வாழ்க்கை மாற்றப்பட்டது: புத்தாண்டில்மாதிரி

சரணடைந்து ஒரு வருடம் வாழ்தல்
நாம் நன்றியுடன் இருக்க வேண்டிய அனைத்து காரணங்களையும் அடையாளம் கண்டுகொள்வது மட்டுமல்லாமல்—வரும் ஆண்டில் குணமடையவும் வளரவும் ஆண்டின் தொடக்கமே சரியான நேரம்.
சிந்திக்கும்போது, புண்பட்ட உணர்வுகள் நமக்கு நினைவூட்டப்படலாம். அந்த உணர்வுகளைத் துடைத்து விடுவதற்குப் பதிலாக அல்லது கசப்பை உருவாக்குவதற்குப் பதிலாக, மன்னிக்கும் சுதந்திரத்தை நாம் தேர்ந்தெடுக்கலாம். மேலும் மன்னிப்பை நோக்கிய முதல் படி சரணடைதல் ஆகும்.
"சரணடைதல்" என்பது மக்களைக் கசக்கச் செய்யும் வார்த்தைகளில் ஒன்றாக இருக்கலாம், குறிப்பாக மன்னிப்பு என்று வரும்போது. மன்னிப்பதை தோல்விக்கு சமமாகக் கருதுகிறோம்—வெள்ளைக் கொடியை அசைத்து எதிரி நம்மை மேற்கொள்ள அனுமதிப்பதாக நினைக்கிறோம். ஆனால் நாம் தேவனிடம் சரணடையும் போது, அதை வேறு விதமாகப் பார்க்கலாம்.
தேவனைப் பொறுத்தவரை, சரணடைதல் என்பது திறந்த மனதோடும் கைகளோடும் நம் வாழ்வை அப்படியே ஒப்புவிப்பது—நம்முடைய காயம் மற்றும் வலியையும் கூட. அப்படி ஒப்புக்கொடுக்கும்போது தேவன் நம்மை அதிலிருந்து குணப்படுத்த முடியும். அவர் நம் ஒவ்வொருவரிடமும் அன்பும், கருணையும், இரக்கமும் நிறைந்தவர். தேவனுக்கு நம் வலியைக் ஒப்புக்கொடுக்க நாம் பயப்பட வேண்டியதில்லை, ஏனென்றால் அவர் மென்மையானவர், மேலும் நம் இதயங்களை கவனமாகக் கையாள்பவர்.
மேலும் தேவன் நீதியானவர் என்பதை நாம் உறுதியாக நம்பலாம். ஒருவர் தங்கள் செயல்களுக்கான விளைவுகளைச் செலுத்துவதைப் பார்க்க நாம் விரும்புவது இயற்கையானது. தேவனுக்கும் கூட பாவம் மற்றும் அநீதியின் மீது நீதியான கோபம் இருக்கிறது. ஆனால் ஒரு மனிதனின் இதயத்தை தேவன் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒருவர் தண்டனையை பெறுவாரா அல்லது கருணை பெறுவாரா என்பதை நாம் தீர்மானிக்க முடியாது, மேலும் பழிவாங்குவதற்கான நமது எண்ணத்தைப் பற்றிக் கொள்வது கசப்பை மட்டுமே விளைவிக்கும்.
இந்த ஆண்டு நாம் நிம்மதியாக வாழ விரும்பினால், நம் கோபத்தையும் பெருமையையும் தேவனிடம் கொடுத்துவிட்டு, நம் இதயங்களில் தானே நாம் கவனம் செலுத்த வேண்டும். அவருடைய பாதத்தில் நமது வலியையும் நமது வாழ்வை நாமே கட்டுப்படுத்துவதற்கான விருப்பத்தையும் வைத்து, நம்மில் ஒரு மாற்றத்தை உருவாக்கும்படி தேவனிடம் கேட்க நாம் மனப்பூர்வமான முடிவெடுக்க வேண்டும். அவருடைய உதவி நமக்குத் தேவை என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக, மன்னிப்பு என்பது நாம் அன்றாடம் செய்ய வேண்டிய ஒன்று—நாம் மன்னிக்க விரும்பாவிட்டாலும் கூட. மன்னிப்பை நாம் செயல்படுத்தும்போது, பலமுறை அந்த ஒரே வலியை, துரோகத்தின் வேதனையை நாம் தேவனிடம் ஒப்புக்கொடுக்க வேண்டும். பழைய கோபங்கள், வேதனைகள் கிளர்ந்தெழும்போது, அது நம்மை வருத்தப்படுத்தாத வரை நாம் மீண்டும் மீண்டும் மன்னிக்க வேண்டும். தேவ கிருபையால், எல்லாம் மன்னிக்க தகுந்தவை.
அதற்காக, மன்னிப்பு என்பது நடந்தது சரி என்று அர்த்தமல்ல. மற்றோர் நம்மைத் தொடர்ந்து காயப்படுத்த அனுமதிக்கிறோம் என்றும் அர்த்தமல்ல. மேலும் இது நேருக்கு நேர் உரையாடி மன்னிப்பதையும்குறிக்கவில்லை—நாம் மன்னிக்க வேண்டிய அந்த நபர் இன்னும் உயிருடன் இருக்க வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் அது அவர்களைப் பற்றியது அல்ல. இது நமக்கும் தேவனுக்கும் இடையே ஒரு அங்கீகாரம். இது அவரை நம் உள்ளத்தினுள்ளே அழைப்பது, இதனால் அவர் நம் இதயங்களை குணப்படுத்த முடியும்.
பழைய வருடத்தின் காயங்களை இந்த ஆண்டுக்கு எடுத்துக் வராதீர்கள். நீங்கள் மன்னிக்க வேண்டிய காரியங்கள் இருந்தால், சிறிது நேரம் ஜெபித்து அதை தேவனிடம் ஒப்படைக்கவும். அவருடைய உதவி உங்களுக்குத் தேவை என்றும் எடுக்க வேண்டிய எல்ல முடிவுகளுக்காக நீங்கள் அவரையே நம்புகிறீர்கள் என்றும் அவரிடம் சொல்லுங்கள்.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

ஒவ்வொரு புத்தாண்டிலும் ஒரு புதிய தொடக்கத்திற்கான புதிய வாய்ப்பு வருகிறது. நீங்கள் வைத்திருக்காத தீர்மானங்களுடன் தொடங்கும் மற்றொரு ஆண்டாக இது இருக்க வேண்டாம். இந்த 4-நாள் திட்டம் உங்களைப் பிரதிபலிப்பதில் வழிகாட்டி, புதிய கண்ணோட்டத்தை உங்களுக்கு வழங்கும், இதன்மூலம் இதை இன்னும் சிறந்த ஆண்டாக மாற்றலாம்.
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

வனாந்தர அதிசயம்

ஆண்டவருடைய கணக்கு

மனம் புதிதாகிறதினாலே ....தேவசித்தம் பகுத்தறியலாம் - வாங்க. ரோமர் :12-2 சகோதரன் சித்தார்த்தன்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

மேடைகள் vs தூண்கள்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்