாழ்க்கை அனுபவங்கள் ஒவ்வொன்றும் உங்களை தனித்துவமாக்குகிறது. தேவன் உங்களுக்கு வழங்கிய உங்கள் இயல்பான திறமைகள், உங்களுக்கு கிடைத்த பல்வேறு வாய்ப்புகள் மற்றும் நீங்கள் பெற்ற திறன்களைக் சிந்தியுங்கள். நீங்கள் எங்கு வளர்ந்தீர்கள், எங்கு பயணம் செய்தீர்கள், என்ன கற்றுக்கொண்டீர்கள் என்று கவனியுங்கள். ஒருவேளை நீங்கள் வெவ்வேறு கலாச்சாரங்களைப் புரிந்துகொண்டு, உலகெங்கிலும் உள்ள மக்களுடன் பழகலாம் அல்லது மக்களை ஊக்குவிக்கும் மற்றும் செயல்பாட்டிற்கு நகர்த்தத்தக்கதான கலையை நீங்கள் உருவாக்கலாம். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பெற்ற பல்வேறு அனுபவங்கள் தனித் தனியாக பார்த்தால் பொருத்தமற்றதாகத் தோன்றலாம், ஆனால் அவை ஒருங்கிணைந்து, தேவனை மகிமைப்படுத்த நீங்கள் பயன்படுத்தக்கூடிய அர்த்தமுள்ள ஒன்றை நோக்கி அவை உங்களை வழிநடத்துகின்றன. 

வெகுஜன இனப்படுகொலையிலிருந்து தன் மக்களைக் காப்பாற்றும் தனித்துவமான நிலையில் இருக்கும் ஒரு யூதப் பெண்ணின் கதையைச் சொல்லும் எஸ்தர் புத்தகத்தில் இதைக் காண்கிறோம். பெர்சீய மன்னரின் மனைவி மற்றும் ராணியாக இருந்தாலும், அவள் தன்னை வேறு யாரையும் விட தேவ திட்டத்திற்கு சிறப்பானவளாக முக்கியமானவளாக கருதவில்லை. அவள் உயிர் பிழைக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து கொண்டிருந்தாள். ஆனால் அவள் யார் என்ற அடையாளத்தினால், அவள் எங்கு வாழ்ந்தாள் என்பதினிமித்தம், அவள் வாழ்ந்த காலத்தினிமித்தம், அவள் யாரிடம் செல்வாக்கு பெற்றாள், கடவுள் அவளுக்குக் கொடுத்த ஞானம் ஆகியவற்றின் காரணமாக, இஸ்ரவேலர்களை மரணத்திலிருந்து காப்பாற்ற தேவன் அவளைப் பயன்படுத்தினார்.

உங்களுக்கு சிறப்பான திறமைகள், திறமைகள், கல்வி, நிதி பலம், அந்தஸ்து அல்லது செல்வாக்கு ஆகியவற்றை தேவன் தானா உங்களுக்கு கொடுத்துள்ளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதை எப்படிப் பயன்படுத்துவீர்கள் என்பதுதான் கேள்வி. தேவனுடைய வேலையைச் செய்ய நீங்கள் முழுநேர ஊழியத்தில் இருக்க வேண்டியதில்லை. நீங்கள் வியாபாரம் செய்து கொண்டோ அல்லது வீட்டில் இருந்து கொண்டோ, சிலரைக் கொண்டோ அல்லது பலரைக் கொண்டோ தேவனுக்காக வேலை செய்யலாம். நம்மில் பெரும்பாலோர் பிரபலமாக இருக்க மாட்டோம், ஆனால் நம் அனைவருக்கும் செல்வாக்குள்ள வட்டங்கள் இருக்கும் மேலும் அக்குழுவினருக்கு தேவைப்படும் தனித்துவமான தாலந்துகள் இருக்கும். 

தேவன் உங்களுக்கு வழங்கிய அனைத்திற்கும்—உங்களது தனித்துவம் வாய்ந்த அனைத்து பலங்கள், குணாதிசயங்கள், கற்றல், செல்வாக்கு மற்றும் ஏற்பாடுகளுக்காக ஒரு நிமிடம் நன்றி செலுத்துங்கள். அந்த தாலந்துகள் உங்கள் நோக்கத்திற்காக உங்களை எவ்வாறு தனித்துவமாகத் தகுதிப்படுத்துகின்றன என்பதையும், இந்த ஆண்டு மற்றவர்களின் வாழ்க்கையையும் நித்தியத்தையும் மாற்றுவதற்கு அவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் காண்பிக்கும்படி தேவனிடம் கேளுங்கள். இவ்வாண்டு உங்கள் அழைப்பில் வாழ்ந்து மற்றவர்களுக்குச் சேவை செய்வது மிகவும் நிறைவான ஆண்டாக அமைக்கும். 

We pray God used this plan to minister to your heart.
Explore Other Living Changed Bible Plans
Learn More about Changed Women's Ministries 

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

Living Changed: In the New Year

ஒவ்வொரு புத்தாண்டிலும் ஒரு புதிய தொடக்கத்திற்கான புதிய வாய்ப்பு வருகிறது. நீங்கள் வைத்திருக்காத தீர்மானங்களுடன் தொடங்கும் மற்றொரு ஆண்டாக இது இருக்க வேண்டாம். இந்த 4-நாள் திட்டம் உங்களைப் பிரதிபலிப்பதில் வழிகாட்டி, புதிய கண்ணோட்டத்தை உங்களுக்கு வழங்கும், இதன்மூலம் இதை இன்னும் சிறந்த ஆண்டாக மாற்றலாம்.

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக மாற்றப்பட்ட பெண்கள் ஊழியத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து இந்த இணைப்பிற்கு செல்க: http://www.changedokc.com