திட்ட விவரம்

நோக்கத்திற்கு இணங்க நிற்பதுமாதிரி

Step into Purpose

5 ல் 4 நாள்

விசுவாசத்தில் விடாமுயற்சி



நமக்கு முன்பாக சென்றிருக்கிற அநேக வியக்கத்தக்க தலைவர்கள் உள்ளனர், நாம் காணும் உலகத்தை வடிவமைக்க வித்தியாசமாக தங்கள் நோக்கத்தின் பாதையில் நடந்தவர்கள்.



சிலருடைய பெயர்கள் நெல்சன் மண்டேலா, அன்னை தெரெஸ்ஸா, பெதானி ஹாமில்டன் (தன் இயலாமையிலும் தன் அழைப்பையும் நோக்கத்தையும் விட்டுக்கொடுக்காதவர்).



நாம் அனைவரும் இந்த தலைசிறந்த தலைவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும், அவர்களை பாராட்ட தக்கவர்களாக உருவாக்கிய அநேக குணங்கள் அவர்களிடம் உண்டு. ஆனால், இந்த மூன்று நபர்கள் கொண்டிருந்த ஒரு பண்பில் நான் உங்கள் கவனத்தை கொண்டு செல்ல விரும்புகிறேன், அது 'நோக்கத்தில் வளர' செய்ய வைக்கும் ஒரு குணம், -அது விடாமுயற்சி விசுவாசத்தில்!



விடாமுயற்சி நாம் வாழும் இந்த எதிர்மறையான உலகில் மிக கடினமானது - விசேஷமாக கிறிஸ்துவர்களுக்கு தேவனை நம்புகிறவர்களுக்கும். ஆனால் தேவன் உங்கள் பக்கத்தில் இருக்கிறார் என்பதில் மாத்திரம் நீங்கள் நிச்சயமாக இருக்கலாம்! நம்முடைய சிருஷ்டிகர் உன்னை அழைத்து உன்னை ஒரு திட்டத்திற்காக அழைத்திருக்கும்போது, நீ அதை அடையவேண்டும் என்பதில் அவர் நிச்சயமாக இருக்கிறார். இப்போது அது உன்னால் கூடாததாக தோன்றலாம்...உண்மையிலும் அது உன்னால் கூடாததுதான்! ஆனால் எரேமியா தீர்க்கதரிசி எவ்வாறு உருவாகி தேவன் எவ்வாறு அவரை அழைத்தார் என்று நான் உங்களிடம் சொல்லுகிறேன்.



Through எரேமியா 1 அதிகாரம் (சுருக்கமாக), தேவன் எரேமியாவை தன் ஜனத்திற்கு மட்டும் அல்ல எல்லா தேசங்களுக்கும் தீர்க்கதரிசியாக இருக்க அழைப்பதை பார்க்கிறோம் - பயமுறுத்தும் வேலை அல்லவா? ஆனால் தேவன் எரேமியாவை அவர் நோக்கத்திற்கு ஆயத்தப்படுத்த எல்லாவற்றையும் செய்கிறதை பார்க்கிறோம் (எரேமியா 1:9-14). உண்மையில், எரேமியாவிற்கு பெரிய நோக்கம் இருந்தது, ஆனால் தேவன் எரேமியாவை விட்டுவிடுவதும் இல்லை கைவிடுவதும் இல்லை என்று வாக்களிக்கிறார்.



இந்த செய்தியிலிருந்து தேவன் உன் நோக்கத்தை அடைய தேவன் நிச்சயித்திருக்கிறார் என்று மன உறுதியை பெற்றுக்கொள்ளலாம், கடினமான நோக்கமாக இருந்தாலும் சரி. எரேமியாவின் ஜீவியத்தில் தேவனோடு வெல்ல இருந்த விடாமுயற்சியை நாம் குறிப்பு எடுக்கலாம்! தேவன் நியமித்ததை சத்துரு தொட முடியாது, நாம் அவனுக்கு அனுமதி கொடுத்தால் ஒழிய. தேவன் நீ அவர் நோக்கத்தில் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறார் ஏனென்றால் அவர் நம்புகிறார் உன்னில், அவர் அந்த நோக்கத்திற்காக தான் உன்னை சிருஷ்டித்திருக்கிறார். அவர் உன்னோடு இருக்கிறார், உனக்கு பரலோகத்தின் உதவி உள்ளது! ஆகவே உன் ஜீவியத்தில் விடாமுயற்சியுடன் போராடு, சந்துருவின் பொய்களையும் அதைரியத்தையும் கேட்காதே.. விடாமுயற்சிதான் தேவன் உன் ஜீவியத்திற்கு கொடுத்திருக்கும் நோக்கத்தை அடைய ஒரே வழி!



இதை வாசிக்கும் நீ இந்த உலகத்தின் தேவைகளுக்கு ஒரு தலைசிறந்த தலைவனாக மாறப்போகிறாய், ஆகவே எரேமியாவுக்கு தேவன் கொடுத்த வாக்கை முழு இருதயத்தோடு கேளு - "'அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” (ஏரேமியா 1:19)






அஷ்லீ மேயர் எழுதியது


நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

Step into Purpose

என்னுடைய நோக்கம் என்ன? நான் என் ஜீவனை கொண்டு என்ன செய்ய எதிர்பார்க்கப்படுகிறது? எனக்காக தேவனுடைய திட்டம் என்ன? இவைகளெல்லாம் நாம் நம் ஜீவியத்தில் எதோ ஒரு வேளையில் கேட்கும் கேள்விகள். உங்கள் நோக்கத்தை குறித்து இந்த திட்டத்...

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக C3 சபை சிட்னி-க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய: https://www.c3college.com க்கு செல்லவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்