திட்ட விவரம்

கூட்டாக: ஒன்றாக வாழ்க்கையை கண்டறிவதுமாதிரி

Collective: Finding Life Together

7 ல் 5 நாள்

வாழ்க்கையில் உங்கள் நோக்கத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது?



நாம் அடிக்கடி குழந்தைகளிடம் கேட்பது என்னவென்றால், “நீ வளரும்போது என்னவாக இருக்க விரும்புகிறாய்?” என்று நீங்கள் இதைப் பற்றி சிந்தித்தால், ​​5 வயது குழந்தையிடம் கேட்பதற்கு இது ஒரு தீவிரமான கேள்வி. ஆனால் நீங்கள் 18 வயதை எட்டும்போது, ​​திடீரென்று, அதை கண்டுபிடிக்க கடுமையான அழுத்தம் உள்ளது. எனவே பெரிய கேள்வி என்னவென்றால் - நான் என் வாழ்க்கையை கொண்டு என்ன செய்ய வேண்டும்?என்பதே



அதிர்ஷ்டவசமாக, பின்பற்ற ஒரு கட்டமைப்பை இயேசு நமக்குத் தருகிறார். முதல் நாளில் நாம் பேசியது போல, வாழ்க்கையில் நம்முடைய முக்கிய நோக்கம் தேவனை நேசிப்பதும் மக்களை நேசிப்பதும் ஆகும். இது எளிமையானதாகத் தெரிகிறது, ஆனால் வெளியே வாழ்வது கடினம்.



மக்களை நேசிப்பது என்பது அவர்கள் குழப்பமடையும்போது, ​​அவர்கள் உங்களை மோசமாக நடத்தும்போது, ​​மேலும் அவர்கள் உங்களை கோபமூட்டும்போதும் அவர்களை நேசிப்பதாகும். இதன் பொருள் ஒவ்வொரு முடிவும்— இந்த முடிவு என்னைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்கு அன்பைக் காட்டுகிறதா? எனும் கண்ணாடியில் வடிகட்டப்படுகிறது என்பதாகும்.



இயேசு தம்முடைய சீஷர்களை விட்டு சென்றபோது நம்முடைய நோக்கம் குறித்து இன்னும் தெளிவுபடுத்தினார். அவருடைய கடைசி அறிவுறுத்தலில், உலகமெங்கும் செல்வதும், சீஷர்களை உருவாக்குவதும், கடவுளுக்குக் கீழ்ப்படிய கற்றுக்கொடுப்பதும் அவர் நமக்கான பணியாக முன்வைத்தார். ஒவ்வொரு அடியிலும் நம்முடன் இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.



இயேசுவைப் போல அன்பு செலுத்துவதன் மூலம் மக்களை இயேசுவிடம் அழைத்துச் செல்வதே நமது நோக்கம். மீண்டும், எளிமையானதாகத் தெரிகிறது, ஆனால் எளிதானது அல்ல. நீங்கள் எங்கு சென்றாலும் பரவாயில்லை, அதுவே உங்கள் நோக்கம். நீங்கள் வியாபாரத்திலிருந்தாலும் சரி அல்லது தேநீர் கடையில் வேலை செய்கிறீர்கள் என்றாலும் சரி, உங்களைச் சுற்றியுள்ளவர்களை நேசிப்பதும், இயேசுவின் நற்செய்தியைப் பற்றி அவர்களிடம் சொல்வதும் உங்கள் பணியாகும்.



இதையும் அறிந்து கொள்ளுங்கள்—முக்கியமான ஒன்றைச் செய்ய நீங்கள் சாதனைகள் எதையும் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் ஒரு தலைமை நிர்வாக அதிகாரியாகவோ, மிஷனரி ஊழியராகவோ அல்லது ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்த முயற்சியெடுப்பவராக இருக்க வேண்டியதில்லை. அந்த விஷயங்கள் அனைத்தும் மிகச் சிறந்தவை, ஆனால் நம் அனைவரும் நமக்கு முன்பாக உள்ள மக்களை நேசிப்பதன் மூலம் ஒவ்வொரு நாளும் பெரிய காரியங்களைச் செய்ய வாய்ப்பு உள்ளது.



எனவே அழுத்தத்தை தள்ளிப்போடுங்கள். நீங்களாகவே ஏற்படுத்தி வைத்துள்ள தேவையற்ற எதிர்பார்ப்புகளை முறித்துக் கொள்ளுங்கள். கடவுள் உங்களுடன் இருக்கிறார், உங்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார், மேலும் அவர் உங்களுக்காக வைத்திருக்கும் பாதையில் உங்களை வழிநடத்துகிறார்.



இந்த உண்மையை உங்களுக்கு முன்னால் உள்ள பெரிய முடிவுகளுடன் எவ்வாறு சரிசெய்வது என்று இன்னும் யோசிக்கிறீர்களா?



நீங்கள் தேவனை நேசிக்கலாம், மற்றவர்களை நேசிக்கலாம், நீங்கள் எங்கு சென்றாலும் சீடர்களை உருவாக்கலாம் என்ற எண்ணத்துடன் உங்கள் நோக்கத்தை நீங்கள் எவ்வாறு வாழ முடியும் என்பதை தீர்மானிக்க உதவும் மூன்று கேள்விகள் இங்கே உள்ளன.



1. எந்த கடந்தகால அனுபவங்கள் உங்களை உருவாக்கியுள்ளன? உங்கள் கடந்த காலம் உங்களை வரையறுக்கமுடியாது, ஆனால் அது உங்களுக்கு பலவற்றை தெரிவிக்கும். நீங்கள் மற்றவர்களுக்கு உதவ விரும்பும் காரியம் ஒன்றை உங்கள் வாழ்வில் சந்தித்திருக்கிறீர்களா? நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பதை தீர்மானிக்க இது உதவும்.



2. உங்களுக்கு அழைக்கப்பட்ட உணர்வு இருக்கிறதா? உங்களில் நீதியான கோபத்தை ஏற்படுத்துவது எது? எடுத்துக்காட்டாக, பாதுகாப்பற்ற சூழ்நிலைகளில் குழந்தைகளைப் பாதுகாப்பதில் தீவிரமான ஆர்வத்தை நீங்கள் உணரலாம். நோய்வாய்ப்பட்டவர்களைப் பராமரிப்பதில் நீங்கள் எப்போதும் ஈர்க்கப்பட்டிருக்கலாம். எதுவாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைப் பாதை உங்களுக்கு தேவன் அக்கறை செலுத்த உந்துவதை செய்ய உதவுமா என்பதைப் பற்றி சிந்தியுங்கள்.



3. நீங்கள் இயற்கையாகவே எதைப் பரிசாகப் பெற்றுள்ளீர்கள்? தேவனின் மகிமைக்காக நம் அனைவரும் வேவ்வேறு பரிசுகளை பெற்று இருக்கிறோம். உங்களுக்கு இயல்பாகவே என்ன விஷயங்கள் செய்யவருகின்றன? என்ன செய்வது என்பதை தீர்மானிக்க இது உங்களுக்கு உதவக்கூடும்.



கருத்தில் கொள்ளுங்கள்: மேலே உள்ள கேள்விகளின் மூலம் சிந்திக்க நேரத்தை செலவிடுங்கள். உங்கள் பதில்களைப் பற்றி ஜெபியுங்கள், உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் அவைகளை பேசுங்கள். அந்த கேள்விகளின் இனைப்படுதல் உங்கள் நோக்கம் குறித்து தெளிவுபடுத்த முடியுமா என்று பாருங்கள்.



ஜெபம்: தேவனே, எங்களுக்கு எல்லா வித்தியாசமான பரிசுகளையும் திறன்களையும் வழங்கியதற்கு நன்றி. உம்மையும் என்னைச் சுற்றியுள்ள மற்றவர்களையும் அதிகமாக நேசிக்க எனக்கு உதவுங்கள். பலரை சீஷராக்க எனக்கு உதவும். நான் உமக்கு சிறந்த சேவையைச் செய்யக்கூடிய இடம் குறித்து எனக்கு தெளிவுப்டுத்தும், எனது அடுத்த படி என்ன என்பதைக் காட்டும். இயேசுவின் பெயரில். ஆமென்.


நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

Collective: Finding Life Together

நீங்கள் 18 வயதை அடைந்ததும், உங்கள் வாழ்க்கையின் நோக்கத்தை நீங்கள் தீர்மானிக்க வேண்டும் என்ற உணர்வு வருகிறது. ஆனால் முடியவில்லை என்றால் என்ன செய்வது? நீங்கள் எங்கே இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்களோ அங்கே இப்பொழுத...

More

இந்தத் திட்டத்தை வழங்கிய LifeChurchக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு https://www.life.church/ஐ பார்வையிடுங்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்