திட்ட விவரம்

கூட்டாக: ஒன்றாக வாழ்க்கையை கண்டறிவதுமாதிரி

Collective: Finding Life Together

7 ல் 3 நாள்

நண்பர்களை நான் எவ்வாறு கண்டுபிடிப்பது?



வாழ்க்கையில் நமக்கான திசையைக் கண்டுபிடிப்பதற்கு நண்பர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் முக்கியம் என நாம் ஒரு கருத்தை கொண்டு உள்ளோம். ஆனால் வயது வந்தவர்களாக நண்பர்களை உருவாக்குவதில் சங்கோஜமாகவும் விசித்திரமாகவும் உணரலாம். எனவே, உங்களுக்கான நண்பர்களை நீங்கள் எவ்வாறு கண்டுபிடிப்பீர்கள்?



முதலில், தேவன் தருவதில் உண்மையுள்ளவர் என்பதை அறிந்து கொள்ளுங்கள். 1 யோவான் 5:14 சொல்லுகிறது "நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரை பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்". நமது வாழ்க்கையில் சக மனிதர்களை கொண்டிருப்பது தேவன் நமக்காக கொண்டிருக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஆகவே, தேவனிடம் நாம் மனிதர்களைகொண்டுவர வேண்டுமென்று ஜெபிக்கும்போது, ​​அவர் அதை செய்வார் என்று நாம் விசுவாசிக்கலாம்.



ஒரு நல்ல பெற்றோர் தங்கள் குழந்தைக்கு மோசமான பரிசுகளை வழங்காதது போல, நாம் அவரிடம் ஏதாவது கேட்கும்போது, ​​அவர் நம்மை ஏமாற்றுவதில்லை என்று இயேசு கூறுகிறார். எனவே சரியான நபர்கள் சரியான நேரத்தில் உங்கள் வாழ்க்கையில் வரவேண்டுமென பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் ஜெபிக்கும்போது, ​​பரிசுத்த ஆவியானவர் உங்களைச் செய்யத் தூண்டுவதைக் கவனியுங்கள். ஒருவேளை பணியிடத்தில் யாராவது ஒரு நாள் உங்களை மதிய உணவுக்கு அழைக்கலாம். ஒருவேளை உங்கள் தேவாலயத்தில் சேவைசெய்யும் ஒருவரை தெரிந்துகொள்வதாக இருக்கலாம்.



ஆனால், இது முக்கியமான விஷயம். நண்பர்களைக் கண்டுபிடிப்பதற்கு உங்களின் வசதியான நிலைக்கு வெளியே ஒரு படி எடுப்பது அவசியம் மற்றும் நிராகரிப்பு சில நேரங்களில் தவிர்க்க முடியாதது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் வாழ்க்கையில் உங்களுக்கான இடத்தை உண்மையிலேயே கண்டுபிடிக்க, நீங்கள் ஒரு துணிவான முயற்சி எடுக்க வேண்டும். அது எவ்வாறு செல்லும் அல்லது உங்களை யார் ஏற்றுக் கொள்வார் என்று தெரியாமலேயே நீங்கள் அப்பதையில் செல்ல வேண்டும். ஏனெனில் நிராகரிக்கப்படும் பயத்தை எதிர்கொள்வது உறவின் முக்கிய தேவையாகும்.



எனவே, நீங்கள் அணுக வேண்டிய ஒரு நபர் இருப்பதாக நீங்கள் உணரும்போது, ​​அதைச் செய்யுங்கள்! சமூகத்திற்கான அவர்களின் பிரார்த்தனைக்கு நீங்கள் பதிலாக கூட இருக்கலாம் என்று உங்களுக்குத் தெரியாது.



கவனியுங்கள்: உங்கள் வாழ்க்கையில் தேவன் வைத்திருக்கும் சில மக்கள் யார்? அவர்களுடன் நட்பை உருவாக்க உங்கள் வசதியான நிலைக்கு வெளியே எப்படி ஒரு படி எடுக்கலாம்?



ஜெபம்: அப்பா பிதாவே, எங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் கவனித்துக்கொள்ளும் ஒரு நல்ல தந்தையாக இருப்பதற்கு நன்றி. இன்று, மனிதர்களை என் வாழ்க்கையில் கொண்டு வரும்படி நான் உம்மிடம் கேட்டுக்கொள்கிறேன். நிராகரிப்பின் பயத்தை சமாளிக்கவும் உண்மையான தொடர்பைக் கண்டறியவும் எனக்கு தைரியம் கொடுத்தருளும். இந்த வாரம் என் வாழ்க்கையில் ஒருவரிடம் பேசி நட்புறவு பெற எனக்கு தைரியம் கொடுங்கள். இயேசுவின் பெயரில். ஆமென்.


நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Collective: Finding Life Together

நீங்கள் 18 வயதை அடைந்ததும், உங்கள் வாழ்க்கையின் நோக்கத்தை நீங்கள் தீர்மானிக்க வேண்டும் என்ற உணர்வு வருகிறது. ஆனால் முடியவில்லை என்றால் என்ன செய்வது? நீங்கள் எங்கே இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்களோ அங்கே இப்பொழுத...

More

இந்தத் திட்டத்தை வழங்கிய LifeChurchக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு https://www.life.church/ஐ பார்வையிடுங்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்