திட்ட விவரம்

கூட்டாக: ஒன்றாக வாழ்க்கையை கண்டறிவதுமாதிரி

Collective: Finding Life Together

7 ல் 7 நாள்

நீங்கள் எப்போது ஒரு பெரியவரைப் போல் உணர்கிறீர்கள் அல்லது உங்கள் வாழ்க்கையை ஒன்றிணைக்கிறீர்கள்?



இந்த வேதாகம திட்டத்தின் கடைசி நாளினை அடைந்தும், பதில்களை விட இன்னும் அதிக கேள்விகள் உங்களிடம் இருக்கலாம். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்: அது சரியானதுதான்.



நீங்கள் ஒரு வயது வந்தவரைப் போல ஒருபோதும் உணரத் தொடங்க மாட்டீர்கள், உங்களிடம் எல்லா பதில்களும் இருப்பதாக நீங்கள் ஒருபோதும் உணர மாட்டீர்கள். ஏனென்றால் தேவன் நம்மை வடிவமைத்ததே அதுபோலத்தான். நம்மிடம் எல்லா பதில்களும் இருந்தால், நமக்கு தேவன் தேவையில்லை என்றாகிவிடும்.



சங்கீதம் 119:105 சொல்கிறது என்னவென்றால் அவருடைய வசனம் நம் கால்களுக்குத் தீபமும், நம் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. இது ஒரு அழகான சித்தரிப்பு. அடிப்படையில் அந்த வசனம், அடுத்த சரியான காரியத்தைச் செய்ய போதுமான தகவல்களை தேவன் நமக்குத் தருகிறார் என்று நமக்கு சொல்கிறது. ஆனால் முழு படத்தையும் நாம் காண்பதில்லை. அதுதான் முக்கியம். ஏனென்றால் அடுத்தது என்னவென்று நமக்கு தெரியாதபோது, ​​தேவனை நம்புவதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.



நம் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நாம் கருதுகிறோமோ அவ்வறே நாம் தேவனிடம் வரலாம், ஆனால் தேவனின் நோக்கங்களோ நாம் கேட்கபதிலும், சிந்திப்பதிலும் கற்பனை செய்வதிலும் மேலான, மிகப் பெரிய நோக்கங்கள் என்பதை அறிந்து நாம் நமக்கான திட்டங்களை திறந்த கைகளால் வைத்திருக்கிறோம்.



எனவே உங்கள் வாழ்க்கையை ஒன்றிணைப்பது பற்றி அதிகம் அழுத்தமடைய வேண்டாம். உங்கள் குணத்தின் உண்மையான குறி உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் பெரிய விஷயம் அல்ல. அது உங்கள் அயலாரை நீங்கள் எவ்வளவு நன்றாக நேசிக்கிறீர்கள் என்பதுதான். தேவன் உங்களுக்குள் கொடுத்திருக்கும் பரிசுகளைப் உங்கள் முன் இருக்கும் உலகத்தை மாற்றப் பயன்படுத்துங்கள்.



உங்களுக்குத் தெரியாத விஷயங்களை குறித்து அதிகமாக யோசிக்க வேண்டாம். 1 கொரிந்தியர் 8:1 அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும் என்று நினைவூட்டுகிறது. இயேசுவின் கடைசி வார்த்தைகளில் சில, நாம் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்று கடவுளிடம் அவர் ஜெபித்ததாகும். ஒருவருக்கொருவர் காட்டும் அன்பின் முக்கியத்துவத்துடன் ஒப்பிடுகையில் நமது எண்ண கருத்துக்கள் வெளிரானவை என்று அது நமக்குச் சொல்கிறது.



வயது வந்தவராக இருப்பது ஏதோ ஒரு இடத்தை அடைவது அல்ல. இது கடவுளையும் உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களையும் நம்புவதற்கு கற்றுக்கொள்வதை குறிப்பது. கடவுளின் வார்த்தையில் நிலைத்து இருங்கள். தேவன் உங்களை அழைக்கும் அடுத்த சரியான காரியத்தைச் செய்யுங்கள். உங்களுக்கு முன்னால் இருக்கும் நபரை நேசியுங்கள். நீங்கள் அதை செய்யும்போது? இது உங்களை பலப்படுத்தும், மேலும் அது தேவாலயத்தையும் பலப்படுத்தும்.



கருத்தில் கொள்ளுங்கள்: கடவுளையும் உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களையும் அதிகம் நம்புவதற்கு நீங்கள் கற்றுக்கொள்ளக்கூடிய சில வழிகள் யாவை?



ஜெபம்: தேவனே, நீர் எனக்காக வைத்திருக்கும் திட்டங்களுக்கு நன்றி. நான் கேட்கவோ, சிந்திக்கவோ, கற்பனை செய்யவோ முடியாத அளவுக்கு உமது நோக்கங்கள் மேலானவை என்று நம்பி, திறந்த கைகளால் எனது திட்டங்களை வைக்க எனக்கு உதவுங்கள். சரியான நபர்கள் என்னை சூழ்ந்துகொள்ள வையுங்கள். நீர் என்னை எதற்காக அழைத்தீரோ அந்த அழைப்பை நான் நல்ல வண்ணமே செய்ய எனக்கு உதவும். ஒவ்வொரு நாளும் உம்மையும் மற்றவர்களையும் அதிகமாக நேசிக்க எனக்கு உதவும். இயேசுவின் பெயரில். ஆமென்.



finds.life இல் மேலும் வயதுவந்தவர்களுக்கான உதவிக்குறிப்புகளைக் கண்டறியவும்.


நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

Collective: Finding Life Together

நீங்கள் 18 வயதை அடைந்ததும், உங்கள் வாழ்க்கையின் நோக்கத்தை நீங்கள் தீர்மானிக்க வேண்டும் என்ற உணர்வு வருகிறது. ஆனால் முடியவில்லை என்றால் என்ன செய்வது? நீங்கள் எங்கே இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்களோ அங்கே இப்பொழுத...

More

இந்தத் திட்டத்தை வழங்கிய LifeChurchக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு https://www.life.church/ஐ பார்வையிடுங்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்