வாழ்க்கை மாற்றப்பட்டது: புத்தாண்டில்மாதிரி

Living Changed: In the New Year

4 ல் 1 நாள்

நன்றியுடன் புத்தாண்டிற்குள் நுழையுங்கள்

புது வருடத்தை எப்படி தொடங்குவீர்கள்? குறிப்பாக கடந்த ஆண்டு கடினமாகவோ  ஏமாற்றமாகவோ இருந்தால், திரும்பிப் பாராமல் விடைபெறவும், நன்முறையில் புது துவக்கத்தை துவங்கவும் ஆசையாக இருக்கும். பழைய வருடம் என்னும் புத்தகத்தை மூடுவதற்கு முன், சற்று நேரம் எடுத்து கடந்த வருடத்தை அலசி ஆராயுங்கள், நடந்த நன்மைகளுக்காக நன்றி செலுத்துங்கள்.

சங்கீதம் 100 தேவனுடைய வாசல்களுக்குள்ளும், அவருடைய நீதி நிறைந்த வீட்டிற்குள் நன்றியறிதலுடனும், துதிகளுடனும் நுழைய ஊக்குவிக்கிறது—நமக்கு நல்ல சூழ்நிலை இருப்பதால் அல்ல, தேவன் நல்லவர் என்பதால். தேவனுடைய குணாதிசயங்களுக்காகவும், அவர் நமக்கு செய்த நண்மைகளுக்காகவும் துதித்துக் கொண்டே புத்தாண்டிற்குள் நுழைவதை விட வேறோரு சிறந்த புத்தாண்டுக் கொண்டாட்டம் இல்லை.

உங்கள் வீட்டிற்காக உங்கள் வாகனத்திற்காக நீங்கள் மிகவும் நேசிக்கின்ற உங்கள் வேலைக்காக தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். நீங்கள் சுவாசிக்கின்ற காற்றுக்காக, உங்களுடைய நல்ல உடல் நலத்திற்காக, உங்கள் நல்ல குடும்பத்திற்காக தேவனுக்கு நன்றி சொல்லுங்கள். அவருடைய வார்த்தைகள் மூலமாக அவர் உங்களுக்கு தரும் வழி நடத்துதலுக்காக, ஊக்கத்திற்காக தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். நம்மால் பெற முடியாத நமக்கு தகுதியற்ற நித்திய ஜீவனை அளிப்பதற்காக தமது ஒரே மகனாகிய இயோசுவை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்ததற்காக தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். 

நாம் தேவனுக்கு நன்றி செலுத்தும் போது அவருடைய வல்லமையும், நம்முடைய வாழ்வில் அவருடைய இருப்பையும், நம்முடைய வாழ்விற்காக அவர் தருபவற்றையும் அங்கீகரிக்கிறோம். இது கடினமான சூழ்நிலையை நாம் பார்க்கும் விதத்தையே மாற்றி விடும். நாம் தேவனை துதிக்க ஆரம்பித்தால், வாழ்வு கடினமாக இருந்தாலும் கூட அமர்ந்து புலம்புவது இயலாத காரியமாகும். நாம் தேவனுக்கு நன்றி செலுத்தும்போது, நமது உள்ளான வலியைக்  காணாமல், தேவனை மேல் நோக்கி பார்க்கத் தூண்டும். தேவனுக்கு நன்றி செலுத்துவது, நம் உள்நோக்கிய வலியிலிருந்து திரும்பவும் அவரைப் பார்க்கவும் நம்மைத் தூண்டுகிறது. நம் கண்கள் அவர் மீது கவனம் செலுத்தும்போது, ​​​​தேவன் எவ்வளவு பெரியவர் என்பது மாத்திரமே நமது கண்ணுக்குத் தெரியும். மேலும் நமது வலிமைமிக்க தேவனுக்கு நம்முடைய பிரச்சினைகள் எதுவும் பெரியதல்ல என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. 

தேவனைப் புகழ்வதற்கு முதலிடம் கொடுப்பதன் மூலம், நாம் தேவனை அணுகும் விதத்தை மாற்றுகிறோம். வேறொன்றைக் கேட்பதற்கு முன் நம்மிடம் உள்ளதற்கு நன்றி கூறுவது நம் இதயங்களை அவருடன் சீரமைக்க அனுமதிக்கிறது. இது பணிவான தோரணையைக் கண்டறிய உதவுகிறது மற்றும் நமது உரிமை உணர்வை நீக்குகிறது, இதனால் நாம் கேட்பது கிடைக்காவிட்டாலும், அவருடைய குணம், அவருடைய வாக்குறுதிகள் மற்றும் நம்மீது அவர் அன்பு ஆகியவற்றை நமக்கு நாமே நினைவுபடுத்துகிறோம். 

தேவனுக்கு நன்றி சொல்லி  ஜெபத்தை தொடங்குவது ஒரு விதமான சரணடைதல். இது நம்மைப் பற்றியது அல்ல, ஆனால் அது அவரைப் பற்றியது என்பது விருப்பமான ஒப்புதல் வாக்குமூலம். அது நமது கவனத்தை பரலோகத்தின் பக்கம் திருப்புகிறது மற்றும் நமக்கு தேவன் மீதுள்ள ஆழத்தை ஆழமாக்குகிறது.

கடந்த ஆண்டில் நடந்த நண்மைகளை நன்றியறிதலோடு பார்க்க சிறிது நேரம் ஒதுக்குங்கள். இன்றைய நாளில் நீங்கள்  நன்றி சொல்ல விரும்பும் ஒரு காரியத்தை தேவனிடம் சொல்லுங்கள், அது சிறியதாக இருந்தாலும் கூட. வாரந்தோறும் அல்லது தினசரி அதைச் செய்வது என உறுதியாக இருங்கள். உங்கள் அலைபேசியில் ஒரு குறிப்பில் உங்கள் பட்டியலை எழுதுங்கள், நன்றியுணர்வு இதழைத் தொடங்குங்கள் அல்லது சமூக ஊடகங்களில் இடுகையிடவும், இதன் மூலம் இந்த புத்தாண்டில் அவருடைய விசுவாசத்தை நீங்கள் எளிதாக அடையாளம் காணத் தொடங்குங்கள்.

இந்த திட்டத்தைப் பற்றி

Living Changed: In the New Year

ஒவ்வொரு புத்தாண்டிலும் ஒரு புதிய தொடக்கத்திற்கான புதிய வாய்ப்பு வருகிறது. நீங்கள் வைத்திருக்காத தீர்மானங்களுடன் தொடங்கும் மற்றொரு ஆண்டாக இது இருக்க வேண்டாம். இந்த 4-நாள் திட்டம் உங்களைப் பிரதிபலிப்பதில் வழிகாட்டி, புதிய கண்ணோட்டத்தை உங்களுக்கு வழங்கும், இதன்மூலம் இதை இன்னும் சிறந்த ஆண்டாக மாற்றலாம்.

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக மாற்றப்பட்ட பெண்கள் ஊழியத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து இந்த இணைப்பிற்கு செல்க: http://www.changedokc.com