வாழ்க்கை மாற்றப்பட்டது: புத்தாண்டில்மாதிரி

புது வருடம், புது முத்திரை
ஒவ்வொரு ஆண்டும், புத்தாண்டில் "புதியவராக" மாறுவதற்கான சமீபத்திய-நிலையில்லாத-உதவிக்குறிப்புகளின் வெள்ளத்தில் மூழ்கிவிடுகிறோம். நம்மைப் பற்றிய உலகத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற, ஒவ்வொரு ஜனவரி மாதமும் நம்மைப் புதுப்பித்துக் கொள்ள முயற்சிப்பது நம்மை சோர்வுக்குள்ளாக்கும். ஆனால் நமது முயற்சி வீண், ஏனெனில் நாம் எவ்னளவு மாறினாலும் இவ்வுலகை திருப்திபடுத்த முடியாது. மாறாக, மக்கள் நமக்கு புதிய முத்திரைகளை இடுகிறார்கள், அது நமது அடையாளத்தை மேலும் கேள்விக்குள்ளாக்குகிறது.
யாரும் முத்திரை குத்தப்படுவதை விரும்புவதில்லை. ஏனெனில் முத்திரைகள் பெரும்பாலும் மிகைப்படுத்தப்பட்டவை, கட்டுப்படுத்தப்பட்டவை மற்றும் துல்லியமற்றவை. அவை அனுமானங்களின் தொகுப்பு, அவை மிகவும் எதிர்மறையானவையாக இருக்கும், பெரும்பாலும் முத்திரைகள் நமது மோசமான குணங்கள் அல்லது மிகப்பெரிய தவறுகளையே முன்னிலைப்படுத்துகின்றன. வேறுபாடுகள், வளர்ச்சி அல்லது மீட்புக்கு முத்திரைகள் இடமளிக்காது.
நாம் அனைவரும் முத்திரைகளை சுமந்து திரிகிறோம், மற்றவர்கள் நமக்கிட்ட முத்திரைகளை சுமக்கிறோம், சில நேரங்களில் நமக்கு நாமே முத்திரையிட்டுக் கொள்கிறோம். அநேக நேரங்களில், அந்த முத்திரைகள் நம்மை கட்டுப்படுத்த அனுமதிக்கிறோம், நம்மை நாமே ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று தீர்மானிக்கிறோம். நம்மைப் பற்றிக் கூறும்போது இந்த சிறிய, ஆனால் குறிப்பிடத்தக்க வார்த்தையைச் சேர்ப்போம். அந்த வார்த்தை, அந்த முத்திரையால் நம்மை நாமே தகுதியற்றவர்களாக்கிவிடுவோம். அநேகர் இப்படியாக தங்களைப்பற்றி சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், அல்லது ஒருவேளை நீங்களே சொல்லியிருப்பீர்கள். "நான் ஒரு சாதாரண உயர்நிலைப் பள்ளி மாணவன்" அல்லது "நான் ஒரு நாடக பைத்தியம்."
உண்மை என்னவென்றால், உங்கள் வயதைக் கொண்டோ, உங்கள் வேலையைக் கொண்டோ, உங்கள் நோயறியும் அறிக்கையைக் கொண்டோ, உங்கள் திருமண நிலையைக் கொண்டோ, உங்கள் போராட்டத்தைக் கொண்டோ, உங்கள் கடந்த காலத்தைக் கொண்டோ உங்களை அடையாளமிட முடியாது. அந்த முத்திரைகள் உங்கள் சூழலை, உங்கள் காலத்தை, அல்லது உங்கள் பாடுகளை விவரிக்கலாம், ஆனால் உங்கள் உண்மையான அடையாளம் வேறெதிலும் அல்ல, தேவன் உங்களைப் பற்றி சொல்வதே உங்கள் அடையாளம்.
நீங்கள் அழகானவர், திறமையானவர் மற்றும் தகுதியானவர். நீங்கள் கிறிஸ்துவுக்குள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளீர்கள். உங்களுக்கு பயத்தின் ஆவி கொடுக்கப்படவில்லை, மாறாக பலமும், அன்பும், தெளிந்த புத்தியுள்ள ஆவியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. உங்களுக்குப் பலம் தரும் கிறிஸ்துவில் நீங்கள் ஒரு வெற்றியாளர். நீங்கள் ஒரு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கிறீர்கள். தேவன் உங்களை மிகவும் நேசிக்கிறார். நீங்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர். நீங்கள் தேவ சித்தத்தை நிறைவேற்ற போதுமான நபர்.
கடந்த ஆண்டு மற்றும் உங்கள் வாழ்வில் நீங்கள் ஏற்றுக் கொண்ட முத்திரைகளைப் பற்றி சிந்தியுங்கள். வேதத்தில் தேவன் உங்களைப் பற்றி கூறியதற்கு முரணான எத்தனை ஆடைகளை நீங்கள் அணிந்திருக்கிறீர்கள்? பிறர் கண்டுபிடித்தால் அவமானம், பாதுகாப்பில்லை என்று நீங்கள் பயப்படும் காரியம் உங்கள் வாழ்வில் எதுவென கண்டறியுங்கள். உங்களை அமிழ்த்தும் முத்திரைகள் எதுவென்று காணவும், அதை உதறிப்போடவும் தேவனிடம் உதவி கோருங்கள். வேதம் கூறுவதின்படி உங்கள் அடையாளத்தை சீரமைக்க தேவனுக்கு இடம் கொடுங்கள், அப்படிச் செய்வதால் நீங்கள் இவ்வருடத்திலும் இனி வரும் நாட்களிலும் தேவ பிள்ளையாக வாழலாம்.
இந்த திட்டத்தைப் பற்றி

ஒவ்வொரு புத்தாண்டிலும் ஒரு புதிய தொடக்கத்திற்கான புதிய வாய்ப்பு வருகிறது. நீங்கள் வைத்திருக்காத தீர்மானங்களுடன் தொடங்கும் மற்றொரு ஆண்டாக இது இருக்க வேண்டாம். இந்த 4-நாள் திட்டம் உங்களைப் பிரதிபலிப்பதில் வழிகாட்டி, புதிய கண்ணோட்டத்தை உங்களுக்கு வழங்கும், இதன்மூலம் இதை இன்னும் சிறந்த ஆண்டாக மாற்றலாம்.
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

வனாந்தர அதிசயம்

ஆண்டவருடைய கணக்கு

மனம் புதிதாகிறதினாலே ....தேவசித்தம் பகுத்தறியலாம் - வாங்க. ரோமர் :12-2 சகோதரன் சித்தார்த்தன்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

மேடைகள் vs தூண்கள்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்
