திட்ட விவரம்

கூட்டாக: ஒன்றாக வாழ்க்கையை கண்டறிவதுமாதிரி

Collective: Finding Life Together

7 ல் 4 நாள்

மற்றவர்கள் என்னை விரும்புகிறார்களா? நானாவது என்னை விரும்புகிறேனா?



சமூக ஊடகங்கள் ஒப்பிடும் கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது. இது ஒருபோதும் தூங்காத டிஜிட்டல் கணக்கீடு போன்றது. நமது புகைப்படங்கள் வேறொருவருடையதை விட எத்தனை விருப்பங்களைப் பெற்றன என்பதை ஒப்பிட்டுப் பார்க்கிறோம். நண்பர்கள் குழு தாங்கள் வெளியில் சுற்றும் ஒரு படத்தை இடுகையிடுவதை நாம் கண்டு— நான் ஏன் அழைக்கப்படவில்லை? நான் ஏன் தனியாக உணர்கிறேன்? என்று யோசிக்கிறோம்.



இங்கே நாம் உணர வேண்டியது என்னவென்றால்: டிஜிட்டல் பெரும்பாலும் வஞ்சகமாக இருக்கிறது. நாம் நமது முழு வாழ்க்கையையும் வேறொருவரின் நொடிப்புகைப்படத்துடன் ஒப்பிடுகிறோம். ஒரு வடிகட்டப்பட்ட ஊட்டமானது, திரைக்குப் பின்னால் நாம் போராடி கொண்டிருக்கும்போது மற்றவர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையை ஒன்றாக்கி வைத்திருக்கிறார்கள் என்று நினைக்க தூண்டும். உண்மையில், நாம் படும் அதே போராட்டத்தை அவர்களும் போராடுகிறார்கள். நாம் அந்த பகுதியைப் பார்ப்பதேயில்லை.



அதனால்தான் ஒப்பிடுவதையும் போட்டியிடுவதையும் நிறுத்த வேண்டும். மத்தேயு 9: 36 ல் இயேசு இதைப் பற்றி நிறைய கற்றுக்கொடுத்திருக்கிறார். அந்த கதையில், இயேசு ஒரு கூட்டத்தைக் கண்டு, அவர்கள் மீது ஆழ்ந்த இரக்கத்தை உணர்ந்தார்.



இப்போது நேர்மையானதற்கு வருவோம். ஒரு மக்கள் கூட்டத்தை நீங்கள் காணும்போது—உங்களுக்கு இரக்கம் இருக்கிறதா அல்லது போட்டியை உணர்கிறீர்களா?



நாம் போட்டியைக் கண்டால், நமக்கு இரக்கம் இருக்காது, நமக்கு இரக்கம் இல்லையென்றால், நாம் இணைப்பை இழப்போம்.



ஆகவே, இந்த முடிவற்ற ஒப்பீட்டு சுழற்சியை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக கிறிஸ்துவில் நம்முடைய அடையாளத்தைத் தழுவுவதைத் தேர்வுசெய்வோம். அது எப்படி இருக்கும்?



உங்கள் அடையாளம் உங்கள் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டது அல்ல, பரிசுத்த ஆவியின் நிரப்புதலை அடிப்படையாக கொண்டது. நீங்கள் இயேசுவைப் பின்தொடரும்போது, ​​மரித்தோரிலிருந்து அவரை எழுப்பிய அதே ஆவியானவர் உங்களுக்குள் இருப்பார். ஆகவே, நீங்கள் போதாதவராக நினைக்கும் நாட்களில், உணர்வுகள் மாறுகின்றன என்பதை நீங்கள் காணலாம், ஆனால் நம் கடவுள் நேற்றும், இன்றும், என்றென்றும் மாறாத ஒரே தேவனாகவே இருக்கிறார்.மற்றும் இயேசு நமக்காகச் செய்ததன் காரணமாக, தேவன் உங்கள் பாவத்தைக் காணவில்லை, அவர் தம்முடைய குமாரனையே பார்க்கிறார்.



நீங்கள் தேவ சாயலில் உருவாக்கப்பட்டுள்ளீர்கள். பரிசுத்த ஆவியானவரை உள்ளே சுமக்கிறீர்கள். உங்கள் மோசமான நாட்களிலும் சரி உங்கள் சிறந்த நாட்களிலும் சரி, தேவன் உங்களை நேசிக்கிறார், அவர் உங்களுக்காக இருக்கிறார், அவர் உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். நீங்கள் அதை உணராதபோதும், ​​தேவனின் வார்த்தையை படியுங்கள். நீங்கள் யார் என்று தேவன் என்ன சொல்கிறார் என்பதை உங்களுக்கு நினைவூட்டுவதற்காக வேதத்தில் வேரூன்றிய தினசரி உறுதிமொழிகளைச் செய்யுங்கள்.



நீங்கள் யார் என்று உங்களுக்குத் தெரிந்தவுடன், ஒப்பிடுவதை நிறுத்திவிட்டு, தேவன் நம் ஒவ்வொருவரையும் உருவாக்கிய தனித்துவமான வழிகளைக் கொண்டாடத் தொடங்கலாம்.



கருத்தில் கொள்ளுங்கள்: உங்கள் வாழ்க்கையில் மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்தி, கொண்டாடத் தொடங்குவது எப்படி? நீங்கள் யார் என்று தேவன் சொல்கிறாரோ அதை உண்மையிலேயே நம்பத் தொடங்க நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?



ஜெபம்: தேவனே, இயேசுவுக்காக நன்றி. உமது கருணைக்கும் உமது அன்பிற்கும் நன்றி. என்னைப் பற்றி நீர் சொல்வதை அறிந்து விசுவாசத்தை ஆரம்பிக்க எனக்கு உதவும். என்னை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்தி, என்னைச் சுற்றியுள்ளவர்களைக் கொண்டாடத் தொடங்க உதவும். எனக்கும் என்னைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்கும் இரக்கம் கொடுங்கள். இயேசுவின் பெயரில். ஆமென்.


நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

Collective: Finding Life Together

நீங்கள் 18 வயதை அடைந்ததும், உங்கள் வாழ்க்கையின் நோக்கத்தை நீங்கள் தீர்மானிக்க வேண்டும் என்ற உணர்வு வருகிறது. ஆனால் முடியவில்லை என்றால் என்ன செய்வது? நீங்கள் எங்கே இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்களோ அங்கே இப்பொழுத...

More

இந்தத் திட்டத்தை வழங்கிய LifeChurchக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு https://www.life.church/ஐ பார்வையிடுங்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்